Sunday 1 November 2020

1973 ல் கோவையில் நடை பெற்ற வெள்ளி விழா மாநாட்டில் பொதுச் செயலர் படைத்த மாநாட்டு அறிக்கை ஒரு காலப் பெட்டகம் . 25 ஆண்டுகளுக்கு முந்தைய நமது நிலையையும் , இயக்க வளர்ச்சியையும் ஒப்பிட்டு நோக்கும் . காலக் கண்ணாடி , அது மட்டுமல்ல . அன்றைய கோரிக்கை கல்வி வாரியம் அன்றைய கொள்கை அரசியல் சார்பற்றது . 25 ஆண்டுகளுக்கு முன்பே எத் தனை தெளிவான கண்ணோட்டத்துடன் பொதுச் செயலர் செ.மு. அறிக் கை படைத்துள்ளார் என்பது வரலாறு ! இதோ அந்த அறிக்கை ! நீங்களும் படித்து மகிழ மறுபதிப்பாகிறது

மாநில பொதுச் செயலாளர் அளித்த வெள்ளி விழா மாநாட்டு அறிக்கை

 1973 ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 21 ஆம் நாள் கோவை நகரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில வெள்ளி விழா மாநாட்டில் பொதுச் செயலரால் படைக்கப் பட்ட அறிக்கை , இன்று தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 25 ஆண்டுகளைக் கடந்து விட்டது . இவ்வியக்கம் தமிழ்நாடெங்கிலும் அங்கிங்கெனாது எங்கும் நிறைந்து காணப்படும் வளர்ச்சி பெற்ற மாபெரும் அமைப்பாகத் திகழ்கின்றது . ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி உயர்ந்து நிற்கிறது . இதைக்கண்டு பூரிப்போரும் உண்டு , பொறாமை கொள்வோரும் உண்டு . இவ்வியக்கத்திற்கென உண்டாகி விட்ட 25 ஆண்டு கால வரலாறும் வரலாற்றுத் திருப்புமுனைகளும் , அதன் பயனாய் கேட்பாரற்று , மதிப்பாரற்று கிடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் சமுதாயம் பெற்ற நன்மைகளும் ஏராளம். தொடக்கப் பள்ளி ஆசிரியர் இனம் இவ்வியக்கத்தைப் பேணிக் காத்து அதன் பயனைப் பெற்றும் வருகிறது . தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளியில் பணி புரியும் எந்த ஆசிரியனும் இவ்வியக்கத்தை அறியாமலில்லை , நான்கு சுவருக்குள்ளே இந்த நாட்டின் எதிர்காலத்தை , தலை விதியை ப் படைக்க வல்லது இச்சமுதாயம் . ஜெர்மானிய மக்களெல்லாம் தன்னைப் பாராட்டத்திட்டம் வகுத்த இட்லர் பயன்படுத்தியது ஆசிரியர்களைத்தான் . இதன் மூலம் தன் நாட்டை வளர்த்து உலகம் கண்டு அஞ்சிய தளபதியாய்த் திகழ்ந்தான் . ஏன் மறைந்த மாமேதை அறிஞர் அண்ணா சொன்னார் , மாநில ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய பின் , ஆசிரியர்கள் தான் இந்த ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படை வகுத்தவர்கள் . நான் என்றும் மறவேன் அவர்களை உள்ளத்திலே சுமந்து ஓர் உருவம் கோட்டையில் உலாவி வரும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றார்கள் . இவையெல்லாம் சிறப்புகள் . இவற்றைப் பேசுவதால் பயன் ஏதும் ஆகப் போவதில்லை . இவைகள் எல்லாம் உண்மைகள் என்பதற்காகவே குறிப்பிடுகிறேன் இயக்கத் தோற்றத்தையும் 25 ஆண்டு கால சாதனையின் பட்டியலையும் ஓரளவு தந்து விட்டு , இன்றைய அளவின் தேவைகளையும் , அரசு செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைக்க விரும்புகிறேன்

 தோற்றம் ,

 சென்னை இராச்சியத்திலேதான் நம் அமைப்புத் தோன்றியது . சென்னை இராச்சியம் என்றால் இன்றைய தமிழ்நாடு , ஆந்திரம் , கேரளம் ஆகிய மாநிலங்கள் அடங்கியது ஆகும் . தொடக்ககாலங்களில் சுமார் 1937 க்கு முன் ஆங்காங்கே தாலுகா அளவிலோ , மாவட்ட அளவிலோ சிறுசிறு அமைப்புகளாக நாடெங்கிலும் ஆசிரிய இயக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்தன என்று நாம் அறிய முடிகிறது . அதன் பின் தாலுகா போர்டுகள் அமைக்கப் பட்ட போது தாலுகா போர்டு சங்கங்கள் தோன்றின. அப்போது தான் தென்னிந்திய ஆசிரியர்கள் தோன்றி . வளர்ச்சி பெற்று அனைத்து ஆசிரியர்களுக்குமாக இயங்கி வந்தது . இவ்வியக்கத்தில் எப்போதும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம உரிமையோ , தகுதியோ வழங்கப் படாமல் இருந்து வந்தது . 1946 ஆம் ஆண்டில் பெல்லாரியில் நடைபெற்ற தென்னிந்திய ஆசிரியர் சங்க மாநாட்டில் ஒதுக்கப் பட்ட நம் முதாயத்தின் விடி வென்வியாக தோன்றிய உயர் திரு வ இராமுன்னி அவர்கள் சென்னை ஆசிரியர் சம்மேளனம் என்ற இயக்கத்தை கல்லூரிப்பேராசிரியர் , திரு . ஈ . எம் , சுப்பிரமணியம் தலைமையில் அம் மாநாட்டுப் பந்தலிலேயே தோற்றுவித்தார்கள் , அடிமை ஆட்சியில் அன்று பெற்று வந்த ஊதியம் இள நிலைக்கு ரூ . 12 ம் இடைநிலைக்கு ரூ-18 ம் ஆகும் . இதை மாற்றத் தான் வேண்டுமென எழுந்தது சமுதாயம் , வைத்தது கோரிக்கைகளை எனனஅவை

1.   ஆசிரியர்களின் அடிப்படை சம்பளத்தை ரூ . 50 ஆக்கு .

2.   ஆண்டுக்கொரு முறை என்பதை மாற்றி மாதா மாதம் ஊதியம் கொடு ,

3.   நிர்வாக வேறுபாடின்றி சம கல்விக்கு சம ஊதியம் வழங்கு

4.    வேலைக்கு நிரந்தர பாதுகாப்பளிக்கச் சட்டமியற்று

    இவற்றைப் பெற்றிடவே அன்று மலை வள நாட்டின் மேற்குக்கரையாம் மங்களூரிலிருந்து புறப்பட்டார் இராமுண்ணி .

 19 பேர்களுடன் சைக்கிளணியில் தலைமை ஏற்று கொள்கை முழங்கி , கோரிக்ககளைக் கேட்டுக் கொண்டு தென் கன்னடம் , மலபார் , கோவை , பல்லடம் , திருப்பூர் , ஈரோடு , திருச்செங்கோடு, நாமக்கல் , இராசிபுரம் , சேலம் , தருமபுரி , கிருட்டினகிரி , திருப்பத்தூர் , வேலூர் , காஞ்சி வழியாக 30.1.1947 இல் சென்னையை அடைந்தனர் . இது தான் இயக்க வரலாற்றின் முதல் சைக்கிள் அணி - பிரச்சனை தீரவில்லை . 1947 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 1,2 நாட்களில் சென்னையில் மாநாடு நடைபெற்றது . கோரிக்கை பெறப் போராடத் திட்டமிடப்பட்டது . வேலைநிறுத்தம் செய்வது என முடிவுகண்டனர் இராமுண்ணி அவர்கள் அமைப்பாளராகப் பணிபுரிந்தார் . 13.447 முதல் இரண்டு மாதநோட்டீசு கொடுக்கப் பட்டது , அரசு மிரட்டியது . ஆனால் ஆசிரியர்கள் மிரள வில்லை , மாறாக தீவிரம் காட்டினர் . அரசுபணிந்தது . கோரிக்கைகள் ஏற்கப்பட்டன . ஊதிய மாற்றம் செய்யப் பட்டது. இரண்டாவது மாநாடு சென்னையில் மீண்டும் 1952 லும் , மூன்றாவது மாநாடு 1957 ல் சென்னை தியாக ராயர் கல்லூரியிலும் (இம்மாநாட்டில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி என் பெயர் மாறியது) . நான்காவது மாநாடு 1960 சனவரியில் கடலூரிலும் , ஐந்தாவது மாநாடு 1962 மதுரையிலும் ஆறாவது மாநாடு 1964 டிசம்பரில் தஞ்சையிலும் நடைபெற்றன

ஓய்வு ஊதியம் ,

 நாடு விடுதலை பெற்ற பின்பும் 1.4 . 1956 வரை பென்சனே இல்லாமல் இருந்தோம் . பின் ஓய்வூதியம் பெற்றோம் . 2 - ம் , 3 - ம் , 4 - ம் ரூபாயாக அவை அமைந்தன .. 1964 க்கு பின் அனாதைப்பென்சனாக ரூ 20 பெற்றோம் . 1970 ஜூன் 1 ஆம் தேதி முதலே அரசு ஊழியர் ஓய்வூதியம் பெறுகிறோம் .

ஊதியமும் உயர்வும் .

 சுதந்திரம் பின்பும் 1960 ஆம் ஆண்டு வரை இள நிலைக்கு 30-5-33 என்றும் இடைநிலைக்கு 40-1-48 என்றும் பெற்று வந்தோம் . 1.6.60 முதல் 1.10,70 முடிய 65-1-70-2- 90 என்றும் 90- 4-110- 3- 140 என்று பெற்று வந்தோம் , ஆண்டு முழுவதும் உழைப்பவனுக்கு ஆசிரியனுக்கு ஊதிய உயர்வாக அரையும் ரூ .1 கிடைத்து வந்தது . இந்நிலையை மாற்ற இவ்வியக்கம் எடுத்த முயற்சிகள் ஏராளம் . 1954 லே இந் நாட்டிலே புகுத்தப் பட்ட ஒரு நேரக் கல்வியை எதிர்த்து நாமக்கல் நகரிலிருந்து சென்னை நோக்கி சைக்கின் அணி திரு . வி . இராமசாமி ரெட்டியார் தலைமையிலே சென்றது . வெற்றியும் கண்டது . ஒரு நேரத்திட்டம் மாறியது . இது இரண்டாவது சைக்கிள் அணியாகும் . 1958 ஆம் ஆண்டில் ஓர் ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்றும் 79 பேர் வரை ஒருவர் தான் என்றும் வெள்ளை அறிக்கை பிறப்பிக்கப்பட்டது

.

இது சட்ட மன்றத்தில் 08-04-58 ல் நிறைவேற்றப் படவும் இருந்தது இதனால் 15000 பேர் வேலையை இழக்க இருந்தனர் . இதனை எதிர்த்து நாமக்கல்லிருந்து திரு வி இராமசாமிரெட்டியார் ஓர் சைக்கிள் அணியும் , திரு . இராமையாதலைமையில் ஓர் சைக்கிள் அணியும் திரு . அப்துல் மஜீத் தலைமையில் ஓர் சைக்கிள் அணியும் சென்னை நோக்கிச் சென்றன . இதிலும் வெற்றி பெற்றோம் . இது மூன்றாம் சைக்கிள் அணியாகும் . பின் 1969 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 29 ஆம் நாள் மாபெரும்கோரிக்கை மாநாடு சென்னை மாநகரில் நடைபெற்றது . ஓய்ந்திருந்த சமுதாயம் உணர்ச்சி பெற்றது . தொய்திருந்த சமுதாயம் துணிவு கொண்டது . நெல்லிக்காய் மூட்டை இவர்கள் எனப் பேசிய வாய் அடைத்திடவே வீறு பெற்று எழுந்தது . வரலாற்றிலே திருப்பு முனை தோன்றியது . நாடு நெடுகிலும் இருந்து பல நாறு மைல்கள் ஈருருளி மீதேறி இறுகப் பிடித்தழுத்திக் கோரிக்கை முழக்கமிட்டு , “ செல்லுவோம் செல்லுவோம் சென்னை நோக்கிச் செல்லுவோம் . சொல்லுவோம் சொல்லுவோம் கோரிக்கைகளைச் சொல்லுவோம் " என்றே பத்தாயிரம்பேர் சென்னைக்கு ஏகினர் . பஸ்களிலும் , இரயில்களிலும் 50,000 பேர் வந்தனர் . இவர்கள் அன்று அணிவகுத்துச் சென்ற ஊர்வலம் சென்னை அண்ணாசாலை என்றும் சொல்லுமளவுக்கு அமைத்தது . அன்று தான் நாட்டு மக்களும் , மக்களரசம் , என் , செய்தி இதழ்களும் நம்மையும் , நம் இயக்க வளர்ச்சியையும் உணர்ந்தன . இம்மாநாட்டில் வைத்த கோரிக்கைகள் சிலவகைகள் நிறைவேற்றப்பட்டன இம்மாநாட்டின் பயனாய் தமிழ்நாடு அரசு நமக்குக் கீழே கண்ட நன்மைகளைச் செய்தன .

 

1. ஓய்வு பெறும் வயது 58 ஆகவே நிலை நிறுத்தப்பட்டது .

2.தனியார் பள்ளி ஆசிரியர்கட்கு மருத்துவச் சலுகை , வீட்டுவாடகைப்படி , குளிர்காலப் படி , மலைவாழ் படி , ஆகியவை அரசு , உள்ளாட்சித் துறை ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது போலவே வழங்கப்பட்டன

 3. தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணி நிலை ஆய்வுக் குழுவில் இயக்கத்தின் பொதுச் செயலாளருக்கு இடம் அளிக்கப்பட்டது .

4. 1967 க்குப் பின்னர் தான் இளநிலை இடத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 1500 பேருக்கு இடைநிலை ஊதியமும் , மாநாட்டிற்குப் பின் 3000 பேர்களுக்கும் இடைநிலை ஊதியமும் வழங்கப்பட்டது .

 

             அரசு செய்த , செய்யும் நன்மைகளுக்கு நாம் எப்போதும் நன்றி செலுத்துகிறோம் . இன்னும் செய்க காலத் தேவைக்கு ஏற்றாற்போல் கூடுதலாகச் செய்க என உரிமைக்குரல் என்றும் எழுப்பி வருகிறோம் . வளர்ந்து வரும் இந்திய ஜன நாயகத்தில் கூப்பாட்டுக் குரல் போடாமல் எந்த அரசும் நன்மைகள் செய்ய முன்வர முடிவதில்லை . இம்மாநாட்டில் இன்றைய கல்வி அமைச்சரால் ஒப்புக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ளதை நினைவுக்குக் கொண்டுவருகிறோம்

. 1. அனைத்து நிர்வாக ஆசிரியர்களுக்கும் பொதுவான ஒரே ஊழியப்பட்டியல் ,

 2. ஆசிரியர் மாணவர் விகித ஆணை எண் 250 ஐ அமுலாக்கவேண்டும் இவற்றைத் தமிழ்நாடு அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டுகிறோம் . கோரிக்கை மாநாட்டுக்குப் பின் இயக்கத்தின் பொதுச்செயலாளரை சேலம் , தர்மபுரி , கோவை நீலகிரி ஆசிரியர் தொகுதியில் நிறுத்தி வெற்றியும் கண்டது இயக்கம் . இதன் பயனாய் மற்ற இயக்கங்களுக்குக் கிடைக்காத சிறப்பாய் இதன் பொதுச்செயலாளர் முழு நேர ஊழியராகப் பணியாற்ற முடிகிறது . - 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் கூட்டணி என்ற திங்களிருமுறை ஏட்டை மாண்புமிகு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தொடங்கி வைக்க அது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது :

 1970 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 30 ஆம் நாள் மதுரையில் இயக்க நிறுவனர் திரு இராமுன்னியின் மணிவிழாவும் , மாநிலச் சிறப்புமாநாடும் நடைபெற்றது . இடைக்காலத் தேர்தலை நடுவண் அரசம் , மாநில அரசும் அறிவித்து விட்ட நேரம் அது ஒரு ஜனநாயகத்திற்குச் சோதனை ஏற்பட்டு இடைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் நெருக்கடியான தீர்மானங்களை ஆசிரியர் இயக்கம் அன்று வைக்கவில்லை . ஒரு லட்சத்துக்குப் பக்கமாக கூடியிருந்த ஆசிரியர் மாநாட்டில் சாதாரணத் தீர்மானங்களே வைக்கப்பட்டன . இம்மாநாட்டில் கலந்து கொண்ட அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு ப உ சண்முகம் அவர்கள் காலை முதல் மாநாடு முடியும் வரை இருந்து இடையில் முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திரும்பி மேடைக்குவந்து பின் கண்டவற்றை அறிவித்தார்கள் , அவைகள் :

 1.ஆசிரியர் கூட்டணி அலுவலகக் கட்டிடம் கட்ட ரூ .3 லட்சம் அரசுவழங்கும்

2 அலுவலக கட்டடம் கட்ட சென்னையிலேயே அடி நிலம் தரப்படும் .

3. அலுவலக் கட்டடத்திற்கு திரு இராமுண்ணி அவர்களின் பெயரை வைத்துக் கெள்ள அரசு ஏற்பளிக்கும் .

4. " ஆசிரியர் நல நிதிக் குழு " வில் ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருக்கு இடம் அளிக்கப்படும்

 5. “ மெடிக்கல் - இம்பாஸ்மெண்ட் " பில்லை மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்புவதற்குப் பதிலாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கே அனுப்பி அவருடைய அனுமதியுடன் பணம் பெற்றுக்கொள்ள உத்திரவிடப்படும்

 

. 8. தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அலுவல்படி வழங்கப்படும் .

 

விரைவில் வெளிவரும் அதியம் குழு அறிக்கை அதனைத் தரும் என்று மாநாட்டில் பலந்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார். அறிவித்தார் அறிவித்தார் . அவ்வளவுதான் . இன்றுவரை அரசு ஒன்றையுமே செய்யவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்ளுகின்றோம் . இதனை அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம் . பொறுப்பு மிக்க அமைச்சர் பெருமக்களின் இந்த அறிவிப்புகள் அமுலாக்கப்படாவிட்டால் அரசின் மீது சமுதாயத்திற்கு நம்பிக்கை குறைந்து விடாதா ? இதனைச் சிந்தித்து , உறுதியளிக்கப்பட்ட இவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுகிறோம் .

 

 ( 1971 ஜனவரி 2 ஆம் நாள் இரண்டாவது ஊதியக் குழு அறிக்கை இள நிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் சரியாக அமைக்கப்படாமல் உள்ளது என்றும் இடைநிலை ஆசிரியர் ஊதியம் இளநிலை எழுத்தரைவிட இரண்டு ஊதிய உயர்வு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் மொத்தத்தில் வரவேற்று அறிக்கை கொடுத்தோம் . இந்த இயக்கத்தின் அந்த அறிக்கையைத் தேர்தல் நேரத்தில் அறிக்கையாகப் போட்டு வாக்குக் கேட்ட வேட்பாளர்களும் உண்டு இடைத் தேர்தலுக்குப்பின் நல்ல பெரும்பான்மையுடன் மாநில அரசு அமைந்தது . பலவற்றைச் செய்ய வேண்டும் . செய்யும் இவ்வரசு என எதிர்பார்த்தோம் ! நம்பினோம் காலம் கடந்தது . பின்னர் ஆசிரியர்களின் கோரிக்கைகளை 10 அம்சமாக வடித்து 1972 மார்ச் 12 ஆம் நாள் நாடு முழுதும் கல்வி எழுச்சி நாள் நடத்தி அமைதியாக ஒவ்வொரு கோட்டாட்சித் தலைவரிடத்திலும் கோரிக்கைகளைத் தந்தோம் . அவர்களும் அரசுக்கு அனுப்பினார்கள் . இவை பற்றிச் சரியான பதில் இல்லை , இதே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்கச் சென்றனர் கைது செய்யப்பட்டனர் . அவர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் மேலவையில் உறுதி கூறினார்கள் . கல்விக் கொள்கைக் குறிப்பிலும் எழுதப்பட்டது . தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் 10 அம்சக் கோரிக்கை பற்றி “ பரிசீலிப்போம் " , " கவனிப்போம் ” என்று கூட சொல்லப்படவில்லை இதன் பயனாய் போராட்டம் வரலாற்றுக் கட்டாயமாகிவிட்டது . அதுவும் நடந்தது .

            18 நாள் சிறை வாசத்திற்குப் பின்கோரிக்கைகள் சில நிறைவேற்றப்பட்டன . இந்திய நாட்டில் பல மாநிலங்களிலும் ஆசிரியர்களின் போராட்டங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன , அடிப்படை மாற்றங்கள் தேவை என்பதற்கான அறிகுறிகளாகும் இவை போராட்டத்திற்குப் பின் சிறைப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர் . ஒழுங்கு நடவடிக்கை நீக்கம் செய்யப்பட்டது . 1972 மே மாதம் 22 - ஆம் நாள் முதல்வர் ,கல்வி அமைச்சர் ஆகியவர்களோடு மீண்டும் உட்கார்ந்து பேசிக் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டன . அவற்றில் சில நிறைவேற்றப்பட்டுள்ளன இவற்றின் பயனாய் ஆசிரியச் சமுதாயம் கொஞ்சம் தொல்லைகளிலிருந்து விடுதலை பெற்றது . மாநாட்டுத் தீர்மானங்களிலே , நிறைவேற்றப்பட்ட பட்டியல் தரப்பட்டுள்ளது . அதோடு அரசுக்கு நன்றியும் கூறியுள்ளோம் .இன்னும் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலாகத் தந்துள்ளோம் . நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் . இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என ஆசிரியர் களும் அரசும் செயல்பட்டால் தான் பிரச்சினைகள் மோதல் இன்றி போராட்டம் இன்றி தீரும்.ஏற்றுக்கொண்டவைகளை அரசு உடனடியாக செயல்படுத்த முனைய வேண்டுகிறோம் ஆசிரியர் இயக்கம் எப்படியும் செயல்படலாம் என்ற முறையில் என்றும் செயல்படாது , இவ்வியக்கத்திற்கு அரசியல் சாயம் பூசமுனைந்து , அந்தத் திரைக்குள் தங்களைக் காத்துக் கொள்ள இன்று ஒரு சிறு எடுபிடிக் கூட்டம் கிளம்பியுள்ளது . இதை அமைச்சர்களும் . ஆசிரியர்களும் இனம் தெரிந்து கொண்டுள்ளனர் . இவற்றைப் பற்றியெல்லாம் இந்த இயக்கம் என்றும் கவலைப்பட்டதில்லை. இவ்வியக்கம் தோன்றிய நாள் தொட்டு இன்று வரை எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டு செயல்பட்டதில்லை . செயல்படப் போவதுமில்லை . இவ்வியக்கம் தன் கொள்கைகளைத் தானே வகுத்துக்கொண்டு ஆசிரியர் பெருமக்களால் மட்டுமே நடத்தப்பட்டு வரும் இயக்கமாகும் . அதே சமயம் எந்தத் தனி ஆசிரியரின் அரசியல் சுதந்திரத்திலும் தலையிடுவதுமில்லை . அவரவருக்கு ஓர் தனி அரசியல் கருத்து இருப்பினும் , இவற்றுக்கு அப்பாற்பட்டு , செய்யும் தொழில் அடிப்படையில் ஒன்று பட்டு இயங்கி வரும் மாபெரும் அமைப்பாகும் இது . ஆசிரியர் சமுதாயத்திற்கு நன்மை தேடித் தரும் அரும் பெரும் இயக்கத்தை உடைக்க நினைப்போர் யாரானாலும் அவர்கள் நல்லவர்களாக மாட்டார்கள் . இப்படிச் சிலகாலம் செய்துபார்த்து ஏற்கனவே தோல்வியையே கண்டனர் சிலர் . இன்னும் சிலருக்கு பொல்லாத ஆசை பிடித்து ஆட்டுவதால் இதைச் செய்து முடித்து விட்டு மறுவேலை எனச் சூளுரைத்து அலைகின்றனர் . அவற்றையெல்லாம் அமைச்சர்கள் கவனத்தில் கொண்டு நல்லறிவுகூற வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம் .

          மாண்புமிகு முதல்வரை 15-11-1972 இல் காலை அவரது இல்லத்தில் இயக்கத்தின் பொதுச் செயலாளர் , மாநாட்டு இணைச் செயலாளர் திரு.அ.சாமிநாதனுடன் சந்தித்தார் . அப்போது மாண்புமிகு கல்வி அமைச்சர் . பொதுப்பணித்துறை அமைச்சர் , உணவு அமைச்சர் , வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் உடனிருந்தனர் . அப்போது நாங்கள் சொன்னதையே இம் மாநாட்டிலும் கூறுகிறோம் . “ இந்த இயக்கம் ஆளும் கட்சிக்கு அடிமையாகவோ எதிர்க்கட்சிக்கு எடுபிடியாகவோ என்றும் செயல்படாது . எங்கள் இயக்கம் தன் கொள்கைக்கிணங்க , இதன் பொதுக்குழு வகுக்கும் செயல்திட்டங்களுக்கு இணங்கச் செயல்படும் ” என்று  இம்மாநாட்டில் எங்கள் அலுவலகத்திற்கு பொருள்களின் காட்சியைக் கண்டீர்கள் . இவ்வளவு பெற முடியுமா எனச்சொன்னோர் சிலர் . இவற்றைப் பெற்று விட்டால் எங்கே வைப்பது என்ற வினாவையும் எழுப்பினர் சிலர் .ஆனால் எவ்வினாவும் எழுப்பாமல் இவ்வியக்கத்திற்கு இது தேவை என்று முடிவு கொண்டு , தளரா உள்ளம் கொண்டு வழங்கிய வள்ளல்களின் பொருள்கள் இங்கே குவிந்து காணப்படுகிறது.அமைச்சர்களைப் பார்த்து கேட்கிறது இயக்கம் . இவற்றை எங்கேவைப்பது ? விடை பகர்ந்தே ஆகவேண்டும் . இதற்கு அவகாசமோ , நாளோ இனிச் சொல்ல முடியாது . காரணம் இவற்றைத் தெருவிலே எறிய முடியுமோ ? ஆதலின் அமைச்சர்கள் உடனே சென்னையிலே ஓர் இடம் காலி செய்து அடி நிலம் பெற்றுக்கட்டடம் கட்டும் வரை தர இம்மேடை மீதே வழிசொல்லிட வேண்டுகிறோம்.நெருக்கடி கொடுப்பதாக எண்ணவேண்டாம்.ஆசிரியர்களின் எண்ணவேகம் பொருள்களைக் குவித்து விட்டது.அரசு இயந்திரத்தின்ஆமை வேகம் இந்த நெருக்கடியைத் தந்துள்ளது.தேவையின் நெருக்கடி நான் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு ஆகும் ஆனால் இந்த நெருக்கடிக்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புத் தேவையில்லை அமைச்சரின் மன அமைப்பிருந்தால் போதும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மார்க்கம் சொல்ல வேண்டுகிறோம்.அடி நிலம் எங்கே ? மூன்றுலட்சம் எப்போது எங்கள் தீர்மானங்களைப் படித்தீர்கள் . கோரிக்கைகள் நியாயம் என்று சொன்னால் போதாது நிறைவேற்றி உத்தரவு இடவேண்டும் . இது தான் இன்றைய நிலை . இவற்றிற்குப் பின்னரே ஆசிரியன் நன்மை பெற முடிகிறது தட்டினால் திறக்கப்படும் தட்டுபவர்களின் எண்ணிக்கையையும் ஒன்றுபட்ட சக்தியையும் வைத்தே கதவுகள் திறக்கப்படுகின்றன . கேட்டால் கொடுக்கப்படும் . ஒருவர் கேட்டால் , பிரதிநிதிகள் கேட்டால் பல வேளைகளில் கிடைப்பதில்லை . ஆதலின் தான் எல்லாரும் சேர்ந்து கேட்கவே மாநாடுகளைக் கட்ட அமைச்சர்களை , எதிர்க்கட்சியாளர்களை , அதிகாரிகளை அழைத்து வைத்துக் கேட்கிறோம் . கொடுங்கள் என்று , நாங்கள் கேட்டு விட்டோம் . இனி கொடுக்க வேண்டியது அரசின் கடமை அழுத குழந்தைதான் பால் குடிக்கும் என்று சொல்வார்கள் , பசி என்று அழுகிறோம் நாங்கள் , இனி அழுதகுழந்தைக்குப் பால்கொடுக்க வேண்டிய தாய் தமிழ்நாட்டு அரசு தான் . இந்தத்தாய் கவனச் சிதறல் காரணமாக கவனிக்காது இருந்தது போதும் , இனியும் அப்படி இல்லாமல் ஆசிரியர் சமுதாயக்குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய உடனே முன்வரவேண்டுனெ வேண்டுகிறோம் .

               ஆசிரியர்கள் போராட வேண்டுமா ? இது ஒரு கேள்வி போராட்டத்தில் நாங்கள் தள்ளப்படாமலிருக்க அரசிடம் மாமருந்து உள்ளது என்ன அது ? ஒவ்வொர் ஆண்டும் முடிவிலும் ஏப்ரல் மாதத்தில் அரசுப் பிரதிநிதிகளும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளும் உட்கார்ந்து உள்ள பிரச்சினைகளைப் பேசுவது. அந்தந்த ஆண்டில் செய்ய வேண்டியவற்றை வாதிட்டு முடிவுக்குக் கொண்டு வந்து செயல் படுத்துவது . இந்த முறை இங்கிலாந்து நாட்டில் நடைமுறையில் இருக்கிறது . ஏன் இங்கு கடை பிடிக்கக்கூடாது . ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பது , உடன்பாடு காண்பது என்ற முறையில் சட்டமே கொண்டு வந்து அரசு செயல்பட வேண்டுமென 1973 ஆம் ஆண்டின் கருத்தாகப் படைக்கின்றோம் . இது செய்க , அது செய்க என எல்லாரும் எங்களைப் பார்த்துச் சொல்கிறார்கள். இறைவன் என்கிறார்கள் நாட்டின் முதுகெலும்புஎன்கிறார்கள் , தொழில் அல்ல தொண்டு என்கிறார்கள்ஆசிரியர் நினைத்தால் எதையும் செய்யலாம் எனக் கூறுகிறார்கள் , இவையெல்லாம் வீண் ஆரவாரமாகும் . கல்வி வளர , வளர்ச்சி பெற இன்னின்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் சொன்னால் கேட்க இன்னும் காலம் கனிந்து வரவில்லை. காலம் இப்படியே செல்லலாமா? கூடாது

                கல்வி வளர , ஏழைக் குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் இன , மத பேதமற்ற நல்ல கருத்துக்கள் வளர்க்கப்பட தேசிய ஒற்றுமை உருவாக்கப்பட தொடக்கப் பள்ளிகள் அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும் . அப்படி , ஏற்றதும் நிர்வகிக்க ஒரு கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும். அந்த வாரியம் அரசியல் தலையீடுகள் , உள்ளூர் பிரச்சினைகள், ஆதிக்கங்கள் எதுவும் குறுக்கிடா வண்ணம் தனித்துத் தானே அறிவு வளர்க்கும் பணியை மட்டுமே குறிகோளாகக் கொண்டு இயங்குவதாக அமைக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் பிரதிநிதிகள் கொண்ட இந்த வாரியம் கல்வித் தரத்திற்குப் பொறுப்பேற்று திட்டமிட்டுச் செயல்படவேண்டும். இது வெற்றியுடன் செயல்படுமா ? என யாராவது வினா எழுப்பினால் கல்விக்குப் பொறுப்பாளியான ஆசிரியனுக்குப் பொறுப்பைக் கொடுத்துச் செயல்படுத்தாமல் பின் யார் இந்தப்பொறுப்பு ஏற்க முடியும். சிந்திப்பவனும் திட்டமிடுபவனும் , செயல்படுத்துபவனும் ஆசிரியர் சமுதாயமாக இருக்க வேண்டும் . மற்றவர்கள் இவர்களுக்கு உதவியாக அமையலாம் . இதுவே கல்வி வளர வழியாகும் . நீண்ட காலமாக சென்னை மாநிலம் கல்வித் துறையில் முன்னேற்றம் என்று சொல்லி வந்த பேச்சு இன்று வெறும் பேச்சாகி உண்மையற்றுப் போய் விட்டது . இந்திய நாட்டின் சில மாநிலங்கள் கல்வி வாரியத்தை ஏற்படுத்திச் செயல்பட்டுவருகின்றன தமிழ்நாடு அரசு பல துறைகளில் முன்னேறியுள்ளது.ஆயினும் கல்வித்துறை இன்னும் முன்னேறாமல் உள்ளது என்ற வருந்தத்தக்க கசப்பான உண்மையை வெளியிடாமல் இருக்க முடியவில்லை  . மாற்றங்கள் செய்திடத் தயங்கினால் முன்னேற்றம் தடைப்பட்டேதிரும் , கால வளர்ச்சிக்கும் , நாட்டுத் தேவைக்கும் ஏற்ற மாற்றமாக அமைய வேண்டும். கல்வி வாரியத்தை தமிழ்நாடு அரசு அமைந்தே ஆகவேண்டும் எனக் கோருகின்றோம். இரண்டாவது ஊதியக் குழுவினால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகள் தீர்க்க தனி நபர் தலைமையில் குழு போடப்பட்டது இக்குழு தொடக்கப் பள்ளி ஆசிரியர் அல்லாதவர்களுக்கு மட்டுமே உயர்வுவழங்கி புதிய முரண்பாட்டினை உருவாக்கியுள்ளது. அதோடு 97,000 இளநிலை ஆசிரியர்களுக்கும்,தொடக்கப் பள்னியிலுள்ள 70,000 உயர் நிலைப் பள்ளியிலுள்ள 30,000 செகண்டரி கிரேடு ஆசிரியர்களுக்கும் சேர்த்துக் கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கும் தனி நபர் குழு என்ன பரிந்துரை செய்ததென்றே இதுவரை அறிக்கைவெளியிடப்படவில்லை . அதை இம்மாநாட்டில் வெளியிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம் . இப்படி மேடையிலேயே வெளியிடச் சொல்வது சரியா எனக் கூட அமைச்சர் அவர்கள் கேட்கக் கூடும் ..இப்படி தனி நபர் குழு பரிந்துரையை மாநாட்டு மேடையிலேயே அறிவிக்கப்பட முன்னுதாரணம் வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநாட்டில் சென்னையில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அமைச்சர்களின்.கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் .ஆசிரியர்களுக்கும் இத்தகைய அறிவிப்பும் . அரசின் அரவணைப்பும் வேண்டி அறிக்கையினை முடிக்கிறேன்.நன்றி                                                       

  கோவை                                                             அன்பன்

  21-01-1973                                                         செ முத்துசாமி

 

 


No comments:

Post a Comment