Monday 25 March 2013

செயல்வீரர் செமு


முகப்புஇளமைப்பருவம்இயக்கம்மேலவை உறுப்பினர்சான்றோரின் பார்வையில்அயல்நாட்டுப் பயணம்எதிர்காலத் திட்டங்கள்




"எமக்குத் தொழில், ஆசிரியர்க்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராது இருத்தல்"


செயல்வீரர் செமு , இயக்கச்செம்மல் என நல்லோர்களால் போற்றப்படும் செ.முத்துசாமி - தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் மரூர்பட்டி என்ற சிற்றூரில் 10-03-1937 பிறந்தார். தன்னுடைய பேச்சாற்றலாலும், சீரிய சிந்தனையாளும் 1968 முதல் ஆசிரியர் கூட்டணியில் பொதுச்செயலாளராக பணியாற்றுகிறார். மேலும்1970 முதல் தமிழ்நாடு அரசு மேலவை உறுப்பினராக ஆசிரியர் தொகுதியில் 12 ஆண்டுகள் தொண்டாற்றினார்.

ஆசிரியர் இனக் காவலராகத் திகழும் இவர் தன்னைச் சார்ந்த ஆசிரியர்களை, ஒழுக்கத்தோடு ஆசிரியப்பணி ஆற்ற வழிகாட்டுகிறார். நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நிற்கும் பண்பையும் சுய மரியாதையுடனும் பகுத்தறிவுடன் கூடிய வாழ்க்கை வாழவும் , அதிகார வர்க்கம் நடத்திடும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும் "கடமையைச் செய்து உரிமையைக் கேட்கும் துணிச்சலையும் வளர்க்கிறார்"
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது 
-- என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர்.


செ. முத்துசாமி அரங்கம், 3/28, பிளாக்கர்ஸ் சாலை, சென்னை - 2. Phone: 044-28411577, 28411888 Mobile: 94441 76288 
6, கண்டர்பள்ளி சாலை, நாமக்கல்,தமிழ்நாடு - 
637001, Phone: 04286-230160; Fax: 04286-225860
Web Site: http://www.fightingwarriorsemu.com  eMail: vsmuthusamy@yahoo.comtamilnaduteachersfederation@gmail.com