Tuesday 5 May 2020

அய்யா செ.மு வின் நிகரற்ற உழைப்பும்-தொண்டும்...

மரூர்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து,நைனாமலை பள்ளிப்பட்டி தனியாசிரியர் பள்ளியில் பணிதொடங்கிய செ.மு..

 படிப்படியாக ஆசிரியர் சங்கத்தின் பல பொறுப்புகளில் அனுபவம் பெறுகிறார்

.சேந்தமங்கலம் ஆசிரியர் மையச்செயலர்,

பள்ளிச் சீரமைப்பு மாநாட்டிற்கான சர்ச் செயலர்.

சேந்தமங்கலம் வட்டமாநாட்டுச் செயலர்

,நாமக்கல் வட்டத் தலைவர்,

சேலம் மாவட்டத்தில் தலைவர்,

மாநில செயற்குழு உறுப்பினர்


 என

1957முதல்1968 வரை ஓயாது ஒழியாது ஆசிரியர் சங்க அமைப்பை கட்டமைத்தார்.

 செ.மு.உறுப்பினர்களை ஓடி ஓடிச் சேர்ப்பது என ஆசிரியர் சங்கத்திற்கு வலிமை சேர்த்தவர்

1968 முதல் பொதுச்செயலாளராகி
1969 இல் 7வது மாநிலமாநாடு நடத்தி அரசு புதிய சம்பள கமிஷன் நியமிக்கும் படி செய்த சாதனை  செ.மு,வுடையது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி  தலைவராய் 1968. முதல் இன்று வரை நாற்பதாண்டுகளாய் இயக்கத்தை வழிநடத்தும் வரலாறு இவருக்கு தவிர வேறு எவர்க்கும் இல்லை.

இயக்கம் பிளவுபட நேர்ந்த போதும் ஒரு தளநாயகன் போல் ஆசிரியர் பேரியக்கத்தை கட்டிக்காத்தது ஒரு வீரவரலாறு. அண்ணா,கலைஞர்,காமராசர்,எம்.ஜி.ஆர்,நாவலர் எனத் தான் பழகிய தலைவர்கள் அத்தனை பேரும் முத்துசாமியின் கடைமைப்பற்றை உணர்ந்து போற்றியிருக்கிறார்கள்என்பதையும்,எந்தச் சூழ்நிலையிலும் இவர் ஆசிரியர் நலனை விட்டுக் கொடுத்தவர் அல்லர் என்பதையும் உணர்ந்தவர்கள்

*தொடக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள் முத்துசாமி தலைமையில் பெற்ற வெற்றிகளை எல்லாம் எண்ணிபார்க்கிறேன்.

வானம் பார்த்த பூமியாகக் கிடந்த ஆசிரியர் சமுதாயம் இன்று பொன்மணி களை நெல்மணிகளாக சுமக்கும் முப்போக வயல்களாகத் திகழ்கின்றன

ஆயிரம் கரங்களின் உழைப்பும் தியாகமும் இதில் அடங்கியிருந்தாலும் முழுநேர ஊழியராய்ப் பணிபுரியும் செ.மு.வின் நிகரற்ற தொண்டு இதன் அடித்தளம் என்பதை உணர்ந்து பெருமிதம் கொள்கிறேன்."பண்புடையார்ப் போட்டுண்டு உலகம்"என்பது வள்ளுவம்."தொண்டுடையார் பட்டுண்டு ஆசிரியர் உலகம்" என்பது முத்துசாமியின் வாழ்நெறி.முன்பு நான் ஒரு கவிதை எழுதினேன்.

"அகன்ற உலகு நான்
என்றது அகல்
 அழகிய உடல் நான்
என்றது திரி
அசையும் உயிர் நான்
என்றது சுடர்
உழைப்பு வடித்த உதிரத் துளிகளாய்
தேங்கிய எண்ணெய்
வாய் திறக்கவே  இல்லை"
இந்தக் கவிதையின் உழைப்பு வடித்த உதிர்த்   துளியான எண்ணெய்தான் ஆசிரியர் தலைவர் *செ.முத்துசாமி .இவருடைய வாழ்க்கை வரலாறும் ஆசிரியர் இயக்க வரலாறும் வேறு வேறு அல்ல-ஒன்றுடன் ஒன்று சங்கமித்த பேராறு.
.....  சிற்பி  பாலசுப்பிரமணியம்.

ஆசிரியர் இயக்க வரலாறு நூலிலிருந்து.
தொகுப்பு-

செ.வடிவேலு.இயக்கத். தொண்டன்

No comments:

Post a Comment