Thursday 14 May 2020

ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றுத்தந்த அய்யா செ.மு

ஓர்  அலகில் உள்ள மொத்த ஆசிரியர்களில் 10 சதவீதம் பேருக்கு தேர்வுநிலை வழங்கி அரசு ஆணையிட்டது இந்த ஆணையினால்

1. அதிக பணிக்காலம் உள்ள தந்தைக்கு தேர்வுநிலை கிடைக்கவில்லை

 குறைந்த பனிக்காலம் உள்ள மகளுக்கு தேர்வுநிலை கிடைத்தது

2.  அதிக பணிகாலம் முள்ள கணவனுக்கு தேர்வுநிலை  கிடைக்கவில்லை  குறைந்த பணிக்காலம் உள்ள மனைவிக்கு தேர்வுநிலை கிடைத்தது 

3. அதிகம் பணிகாலம்  உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை கிடைக்கவில்லை 
குறைந்த பணிக்காலம் உள்ள அவர்களுடைய மாணவனுக்கு தேர்வுநிலை  கிடைத்தது  

இந்த முரண்பாட்டை மேலவையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இருக்கும்போது மேலவையில் உருக்கமாகப் பேசி பத்தாண்டு  பணிகால அடிப்படையில் தேர்வு முறை பெற்றுத்தந்தது அய்யாவுடைய மிகப்பெரிய ஒரு சாதனையாகும்

இதே போல  5 வதுஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை சிறப்புநிலை வழங்குவது பற்றி பரிந்துரை கோப்பு நிதி துறை இணைச் செயலாளர் திரு வெங்கட்டராமன்  பணியாற்றியபோது  அனுப்பப்பட்டது 
 நிதித்துறை செயலாளர் திரு நாராயணன் அவர்கள் இந்த பரிந்துரையை நிராகரித்து விட்டார்


இதனை ஐயாவிடம் கூறிய இணைச்செயலாளர் வெங்கட்ராமன் அவர்கள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் கேட்டு அனுப்பிய இந்த கோப்பை நிதிச் செயலாளர் முன்னுதாரணம்  கேட்டு ஏற்காமல் திருப்பி விட்டார் என்றார்
உடனே அய்யா அவர்கள்  இதனை ஏற்பதற்கு கல்வித்துறையில்  முன்முன்ரணம் இருக்கிறது நாளை விவரமாக எழுதி வந்து தருகிறேன் ஐயா என்று அய்யா சொன்னார் 

இந்த கோப்பையை உங்களிடம் தருகிறேன் நீங்கள் இந்த விவரத்தை படித்துப் பார்த்துவிட்டு அதற்கான ஆதாரத்தை தயார் செய்து எப்போது கொண்டு வர முடியும் என்று செயலாளர் அவர்கள் கேட்டார்கள் 

இரவு தயார் செய்து நாளை டைப் செய்து மாலைக்குள் கொண்டு வந்து தருகிறேன் என்று அய்யா சொன்னார் 

செயலகத்தில் உள்ள கோப்பையை வெளியே எடுத்துச் செல்ல தருவதில்லை இருந்தாலும் இணைச்செயலாளர் அய்யாவை நம்பி எடுத்துச் செல்ல  கொடுத்து  அனுப்பினார் 

அய்யா அவர்கள் அன்று இரவே தன்னுடைய நண்பர் ஹேமாத்திரியுடன் விவாதித்து  தேர்வு நிலை சிறப்பு நிலை  கொடுத்ததற்கான அரசாணையை எடுத்து வைத்து அதே போன்று 

இடைநிலை ஆசிரியர் பணிகாலத்தையும் சேர்த்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு  தேர்வு நிலை , சிறப்பு நிலை தரவேண்டுமென விவரமாக ஆங்கிலத்தில் விளக்கம் தயாரித்து கோப்பில்  இணைத்து எடுத்துச் சென்று அன்று பிற்பகல் இணைச்செயலாளர் வெங்கட்ராமனிடம் கொடுத்தார் 
அவர் படித்து பார்த்துவிட்டு இந்த கோப்பையை நிதி செயலரிடம்  சென்று ஒப்புதல் பெற்று விட்டார்

பிறகு கல்வி அமைச்சர் நிதி அமைச்சர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் முதலமைச்சர் கலைஞர் ஏற்று கையொப்பமிட்டு அனுப்பி விட்டார் 
பிறகு நிதிச் செயலாளர்அவர்களிடம்  முதலமைச்சர் இவ்வளவு அக்கறையுடன் உங்கமீது் கோப்பையை கொண்டுவந்து ஒப்புதல் பெற்று சென்ற இணைச்செயலாளர் யாரென கேட்டார்அவரை நான் பார்க்க வேண்டும் என்னிடம் அனுப்பி வையுங்கள் என்று கலைஞர் அவர்கள் சொன்னார்


உடனடியாக நிதிச் செயலாளர் தகவல் தந்து முதல்வரை சந்திக்குமாறு இணைச்செயலாளர் வெங்கட்ராமனிடம் கூறினார் பொதுவாக முதலமைச்சர்   ,துறை செயலாளர்களை. தான் சந்திப்பார்கள் 

இணைச்செயலாளரை எதற்கு அழைக்கிறார் என்று புரியாமல் குழப்பமும் பயமும் மேலிட முதல்வரைச் சந்திக்கச் சென்றார் வெங்கட்ராமன்
 வாங்க வெங்கட்ராமன் என்று முதல்வர் வரவேற்று நீங்கள் தான்  நிதி செயலாளரிடம் தலைமையாசிரியர் சம்பள உயர்வுக்கான கோப்பையை எடுத்து சென்று அனுமதி பெற்று வந்தவரா??   கிராமப்புற ஆசிரியர்களுக்கு நல்ல காரியம் செய்து உள்ளீர்கள் இது போன்ற வற்றை தொடர்ந்து செய்யுங்கள் உங்களை நான் பாராட்டுகிறேன் என்றார்கலைஞர்

 மகிழ்ந்த வெங்கட்ராமன் அவர்கள் ஆசிரியர்கள் மீது கலைஞர் அவர்கள் வைத்திருந்த அன்பை எடுத்துக் கூறினார்கள்  

 தேர்வு நிலை சிறப்பு நிலை ஆகியவற்றை விவரங்களுடன் போராடி பெற்றுத் தந்தார் அய்யா செ.மு  
 வரலாற்றில் இது ஒரு சாதனையாகும்

No comments:

Post a Comment