Thursday 28 May 2020

எந்த நாளை நினைக்கட்டும்? செ.மு.வின் இணையில்லா உழைப்பில்!!.

கரைபடியா கரமே! களங்கமில்லா உள்ளமே!

நான், தங்களின் இணையில்லா உழைப்பில் எந்த நாளை நினைக்கட்டும்,
தங்களின் ஏற்றமிகு பணியின் எந்த இடம் சுட்டி கூறட்டும்

.திகைக்கிறேன்- திகைக்கிறேன், தீஞ்சுவை கற்கண்டை சுவைத்திடும் எறும்பு போல் திகைக்கிறேன். 

ஆம் கற்கண்டின் சுவைதான் எந்த புறம் அதிகம்- குறைவு என்றுண்டே! அதுபோல் தாங்கள் ஆசிரியச் சமுதாய பேரினத்திற்கு ஆற்றிய அற்புத செயல்பாட்டினைத் தான் எடுத்துக் கூறிட, நான் என்ன மரியாதைக்குரிய மாஸ்டர் இராமுண்ணிப்பெரியவரா? மரியாதைக்குரிய இராமசாமி ரெட்டியாரா?அல்லது தங்களிடம் பயிற்சி பெற்று அவ்வப்போது தாங்களும் பெரியவர்களே என்று சென்றிட்ட பேதமை பெரியவர்களா!

                 அன்று முதல் இன்றுவரை எம் தலைவனின் திருவடிச்சுவட்டினை சுற்றிச் சுற்றி வந்து இயக்கத்தினை வட்டாரத்தில் ஏற்றமிகு நிலையில் வைத்திருக்கும் தொண்டர்க்கடியேன்! தலைமையையும், இயக்கத்தையும் தொழுது எழுதுகிறேன்.

            தலைவன் செ.மு.வின் தனிச்சிறப்பு:-
1. காடையாம்பட்டி சீனிவாசன் இயக்கம் மாறிய போதும், இனிய முகத்துடன் பொன்னாடை அணிவித்து புகழுரை நல்கினார்
.
.2.ஓமலூர் வட்டாரத்தில் வைப்புநிதிக்கடன் வழங்காத திரு.துரைசாமி ஆணையரைக் கண்டித்ததோடு அய்யோ பாவம்! உங்களுக்கெல்லாம் பெண்குழந்தைகளோ என்று ஏக்கப்பட்டார்?.

3. தாரமங்கலத்தில் தாக்கப்பட்ட தலைமையாசிரியர் கோதண்டனுக்கு ஆதரவு காட்டி ஊர்வலம் நடத்தி, அரியபுத்திரமுதலியார் பூங்காவில் ஆற்றிய பேருரையை நினைக்கிறேன்.

4. மேலவை தேர்தலுக்கு வாக்குகேட்க அரசு பொறியியல் கல்லூரிக்குச் சென்ற பொழுதுதான் எம்.எல்.சி.முத்துசாமி கறை படியாக் கரம் என்றார்கள் கல்லூரி பேராசிரியர்கள், அதனை நினைக்கிறேன்

.5. ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி கிறிஸ்தவ சகோதரிகள் 40 வாக்கும் உங்கள் தலைவனுக்கே, இதுபோன்ற உத்தமன் உண்டோ எனக்கூறி தேர்தல் நிதியாக ₹270 வழங்கியதை நினைக்கிறேன்.

எத்தனையோ ஆற்றல்மிகு செயலினை எந்த ஆட்சியாக இருந்தாலும்,
ஆசிரியப்பேரினத்திற்கு பெற்றுத் தந்த எம் தலைவன் பல்லாண்டு வாழ்க!

 பல நன்மைகளைப் பெற்றுத்தந்த எம் தலைவன் பல்லாண்டு வாழ்க! 
என வாழ்த்துகிறேன்.

எழுதியவர்:- திரு.ப.தாண்டான்.எம்.ஏ;பி,எட்.
துணை செயலர். 
சேலம் மாவட்டம்.

பொன் விழா மலர்.07-10-1995.
தகவல்:- செ.வடிவேலு

செ.மு.வின்- அர்பணிப்பு வாழ்க்கை-- --

        தொடக்கக்கல்வி இயக்கம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை அதன் வரலாற்றை ஆய்வு செய்தால் ஆசிரியர் நலனுக்காக தன்னை முழுக்க முழுக்க அர்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவர் திரு.செ.முத்துசாமி அவர்கள்.
          உண்மை, நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்று  போற்றத்தகுந்த கொள்கைக்காக வாழ்ந்து வருபவர்.வாய்ப்பு கிடைத்தால் MLA;ஆகலாம்;MP;ஆகலாம், மந்திரி ஆகலாம்; வாரியத் தலைவர் ஆகலாம்; சொத்து வாங்கலாம்; சுகபோக வாழ்க்கை வாழலாம் என்றநிலையெல்லாம் வந்து வலைவிரித்த போதெல்லாம் வளைந்திடாத மாபெரும் மனிதர் செ.மு

          கலைஞரின் அசைக்க முடியாத ஆட்சிக் காலத்திலும்; எம்.ஜி.ஆரின் அசைக்க முடியாத ஆட்சிக் காலத்திலும் ஆளுவோர்கள் ஆசை வார்த்தைகளை காட்டினர், அசைந்தாரா? இல்லை.பதவிகள் காட்டி விலை பேசினர், விலையானாரா? இல்லை, இல்லவே இல்லை.

              இயக்கங்கள் சபலத்தாலும், சாதி, மத,      இன அரசியல் காரணங்களாலும் தூண்டப்பட்ட காலங்களிலும், விபீடணர்களால் விமர்சிக்கப்பட்ட காலங்களிலும் தன் இலட்சியங்களால்" ஒரு தலைசிறந்த மாலுமி" போல் இயக்கத்தை வழி நடத்தி வெற்றி பல கண்டவர்.

விருப்பு, வெறுப்பு இல்லாமல் பொதுவாழ்வில் நின்று இயக்கங்களையும்; இயக்கத்தலைவர்களையும் ஆய்வு செய்தால் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத மாபெரும்  ஆசிரியர் இன வழிகாட்டி நம் இயக்க பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தான்.

அவர் வாழ்வே ஆசிரியர்களுக்காகவே

வாழும் வாழ்வு! ஓர் அர்ப்பணிப்பு வாழ்வு! அவர் வாழ்க! அவர் வழியில் நம் பணி தொடர்க.....

எழுதியவர்:-
 காசி.தனபாலன், எம்ஏ பிஎட்
.நீடாமங்கலம் வட்டார செயலாளர்.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:- செ.வடிவேலு.

செ.மு.வுடன்- வசந்தகால நினைவுகள்...

" வயதில் அறிவில் முதியார்- என்றும் வாய்மைப் போருக்கு இளையார்- அவர்தான் தந்தை பெரியார்" என்றார் பாவேந்தர்.

             தொடக்கப் பள்ளி ஆசிரியர் சமுதாயம் ஒன்றாக இருந்த காலக் கட்டத்தில் பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமிக்கு உதவியாளனாக இருந்தது ஒரு கால கட்டம் .அவரோடு இணைந்து- ஆசிரியர் மையங்கள் தோறும் சென்று ஆசிரியர்களிடையே ஒரு உணர்வையும்-  உள்ளுணர்ச்சியையும் உண்டாக்கியது- ஒரு கால கட்டம்.
         அவரின் சேவை நமக்குத் தேவை என்று அவரை மேலவைக்கு அமரவைத்து( MLC)அவரோடு உழைத்தது- ஒரு காலகட்டம்
            .தனி ஒரு மனிதன் சாதிக்காததை சங்கங்கள்தான் சாதிக்க முடியும் என்று இந்த சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக அவரோடு இணைந்து உழைத்தது- ஒரு கால கட்டம். 
             நமது செயல்- சொல்- எண்ணம் ஆகியவை அனைத்தையும் இந்த சமுதாயத்திற்கு என அர்ப்பணித்தார்- என்னுடைய பசுமையான நினைவுகளில்-1965 ல் முத்துகாபட்டி- சண்முகர் சோலை பொதுக்குழு-1969 ல் பெரியார் திடல் கோரிக்கை மாநாடு- மிதிவண்டிப் பேரணி- என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
                   நாமக்கல்- என்றால் ஆசிரிய சமுதாயத்திடையே மூன்று பேர்கள் நினைவுக்கு வருவார்கள்- மா.மு( மேனாள் அமைச்சர் மா.முத்துசாமி) செ.மு. ஆ.மு. இந்த சமுதாயத்திற்கு மறைந்த மா.மு.வும் நானும் தினையளவு நலம் செய்தவர்கள்- அமரர் இராமசாமி ரெட்டியாரும்-செ.முத்துசாமியும் பனையளவு நலம் செய்தவர்கள்.
             இந்த சமுதாய நலனுக்காக அல்லும்- பகலும் அயராது- உழைக்கும் அவருக்கும் மாநில மாநாட்டிற்கும் எனது அன்பான இனிய வாழ்த்துக்கள்.

எழுதியவர்:- மறைந்த ஆறு.முத்துசாமி,
 ஆசிரியர்.
சேந்நமங்கலம்.

தகவல்:- செ.வடிவேலு.

செ.மு.சேவை----- " சிந்திக்க ஒரு நொடி"

ஆசிரியர் சங்கம் 1946 ல் தொடங்கப்பட்டது என்றாலும் நமது பாசமிகு அண்ணல் செ.மு.MLC அவர்கள் 1968 டிசம்பர் திங்கள் 29 திண்டுக்கல் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 69 ல் நமது இயக்கத்திற்கு தனிக்கொடி படைத்த இவர் வீ.செல்லப்பனின் மகனாகப் பிறந்த இந்த மண்ணின் மகன்.உழைக்கின்ற ஆசிரிய கூட்டத்திற்கு உணவில்லை- நல்லஉழைப்புக்கு ஏற்றதொரு கூலியில்லை
                பட்டினியால் சாவதுதான் ஆசிரியனின் நிலை- இந்த பாதகத்தைப் போக்கிடவே நாதியில்லை! அழுகின்ற ஏழை ஆசிரியன் கண்ணீர் மாறவில்லை- அது ஆசிரியனுக்குதான் சொந்தம் என்றால் நியாயமில்லை உழைக்காமல் பல கூட்டம் நாட்டிலின்று உல்லாச ஊர்வலம் வருவதேனோ? எல்லோரும் எல்லாமும் அடையும் நிலை வல்லவனே விரைந்துடனே படைத்திடுவாய் உன் படைப்பில் பேதங்கள் இருக்குமென்றால் உன் படைப்பே உலகுக்குத் தேவையில்லை- என வேதனையுடன் ஆசிரியர்களின் இந்த நிலையை எண்ணி இதற்கு ஒரு தீர்வு வேண்டாமா? என எண்ணி பல போராட்டங்கள் செய்து சிறை பல ஏகி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கத்தின் தலைப்பிள்ளையாய் 1982 ல் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அறக்கட்டளை என ஆரம்பித்து இயக்க தலைமை செயலகம் சென்னையில் பிளாக்கர்ஸ் சாலையில் விஜய் காம்ப்ளக்ஸில் ஆசிரியர் கூட்டணி என்ற பெயரில் பொறிக்கப்பட்ட வட்டத்தின் உள்ளே ரோஜாமாலை அமைத்து அதன் உள்ளே திருக்குறள் புத்தகம் திறக்கப்பட்ட நிலை" வளர்க கல்வி" என படைத்த மாவீரன் அல்லவா? நமது பொதுச்செயலாளர் செ.மு.
             இயக்கம் உருவாகி உச்சியைத் தொடுவதற்கான அதன் பலன் உருவாக்கப்பட்ட இந்த உத்தமப் பணியை( ஆசிரியர் இயக்கத்தை) ஆசிரிய இனமே! இனிய இளைஞனே! உன் ஆற்றலை உணராது, அணியை பெருக்காமல் இருப்பதேன்?உன் போன்ற இதயதுடிப்புள்ள இளைஞனே இன்னும் எழுச்சி பெறாது இருப்பது ஏன்? 

இன்னுமா? நீ உணரவில்லை 
உறங்கி கிடக்கும் உன் உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க துடிப்போடு எழுந்திரு! 
உன்னாலன்றோ இந்திய ஆசிரியர் முகமலரவேண்டும்! இன்னுமா உனக்கு புரியவில்லை? 
அச்சம் தவிர்! துணிச்சல் கொள்! சோதனையும் வேதனையும் வித்தாக்கி சாதனைகளையும் வெற்றிகளையும் அறுவடை செய்.

 துடிப்பும், துணிச்சலும் உன்னை உணர்த்தும் இளமை நில்லாது! யாக்கை நிலையாது! உணர்ந்து கொள்இனிய இளைஞனே!
உன் உயர்வின் பயணத்தை( அணியை) உடனே துவக்கிவிடு 
அதனை பெருக்க செய்!
 நீரளவே ஆகுமாம் நீராம்பல்- 
உந்தன் உழைப்பளவே ஆகுமாம் உயர்வு.
நமது இயக்க வரலாற்று சுருக்கம் பட்டியலை படித்துப் பார் 
நமது செ.மு. வரலாற்று படைப்புக்கள் தெரியும்.
மேற்படி வாழ்ந்து வழிகாட்டியவர்தான் செ.மு.MLC. 

அவர் வெள்ளி விழா காணும் இன் நாளில் வாழ்க! வளர்க!! 

அவர் நீண்ட ஆயுள் பெறுக!!! என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.


எழுதியவர்;- திரு.சி.முனுசாமி, செயலர்,
 வேலூர் வட்டாரக் கிளை.
பொன்விழா மலரிலிருந்து.07-10-1995. 
தகவல்:- செ.வடிவேலு.

Tuesday 26 May 2020

ஓய்வறியா சூரியன் அய்யா செ.மு வாழ்க நூறாண்டு _ செ.வடிவேலு

 60 ஆண்டுகள் என்ன இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆசிரியர் சமுதாயத்திற்கு சோர்வில்லாமல் உழைப்பதே என் லட்சியம் என்று சொல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய, இளமையில் நடந்த அதே வேக நடையை  85லும் நடக்கின்ற எங்கள் ஓய்வறியா சூரியன் செ.மு வாழ்க 
ஆசிரியர்  உள்ளங்களில் இடம் பிடித்து சோர்வில்லாமல்,  தொடர் பணியால்  இவருக்கு இணை  இவர் இன்றி வேறு ஒருவரும்   இல்லை என துணிந்து சொல்லுவோம் வரலாறு படைக்கின்ற எங்கள் பொதுச்செயலாளர் செ.மு வை வாழ்த்துவோம்

ஒரு சாதாரண தொண்டன் ஒரு இயக்கத்தில் இணைந்து தொய்வில்லாமல் பணியாற்றி உயர் நிலையை எய்துவதற்கு யார் காரணம் ?

Monday 25 May 2020

மூன்று தலைமுறை கண்டவர்!நான்காவது தலைமுறையும் காண்பார்- செ.மு.

                  இயக்க நிறுவனர் இராமுண்ணிக்குப் பின் தற்போதுள்ள ஆசிரியர் சமுதாயம் 3 வது தலைமுறையாகும்.இராமுண்ணி காலத்து தலைமுறையைச் சார்ந்தவர்களில் பலர் காலமாகி, மிகப் பலர் ஓய்வு பெற்று, இரண்டாம் தலைமுறை இயக்கங்களில் பங்கேற்று, அவர்களிலும் பலர் ஓய்வு பெறும் காலம் நெருங்கி உள்ளது. தற்போதுள்ளது மூன்றாவது தலைமுறை.
இந்த மூன்று தலைமுறைகளையும் தொடர்புகொண்டு பணியாற்றியவர், பணியாற்றிக் கொண்டு வருபவர்பொதுச்செயலர் திரு.செ.முத்துசாமி அவர்கள் மட்டுமே ஆக செ.முத்துசாமி அவர்கள் மூன்று தலைமுறை கண்டவர். நான்காவது தலைமுறையைக் காணஉள்ளவர்.
                   இதனால் தெளிவாகத் தெரிந்து கொள்வது ஒன்று.மூன்று தலைமுறைகளாக ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பாடுபட்டு வருபவர் செ.முத்துசாமி அவர்கள் மட்டுமே.வேறு எந்த ஒரு சங்கத்துக்கும் இந்தப் பெருமை கிடையவே கிடையாது என்பது பேருண்மை.
                          மத்தியில் பல அரசுகள் மாறியது.தமிழ் நாட்டிலும் பல அரசியல் மாற்றங்கள் நடந்து முடிந்தன.டெல்லியில் பிரதமர்களும், சென்னையில் முதல்வர்களும் மாறினர்.ஆனால் இத்தனை பேர்கள் மாறியும், அத்தனை அமைச்சர்களோடு மத்தியிலும், மாநிலத்திலும் வாதாடிப் போராடி ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளைப் பெற்றுத்தந்த பொதுச்செயலாளர் என்ற பெருமை செ.முத்துசாமி அவர்களையே சாரும்.
                                 நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் அமுலில்இருந்தபோது, சர்வகட்சிகளும் சப்தநாடி ஒடுங்கி ஊர்வலமோ பொதுக்கூட்டமோ நடத்த முடியாத நிலை இருந்த போதும், எழுத்துக்கும் பேச்சுக்கும் தணிக்கை இருந்தபோது, சகல சங்கங்களும் சாமத்து தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியாத நிலையில் இருந்த போதும், நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்கள்மட்டுமே போராட்ட அறிவிப்பை வெளியிட்டு கோரிக்கையைப் பெற்று தந்த பெருமை இவரது துணிச்சலுக்கு இன்றும் கட்டியம் கூறி நிற்கிறது.
                                      இனிவரும் தலைமுறை ஆசிரியர்கள், இயக்கப் பணியாற்றி, வளர்ச்சிமிகு மேன்மைக்கு வழிகாட்டியாகக் கொள்ள வேண்டுமென்றால், அது திரு.செ.முத்துசாமியாகத்தான் இருக்க முடியும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
எழுதியவர்: திரு.வி.சி.மகாவிஷ்ணு.
மேனாள் மாநில துணைப் பொதுச்செயலாளர்.
15 வது மாநில மாநாடு சிறப்பு மலரிலிருந்து 13-08-2000.
தகவல்: செ.வடிவேலு.

Saturday 23 May 2020

செ.மு.வை மறக்க முடியுமா?

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கட்சியானாலும், இயக்கமானாலும் மாறும் பச்சோந்திகள் வாழும் இக்கால கட்டத்தில் தொடர்ந்து பொதுச்செயலாளராக பொறுப்போற்று இயக்கப்பணி ஆற்றியதும்,  அந்த தலைமையுடன் தொடர்ந்து இயக்கப்பணி ஆற்றுவதும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களுக்கு சிறப்பாகும்.

             தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்புச் செயலாளராகவும், தென் ஆர்க்காடு மாவட்டச் செயலாளராகவும் சீரிய முறையில் செயலாற்றிய வரும், தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்றவருமான அமரர் திரு.த.சின்னத்தம்பி அவர்கள் பணிகாலத்திலும் சரி பணி ஓய்வு பெற்ற பிறகும் ஏன்? தன் உயிர் பிரிவதற்கு 10 நிமிடங்கள் முன்வரை கூட நமது பொதுச்செயலாளரின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்கள்.

                         அதுமட்டுமல்ல தான் இறந்த பிறகு தன் நினைவு நாளில் தன் திருவுருவ படத்தை திரு.செ.முத்துசாமி அவர்களை கொண்டுதான் திறக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளார் என்றால் பொதுச்செயலாளர் மீது அவர் வைத்திருந்த பற்றையும், பாசத்தையும் காட்டும் நெஞ்சுருக செய்யும் நினைவாகும். இந்நிகழ்ச்சி பொதுச்செயலாளர் அவர்கள் ஆசிரியர்களின் ஆயுள் காலம் வரை ஏன் ஆசிரியர்கள் மறைவுக்குப் பிறகும் அவர்கள் நினைவை போற்றுவதும் குடும்பநலனில் அக்கறை காட்டுவதும் மறக்க முடியாத உண்மையாகும்.இந்நிகழ்ச்சி நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.

ஆக்கம்: மறைந்த திரு.கோ.அழகானந்தம்

.மேனாள் மாநில அமைப்புச் செயலர்.
கண்டமங்கலம் வட்டாரம்
.விழுப்புரம் மாவட்டம். 

தகவல்: செ.வடிவேலு.

Friday 22 May 2020

சிறையில் கண்ட செ.மு.


பொதுச்செயலாளர் அவர்களை முதன்முதலில் நான் சந்தித்த இடம் சென்னையில் உள்ள- மத்திய சிறையில் கைதியாக.1972 மே 31 சிறை போராட்டத்தில் 1020 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டோம்.என்னையும் மற்றும் நான்கு பேரையும் சேர்த்து எவ்வித வசதியும் இல்லாத" குளோஸ் பிரிஸன்" என்ற அறையில் 5 பேருக்கும் ஒரு சட்டியோடு மாலை 5 மணிக்கு அடைக்கப்பட்டோம்." குளோஸ் பிரிஸன்" என்கிற அறை உண்மையான கொலை செய்த குற்றவாளியை அடைத்து தண்டிக்கும் அறை என்பதைக் கேட்டு உணர்ந்து கொண்டோம்.இரவு ஆக ஆக மூட்டைப்பூச்சியின் அணிவகுப்பு துவங்கியது.பிறகு கூரையின் மேல் பகுதியிலிருந்து மழை பெய்வது போல விழுந்தது.சிறிது நேரம் சென்றதும் அடைமழை பெய்வது போல தொபு, தொபு என்று மேலே மூட்டைப்பூச்சி விழுந்தது.இரு கைகளினால் சேர்த்து வாரும் போது கை நிரம்பி வழிந்தது.( எவ்வளவு இருக்கும் என வாசகர்கள் தீர்மானிக்கவும்). 
நாங்கள் ஐவரும் சட்டை, பனியன், வேட்டி நிக்கர் நீங்கலாக களைந்து விட்டு பிறந்த மேனியோடு கதவு கம்பியை பிடித்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் என்று குதிரை ஏறுவது போல ஒருவர் கீழே குனிய மற்ற நால்வரும் கம்பியை பிடித்துக் கொண்டு குரங்கை போல தொங்கினோம்.அன்று இரவு முழுவதும் இவ்வாறு அவதிப்பட்டோம். உடல் முழுவதும் அம்மை போல் தென்பட்டது. வலியைத் தாங்க இயலவில்லை.மறுநாள் காலையில் பொதுச் செயலாளருக்கு தகவல் சென்றதும் உடனடியாக வந்து எங்களைப் பார்த்து பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்து உடன் இருந்து  பல உதவிகளைச் செய்து கொடுத்து, பிறகு வசதியான அறையில் தங்க ஏற்பாடு செய்து, சிறையில் இருந்த நாள் வரையில் தினந்தோறும் எங்களுடன் உரையாடிச்
செல்வார்.அவர் அப்போது M.L.C,அவருக்கு A வகுப்பு அறையும், உணவும் வழங்கப்பட்டது.அதை ஏற்றுக் கொள்ள மறுத்து மற்ற ஆசிரியர்களுக்கு என்ன வகுப்போ, என்ன உணவோ அதைத்தான் ஏற்றுக் கொள்வேன் எனக் கூறி ஆசிரியர்களில் ஒருவராக இருந்து பணியாற்றிய நிகழ்ச்சி எங்கள் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல பதிந்து விட்டது.எங்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து விட்டார். பொதுச்செயலாளர் ஒரு முறை பழகிவிட்டால் கடைசிவரை மறக்கமாட்டார் என்பதற்கு எடுத்துக் காட்டுகள் சொல்லி மாளாது.மேலும் ஆசிரியர்களுக்கு பிரச்சனை ஏதுவாக இருந்தாலும் பின் வாங்காமல் உறுதியோடு நின்று தீர்த்து வைத்த நிகழ்ச்சிகள் பல பல. எழுதினால் ஏட்டில் அடங்காது.வளர்க! அவர் தொண்டு!!
ஆக்கம்: நா.ஏழுமலை எம்.ஏ.எம்.எட்.மாவட்ட துணைச் செயலாளர்.திருவண்ணாமலை மாவட்டம்.
தகவல்: செ.வடிவேலு.

*வாழிய நீவீர் வாழ்க ஒரு நூறாண்டு* மா.ச. முனுசாமி முன்னாள் மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


ஆசிரியர் கூட்டணி என்பது அலங்கார சொல் அல்ல ஆசிரியர்களின் சங்கநாதம் ஆதலால்தான் ஆசிரியர்கள் அமைப்புகள் பல பதாகையின்  கீழ்   அணி பிரிந்தாலும் இறுதியான ஆசிரியர் கூட்டணி என்றே அழைக்கின்றனர் 

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் ஆசிரியர் இயக்கத்தை உருவாக்கி கால் நூற்றாண்டுகள் பொதுச்செயலாளராக தொண்டாற்றிய   மாஸ்டர் இரா முண்ணி அவர்களால் நேர்முக உதவியாளராக அடையாளப்படுத்தி மாஸ்டருக்கு அடுத்த பொதுச் செயலாளர் என்ற பெருமை பெற்றவர் சேந்தமங்கலம் 
செ.முத்துசாமி
 

ஆசிரியர் பணியில் இளையவர்களின் நியமனம் நிகழ்ந்த காலகட்டத்தில் இயக்கத்தை எழுச்சியுடன் வழிநடத்தியவர் செ.முத்துசாமி

 1968ல் அமைச்சர் பங்கேற்ற மதுராந்தகம் வட்ட. மாநாடு பொதுச்செயலாளர் செ.மு பேண்ட் அணிந்து இருந்தார் கலாச்சாரத்தின் படி வேட்டி அணிய கேட்டுக்கொண்டோம் தன்னிடம் இல்லை என்றார்.  இருவரும் கடைக்குச் சென்று வேட்டி. வாங்கி அணிந்தவுடன்    எனது ஆடையை மாற்றி விட்டீர்கள்    என்று புன்முறுவல் செய்த நிகழ்வு   இனிமையானது

1970இல்  மதுரையில் மாஸ்டர்  மணி விழா மாநாடு .  அன்றைய அஞ்சலில் வந்த இயக்க இதழில் கருங்குழி முனுசாமி     மாஸ்டர்சுடர் ஏந்தி  வருகிறார் என எழுதப்பட்டிருந்தது அச்சத்துடன் சென்னை சென்று சந்தித்தேன் இப்படி எழுதி உள்ளீர்களே என்று எனது கருத்தை முடிப்பதற்குள் இதற்கு தேவையான நிகழ்வு பொருத்தமானவரும்.  நீங்களே    என்று நம்பிக்கை கூறி பணித்தார்    சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து    ஒளியூட்டப்பட்ட.  சுடரை.  5 நாட்கள் சைக்கிளில் பயணித்து மாநாட்டு மேடையில்  மாஸ்டரிடம் ஒப்படைத்த நிகழ்வு எனது இயக்கப் பணியில் படிக்கல்.  பொதுச் செயலாளர் முத்துசாமி அவர்களின் நம்பிக்கைக்கு மைல்கல்

1972 ல். தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்றது 17 நாட்கள் போராட்டம் 18 நாட்கள் சிறைவாசம் பொதுச்செயலாளர் செ.மு, மாஸ்டர், மற்றும் இயக்கத்தின் முன்னணியினர்   1020 ஆசிரியர்கள் சென்னை மத்திய சிறையில் வாடினார்    இந்த போராட்டத்தை வழிநடத்தும் போராட்டக் குழு உறுப்பினராக செயல்படும் வாய்ப்பை பெற்றேன்

 போராட்ட. நாளுக்கு முன்னாள்.  தந்தி மூலம் சென்னைக்கு 
அழைத் தனர்  நாளை கல்வி அமைச்சரை சந்திக்க.  செல்கிறோம்    அரசின் அணுகுமுறை தெரியவில்லை அவசியமெனில் போராட்டக் குழு உறுப்பினராக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்   போராட்ட இறுதி நாளின் நள்ளிரவில் விடுதலையான ஆசிரியர்களுக்கு சத்தியமூர்த்தி பவன் தங்குமிடம் ஆனது.      போராட்ட அனுபவங்களை கற்றிட. வாய்ப்பளித்து எனது    சங்க செயல்பாடுகளை பட்டை தீட்டினார். செ.மு

1973 கோவையில் நடைபெற்ற வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில ஆரம்ப ஆசிரியர் சங்க தலைவர் களின் அழைப்பை ஏற்று கோரக்பூர் நகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் பொதுச் செயலாளர் தலைமையில் பிரதிநிதிகளாக கலந்து கொண்டு பல அனுபவங்களை பெற்றோம்

 வாக்குரிமை அற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர் செ.மு.  அவர்கள் தனது பேச்சாற்றலால், போராட்டத்தால் ,12 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினர் ஆகி ஆற்றிய பணிகள் நீங்காத நினைவுகளாகும்

திரு.செ.மு  அவர்களுடன் மாநிலத் துணைச் செயலாளராக இணைந்து பணியாற்றிய அனுபவம் பசுமையானது

வாழ்நாள் முழுவதும் கூட்டு இயக்கத்தை வலுப்படுத்தி.  ஆசிரியர்,  கல்வி, சமுதாய நலன்களை பாதுகாத்திடும் சமூகப் போராளியாக திகழ்ந்திட. விழைகிறோம்

* *வாழ்த்துக்கள்*
*போர் குணம் நிலைக்கட்டும்* 
*பெருமை சிறக்கட்டும் வாழ்க நீவீர் வாழ்க ஒரு நூறு ஆண்டு*

தகவல்
சு.ம.பாலகிருஷ்ணன்

Wednesday 20 May 2020

*எளிமையின் சின்னம் செ.மு..

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி! *தமிழ்நாடு ஆசிரியர்க்கொரு தலைவன் செ.மு.*

அரண்மனைகளிலும் மடாலயங்களிலும் தவழ்ந்த தமிழை மக்கள் 
மன்றத்திற்கு கொண்டுவந்தவர் பாரதியார்.
*செல்வத்திலும் செல்வாக்கிலும்* *மிக்கவருக்கே என்றிருந்த* *மேலவையை எளியருக்கு எளியராய்ச்*
*சென்று* *அலங்கரித்தவர்*
*எமது* *பொதுச்செயலர்* *செ.மு*

" The fighting Warrior Of Teacher" என்னும் புகழ்பெற்று ,
ஆசிரியர் கோரிக்கை என்று வரும்போது பாரதப் பிரதமர் முன்னிலையிலும் சரளமான ஆங்கிலத்தில் தடையின்றி வாதிட்டு, *தன்னேரிலாத் தலைவராய் திகழ்ந்த அவர்*
 ஆசிரியர்களிடம் எளிமையாக நடந்து கொள்ளும் விதம் யாவரும் அறிந்ததே.

 1978 ல் *இரண்டாம்* *முறையாகத் தேர்தலில்* *வெற்றி பெற்று* *மேலவையில் முத்திரை பதித்து வந்த காலம்*, ஒரு முறை கோவை மாவட்டப் பயணம் வந்து விட்டு அவிநாசி வட்டாரக் கிளை அலுவலகம் வந்திருந்தார். 
*பேருந்து நிலையம் வரை சென்று அவரை வழியனுப்பி வர நான் அனுப்பப்பட்டேன்*

V.V.I.P.ஆன அவர், 
*தமது கைப்பெட்டியை ஆசிரியப் பணியில் புதியவனான, மிக இளையவரான என்னிடம் கூடத் தராமல் தாமே சுமந்து கொண்டு 1 கி.மீ.தொலைவு நடந்து வந்தார்*

அரசு பேருந்தில் ஏறி ஊர் புறப்பட்டார்.
உன்னதத் தலைவரின் எளிமைத் தன்மை கண்டு நெஞ்சார வணங்கினேன்.அவரது சேவை தொடர்ந்து ஆசிரியச் சமுதாயத்திற்குக் 
கிட்ட வேண்டும் என இறைவனிடம் பிராத்திக்கிறேன்

.வாழ்க அவர் சேவை! வளர்க ஆசிரியர் நலன்!


ஆக்கம்: *எஸ்.கோவிந்தசாமி, பிஏ, எம்எட்.*
*மேனாள்* *வட்டார செயலர், அவிநாசி.*

தகவல்: செ.வடிவேலு.

வெளி மாவட்டத்தில் தங்கியுள்ள ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு


*மனிதருள் மாமனிதர் செ.மு._ ப ழ .ராமசாமி கரூர்

மருந்து கேட்டு விண்ணப்பித்திருந்த உங்கள் மனுவை தொடர்புடைய அமைச்சருக்கு அனுப்பி விட்டோம் இன்னும் பதில் வரவில்லை வழக்கம்போல் அமைச்சரின் பொறுப்பாளர் பொறுப்பாக பதில் சொன்னார்
ஓராண்டா ...ஈராண்டா... இந்த பதிலை கடந்த மூன்று ஆண்டுகளாக மாதமிருமுறை கேட்டு கேட்டு என் காதுகள் மருத்துவிட்டன.

நேரமோ உச்சிப் பொழுது சர்க்கரை நோய் சிக்கல் பண்ண ஆரம்பித்தது பசியும் படபடப்பும் இணைந்து என்னை வாட்டின . கண்கள் மூடிய நிலையில் இருந்த என்னை வாஞ்சையுடன் ஒரு கை தொட்டது நிமிர்ந்து பார்த்தேன் .

தொட்டவர் அவர் உள்ளம் போல் வெள்ளுடை தரித்திருந்தார் இரு வரிசைப் பற்கள் பிரிந்து புன்னகையை வெளிப்படுத்தின அந்த மாமனிதர் எனக்கு வேண்டியவர்  என்பதை விட பல்லாயிரக்கணக்கான ஆண் பெண் இருபாலருக்கும் தலைமையேற்று அவர்களுக்குரிய உரிமைகளை மாநாடு கூட்டி அல்லது அரசிடம் போராடி பெற்றுத் தரும்  ஓர் இயக்கத்தின் பொறுப்பான பொதுச்செயலாளர் என்பதே சிறப்பு 

என் துணைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது உயிர்காக்க உண்ண வேண்டிய மிக உயர்ந்த நிலையில் உள்ள *Cycloseforing* மருந்தை அரசிடம் இருந்து இலவசமாக  பெற அலையும்  நிலையை அழாக் குறையாக அவரிடம் சொல்லி வேதனைப்பட்டேன்

அட...டா.  எனக்கு தெரியாதே.  .... என்று வருந்தி என்னை தூக்கி நிறுத்தி   முதலில் சாப்பிடுவோம் என்று கைத்தாங்கலாக பிடித்தபடி கீழே உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார் உணவுக்குப் பிறகு இலவசமாக மருந்து பெற உரிய ஆவணங்களை வாங்கி கொண்டு படியில் ஏறி மேல் நோக்கிச் சென்றார் 

சில மணித்துளிகள் கழிந்தன   சிரித்துக் கொண்டே வந்தவர் * *இனி கவலை வேண்டாம் விரைவில் மருந்துக்கான அரசாணை உங்கள் வீடு தேடி வரும்* இது தொடர்பாக.  இ ங்கு   வந்து அலைய வேண்டாம் என்று என்னிடம் ஆறுதல் சொல்லி விடைபெற்றார் 

நான் மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டேன்  என்னுடைய தலைவர், மற்றும் பேராயக் கட்சி தலைவர்கள் , கரூர் சட்டமன்ற பேராயக் கட்சி உறுப்பினர்   ஆகிய இவர்கள் எல்லாம் நேரடியாகவும் தத்தம். தனி அலுவலர்கள் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் முதல்வரை மருந்து தொடர்பாக அணுகியபோது   வழுக்கு மரம் ஏறி.  வழுக்கி விழுந்த கதைதான். விடையாக வந்தது   நிலைமை இப்படி இருக்க இவரால் மட்டும் எப்படி முடியும் ??என் சிரிப்பின். பொருள் இது தான் 

சரியாக இருபது நாட்கள் கடந்தன.  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில்   இருந்து திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை சென்று   உயிர் காக்கும் *சைக்ளோஸ்போரின்* மருந்து மூன்று மாத காலத்திற்கு பெற்றுக்கொள்ளவும்.  என்று சிபாரிசு செய்தவர் பெயரும் குறிப்பிடப் பட்டிருந்தது  என்னால்   நம்ப முடியவில்லை     இருந்தாலும்   ஆதாரம் கையில் உள்ளதே!


 மருந்து கிடைக்க உதவியவர்  திசை நோக்கி எழுந்து நன்றியுடன் நின்றேன்   *இன்பம் துன்பம் வந்தாலும் கண்ணீர்  கொட்டுவது   தானே கண்களின் பணி* என் கண்களும் நீண்ட நேரம் அதனையே செய்தன 

எப்படி இவர் மட்டும் வழுக்கு மரம் ஏறி வெற்றி பெற்றார்? திறமையா?  ஒரு உயிரை காக்க வேண்டும் என்ற வெறியா? அல்லது தனிப்பட்ட செல்வாக்கா? இன்றுவரை விடை அறியேன் .

வந்த அரசு ஆணையை மேற்கோள் காட்டியே தொடர்ந்து ஆண்டிற்கு 9 மாதம் இலவசமாக மருந்து வாங்கி என் துணைவியை காப்பாற்றி வருகிறேன்

 உரிய காலத்தில் உதவிய
 அந்த எளிய மனிதர்   இந்த எளியவனை  மீண்டும் ஒரு முறை அழைத்து அறுசுவை உணவு படைத்து   வழி செலவுக்கு நிதியும் கொடுத்தார்   அந்த மனித நேய பற்றாளர். யார். என்று அறிந்து கொள்ள ஆவல் வந்துவிட்டதா?? 

 இமயத்தில் விற் கொடியை பறக்கவிட்ட  சேரன் செங்குட்டுவன் போல தமிழகத்தின் தலைநகரில் வானளாவிய மாளிகையில் தன் இயக்க கொடியை ஏற்றியவர்    ஆமாம்     

அவர் தான் செ.மு.   என்று நம்மால் செல்லமாக அழைக்கப்படும் 
செ. முத்துசாமி   அவர்கள் அவருடைய  பணியினால் இது ஒரு வரலாற்றுச் சாதனையாக இடம்பெற்றிருக்கிறது

Tuesday 19 May 2020

ஆசிரிய சமுதாயத்திற்கு முதல்வர் செ.முத்துசாமி.


ஆசிரியர்களுக்கும் பல சங்கங்கள்!" ஆயிரம் உண்டிங்கு சாதி" என்று 
பாரதி பாடினானே...அது
போன்று! ஆனால் எல்லா பிரிவு ஆசிரியர்களும் ஒரு சங்கத்தில் இருக்கலாம் என்ற எண்ணத்தில்- உயர்நோக்கத்தில் மலர்ந்தது தானே- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி!
 முதன்முதலில்  இத்தகு பொதுப்பெயரில் சங்கம்அமைத்தவர்
நம் செ.மு.தானே! அதனால்தான் அவர் முதல்வர் செ.முத்துசாமி.

ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்- அதுவும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்- உயர்நிலைப்
பள்ளி ஆசிரியர்களால்
மதித்து போற்றி வரவேற்கப்பட்டு வெற்றி வாகை சூடி- சட்ட  மேலவை உறுப்பினராகத் திகழ்ந்ததில் முன்னோடி யார்? நம் செ.மு.தானே? அதனால் தான் அவர் முதல்வர் .

செ.முத்துசாமி! ஆசிரியர் சங்கங்களுக்குத் தலைநகரில்- அதுவும், மாநகரின் இதயமாய்த் திகழும் அண்ணாசாலையில், வான் முட்டும் உயரத்தில் கொடி பறக்கவிட்டு, சென்னை
நோக்கி வரும் ஆசிரியர்
பெருமக்களை வருக, வருக, இங்கே வந்து இருந்து உம் கடன் ஆற்றிச் செல்க என்று அக்கொடி அழைக்கும் விதத்தில்- முதன் முதலில் ஆசிரியர்களுக்காகக் கட்டிடம்-' செ.முத்துசாமி
அரங்கம்" கண்ட நன்முத்து-நம் செ.மு.அவர்கள் அல்லவா? அதனால் தான் அவர் முதல்வர்.


 செ.முத்துசாமி! தமிழகத்தின் சிற்றூர்கள், நகரங்களில் ஆசிரியர்களின் அவலக்
குரல் கேட்டு ஓடி வந்து, அவர்களின் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரைத் துடைக்க ஓடி வந்து- உதவும் தங்கமனம் பெற்ற தகைமையாளர் பட்டியலில் முதலிடம் பெறுபவர் வேறு யார்? நம் செ.மு.அன்றி- எனவே தான் அவர் முதல்வர் 


செ.முத்துசாமி.என் ஆருயிர் நண்பர் ஒருவர்- தமிழ்நாடு கூட்டணியின் மாவட்டப் பொறுப்பாளர்- அவரின்
மூச்சும், நினைப்பும் கூட்டணி அன்றி வேறல்ல என்ற கொள்கைச் செம்மல்! அவர் பள்ளி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்து போது- ஆயிரக்கணக்கில் நிதி உதவி, நீதி மன்றத்தில் அவருக்கு நியாயம் பெற்றுத் தந்து- ஆசிரியர் இயக்க வரலாற்றில் ஒரு புனிதக் கடமை ஆற்றிப்
பொலிந்து முதன்மைக் கண்டவர் நம் செ.மு.அல்லவா? அதனால் தான் இவர் முதல்வர் .

செ.முத்துசாமி! கணீர் கணீர் என்று- உண்மையின் ஊற்றாய்,
இடி முழக்கமாய், வீர உரை நிகழ்த்தி தலைவர்களுக்கெல்லாம்," துணிவுடைமை" நெறிகாட்டியவர் நம் செ.மு.தானே! அதனால்
தான் அவர் முதல்வர் 

செ.முத்துசாமி!

ஆக்கம்: கழுகுமலை வை.பூ.சோமசுந்தரம்.
மாவட்ட சட்ட செயலர்.
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.
தகவல்: செ.வடிவேலு.

தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்


Monday 18 May 2020

ஒப்பற்ற தலைமை-செ.மு....( பகுதி2)

மேலவையில் அவரது பேச்சைக் கேட்டு சொக்கியவர்களும் உண்டு! சிக்கியவர்களும் உண்டு! ஆசிரியர்கள் பிரச்சனை என்றால் பாதை ஓரமானாலும் சரி பாராளுமன்ற வளாகமாக இருந்தாலும் சரி எங்கும் அவர் சிந்தனை இச் சமுதாயத்தைப் பற்றியே தான் சுழலும்.டெல்லியில்ஆட்சி பீடத்தில் இருந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னின்று கோரிக்கைகளை நெஞ்சு நிமிர்ந்து கோரிக்கை வைத்த போது கூட சிறிதும் அச்சமோ- கூச்சமோ இல்லாமல் நின்றார்! பிரச்சனைகளை வாதாடுவதிலும் விளக்குவதிலும் அவருக்கு நிகர் அவரே! செ.முத்துசாமி என்ற ஆலமரத்திலிருந்துதான் பல்வேறு கிளைகள் உருவாகி உள்ளன!
அறுவைக்கு ஆள் பிடித்து வா என அரசு ஆணை பிறப்பித்த போது பல போராட்டங்களில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர் பணியின்றி எதனையும் செய்யாது என அரசு தரப்பிலிருந்து ஆணை பெற்ற தலைமை இது! 1982- ல் சத்துணவு விலகல் போராட்டம்! நாம் பெற்ற சுதந்திரம் அது ஆசிரியர்கள் நாயினும் கேடாக மதிக்கப்பட்டு- சந்தேகப்
பார்வைகளால் தன்மானத்தை இழந்து தவித்த நேரம்! ஆசிரியர்
கூட்டணி அதற்காக பட்ட
அல்லல்கள் கொஞ்சமா?
எந்த சங்கமும் துணிந்து அரசை எதிர்க்காத நேரம் செ.மு. மட்டுமே இந்த போராட்டத்தின் ஆணிவேர்! மாவட்டங்களில் கரும்புச் சின்னம் அணிந்து மவுன ஊர்வலங்கள்! ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றால் நாம் அந்த பணியிலிருந்து விடுபட்டோம்! நம்மால் 31,000 சத்துணவு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்!
எத்தனை மாநாடுகள்! கருத்தரங்குகள் உரிமைகளை மட்டும் பெற வேண்டும் சலுகைகளை மட்டும் அனுபவிக்க வேண்டும் என்பதல்ல செ.மு.வின் முழக்கம்! கல்வி வளர பல கருத்தரங்குகள் நடத்தினார்.ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்ய வற்புறுத்துவார்.அவரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் காலத்தால் அழியாதவை.காலம் கடந்தாலும் அவரது கோரிக்கைகள் என்றாவது வெற்றி பெற்றே தீரும்! ஆசிரியர்களுக்கு போனஸாக என கேலி செய்தவர்களை தன் வாதத்தால் போனஸ் வழங்க செய்தவர்கள்.இளநிலையில் காலம் காலமாக இருந்தவர்களை இடைநிலை ஆசிரியர்களாக மாற்ற செய்தவர்.தலைமை ஆசிரியர்களுக்கு தனிப்படி என்று கோரிக்கை வைத்து அதனையும் பெற செய்தார் .அவரால் ஆசிரியர் சமுதாயம் பெற்ற பலன்கள் ஒன்றல்ல! இரண்டல்ல!
சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு பொருளாதார ரீதியில் பெருமை தேடித் தந்தவர்.விழுந்து கிடந்த சமுதாயத்தை வீறு கொண்டு எழச்செய்த சாதனை செம்மல் செ.முத்துசாமி! அவர் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம்! அவர் தலைமையில் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம்! செயல்வீரரே! வாழிய பல்லாண்டு!
ஆக்கம்: மறைந்த எம்.ஐ.ஏ.அக்கீம், மேனாள் வட்டார செயலாளர், திருச்செங்கோடு.
தகவல்: செ.வடிவேலு.

Sunday 17 May 2020

*ஒப்பற்ற தலைமை-செ.மு..*பகுதி_1

ஒரு காலத்தில் ஆட்சியாளர்களின் உத்திரவு களை ஏற்று அடிமைகளைப் போல் வாழ்ந்து அதிகாரிகளால் கேவலமாக நடத்தப்பட்டு- பொட்டுப் பூச்சிகளாய்- நான்கு சுவர்களுக்குள் தன் கடமையை செய்து கொண்டு கைகட்டி சேவகம் செய்த ஆசிரியர் சமுதாயத்தை
" *வேங்கையே வெளியே வா, உன்* *ஆற்றல் என்ன என்று நிருபி, நீ பெற்ற* *உரிமைகளை பெறத்* *தயங்காதே"* என தமிழகத்தின் பள்ளிகளில் வீர முழக்கமிட்டு ஆசிரிய சமுதாயத்தை எழிச்சிபெறச் செய்து அவனை உயர்த்திக் காட்டிய செ.முத்துசாமி என்பவரையும் எந்த வரலாற்று ஆசிரியனும்
மறந்து விட மாட்டான்.
கொல்லிமலை அடிவாரத்தில் ஒரு சாதியான விவசாயகுடும்பத்தில் பிறந்து- ஆசிரியனாகப்
பணியை துவக்கி, *ஆசிரியர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும்* *கொடுமைகளை எண்ணி தன்னை அச்சமுதாயத்திற்காகவே* *ஒப்படைக்கச் செய்த*
*வீர மறவன்* பொதுவாழ்வில்
ஈடுபடும் தலைமைக்கு சில பல அடையாளங்கள் உண்டு! அரசியல்வாதிகளின் ஆணவப் போக்கால் ஆட்சி மாற்றங்களே ஏற்பட்டதுண்டு! பெண் பொன் ஆசைகளால் சரிந்த சாம்ராஜ்ஜியங்கள் உண்டு. பொதுவாழ்வு என்பது புனித கங்கை! அங்கே சபலங்கள் சஞ்சரிக்கக் கூடாது.இலட்சியங்களை லட்சங்களுக்கு விற்க என்றும் எவரும் தலைமைக்கு ஆசைப்படக் கூடாது. பொதுச்செயலாளர் செ.மு ஒரு விதிவிலக்கு!
கடமை தவறாதவர்- காட்சிக்கு எளியர்- சொல்லில் உறுதி- சமுதாயத்திற்கு எங்கு தீங்கிழைக்கப்படுகிறதோ அங்கு இருப்பார்! *கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்றான் கண்ணன் அதுபோல் அநியாயங்கள்- அக்கிரமங்கள்- நடந்தால் ஓடிவருவார்!*
அவரது பேச்சாற்றலையும், உழைப்பையும் ஒழுக்கத்தையும் அவரைக் கண்டு *அரசியல் வலையில் சிக்க வைக்க முயன்ற பெருந்தலைகள் தோற்றனர்!* ஆசிரியர்களுக்காகவே
தன்னை அர்பணித்து கொண்டவர்!
*" போற்றுவோர் போற்றட்டும் புழிதிவாரி*
*தூற்றுவோர் தூற்றட்டும்*
*எற்றதொரு கருத்தை* *எனதுள்ளம் ஏற்குமாயின் எவர்* *வரினும் நில்லேன்! அஞ்சேன்!* என தனது புனித பயணத்தை தொடர்கிறார்...
( நாளையும் தொடரும்)
*ஆக்கம்: மறைந்த எம்.ஐ.ஏ.அக்கீம்,மேனாள் வட்டாரச் செயலாளர்*
திருச்செங்கோடு.
தகவல்: செ.வடிவேலு.

*உயிருக்கு அஞ்சாத உத்தம தலைவர் அய்யா செ.மு*


சேலம் மாவட்டத்தின் வடகோடி வட்டமான காடையாம்பட்டி வட்டார    பண்ணப்பட்டி  பள்ளியில் பணியாற்றி  வந்த ஆசிரியர்  வையாபுரி எந்த தவறும் செய்யாத அப்பாவி வட்டார பெருந்தலைவர் வெங்கடாசலம் என்பவர் சொந்த காரணங்களால் பள்ளி நேரத்தில் பாடம் கற்பித்துக் கொண்டிருந்த வேளையில் பள்ளியில் நுழைந்து ஆசிரியரை செருப்பால் அடித்து விட்டு ஓடி விட்டார் இவர் ஒரு  குடிகார்ர்

சிறிது நேரத்தில் ஊர் முழுவதும்.  வட்டாரம் முழுவதும்  செய்தி பரவியது   வட்டார பொறுப்பாளர்கள் மனம் குமுறினர் உள்ளூரில் செல்வாக்குமிக்க பெருந்தலைவரை எதிர்க்க இயலாமல்   தத்தளித்தனர் பெருந்தலைவரை  தட்டி கேட்க ஆளில்லை சேந்தமங்கலத்திற்குச்  செய்தி பறந்தது  
செ.மு.  உள்ளம் பதறி ஓடி வந்தார்  காடையாம்பட்டிக்கு வட்டார பொறுப்பாளர்களையும் ஆசிரியர்களையும் அடிப்பட்ட  ஆசிரியரையும் நேரில் சந்தித்து பேசி உண்மை   நிலையை விவரமாக  அறிந்து பெருந்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார் செய்திதாள்களில் போராட்ட செய்திகள் வந்தன 

அண்டை  வட்டாரங்கள் ஓமலூர் ,தாரமங்கலம், சேலம் நகரம்,  அயோத்தியாபட்டினம் போன்றவற்றிலிருந்து ஆசிரியர்கள்  திரண்டன  வரலாற்றில் இதுவரை நடந்திராத வகையில் 200 சைக்கிள்கள்  500 ஆசிரிய ஆசிரியைகள் உடன் கண்டன பேரணி நடத்தினார்   அய்யா செ.மு.
  தீவட்டிப்பட்டி ,திண்ணப்பட்டி, நடுபட்டி , காடையாம்பட்டி என எட்டு கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலம் முடிவில் பெருந்தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடத்தி தனக்கே உரித்தான சிம்மக் குரலில் எடுத்துரைத்தார் அய்யா செ.மு

ஊர் செல்வாக்குப் பெற்றிருந்த பெருந்தலைவர்.  தமது  இன மக்களுடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர் இனத்துக்கு   எதிராக மிரட்டல் விடுத்தார்  செ.முத்துசாமி அவர்கள் காடையாம்பட்டியில் முகாமிட்டார்   எட்டு நாட்கள் தொடக்கப் பள்ளி கட்டிடத்திலேயே  படுத்து இருந்தார்    போராட்டம் வலுவடைந்தது.  ஆசிரியரை அடித்தது தவறுதான் என பொதுமக்கள் பேச ஆரம்பித்தனர்.  இரு தரப்பினருக்கும் பஞ்சாயத்துப் பேசி சமாதானம் செய்ய ஊர் பெரியவர்கள் முடிவெடுத்தனர் 

 ஊர் தலைவர் பெருமாள் பண்ணாடி.  தூதுவிட்டார் நாளை காலை பஞ்சாயத்து விசாரணை என்றார்  சம்மதித்த பொதுச் செயலாளர்  பஞ்சாயத்தில் பெருந்தலைவரை நாற்காலியில் உட்கார வைத்து விசாரணை செய்தால்    வையாபுரி ஆசிரியரையும் அதேபோல் நாற்காலியில் உட்கார வைத்து விசாரணை செய்ய வேண்டும் இல்லையேல் பஞ்சாயத்து இல்லை என்றார்

வந்த்தே  பண்ணாடிக்கு  கோபம் *என்ன தம்பி நீ பள்ளிகூடத்தில் தானே படுத்து தூங்குகிறாய் என்ன ஆகும் தெரியுமா*  என்று மிரட்டினார்

அஞ்சாநெஞ்சன் ஆற்றல்மிகு இளைஞர் நமது பொதுச்செயலாளர் என்ன சொன்னார் தெரியுமா  *என்ன ஆகும் நாளை மாலை முரசு தினத்தந்தி பேப்பர் களில் செ.முத்துசாமி கொலை செய்யப்பட்டார் என்று தானே வரும் என் உயிர் போவது ஒரு முறை தான்  இவ் உயிர் ஆசிரியர்களின் மானம் காக்க நியாயம் கேட்டதற்காக  போனது என்றால் போகட்டும் என் உயிர் போனால் நாளை ஆயிரம் முத்துசாமிகள் வருவார்கள் அதற்கு இந்த அரசும் இப்பகுதி மக்களும் பதில் சொல்லி ஆக வேண்டும்*    என்று வீர முழக்கமிட்டார் இருள்.  சூழ்ந்து மக்கள் கலைந்தனர்   பொழுது விடிந்தது    பொதுமக்கள் முன்னிலையில் பெருந்தலைவர் மன்னிப்பு கேட்டார்     தன் வீட்டைவிட்டு குடும்பத்தை விட்டு காடையாம்பட்டியில்  எட்டு நாட்கள் தங்கி உயிரைத் துச்சமாகக் கருதி துணிச்சலுடன் செய்த அருஞ்செயல் ஐயாவின் உடைய வரலாற்றில் ஒரு பெரும் வரலாற்று சாதனையாகும்

தகவல்
எம்.செங்கோடன்
சேலம் மாவட்ட முன்னாள் செயலாளர்

Friday 15 May 2020

நீங்காத நினைவுகள்*(செ. முத்துசாமி உடன் நான் இயக்க தொண்டாற்றிய காலங்கள்) க. பழனியாண்டி திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர்

1968இல் திண்டுக்கல் அங்குவிலாஸ் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெற்றது  தேர்தலில் எல்லன்னா மாநில தலைவராகவும் திரு செ .முத்துசாமி பொதுச்செயலாளராகவும் கோ .அப்புகுட்டி பொருளாளராகவும் ஓரணியில் போட்டியிட்டனர்
மற்றொரு அணியில்  மாநில தலைவராக,, இ. ராமையா தேவரும் , திரு அப்துல் மஜீத் பொதுச் செயலாளராகவும், மாநில பொருளாளராக க .பழனியாண்டி. ஆகிய நானும்  மற்றொரு அணியில் போட்டியிட்டோம்

 மாநில தலைவராக  திரு  எல்லண்ணாவும்   திரு செ .முத்துசாமி பொதுச் செயலாளராகவும், கோ.அப்புக்குட்டி மாநில பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
              இராமையா தேவரின் ஆதரவாளர்களான.  நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம்1969 டிசம்பரில் சென்னை பெரியார் திடலில் மாநில கோரிக்கை மாநாடு நடைபெற்றது மாநாட்டு செயலாளராக செ.முத்துசாமி பணியாற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் இம்மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் வந்து கலந்து கொண்டனர் இம்மாநாட்டில் கோரிக்கைகளை விளக்கி செ.  முத்துசாமி வீர முழக்கமிட்டு எழுச்சிமிக்க உரையாற்றி ஆசிரியர்களின் உள்ளத்தில் இடம் பெற்று அவர்களை கவர்ந்தார்.
 இந்த சூழ்நிலையில் 1970இல் கோவை சேலம் தர்மபுரி நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் அடங்கிய மேலவை காண ஆசிரியர் தொகுதியில் துணிச்சலாக   ,,செல்வாக்கு மிக்க ஒருவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்

        மேலவையில் வெற்றி பெற்ற செ. முத்துசாமி  அனைத்து நிலை ஆசிரியர்களின் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைகளை ஆணித்தரமாக வலியுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று பல்வேறு அரசாணைகளை பெற்றுத் தந்தார் 
ஆசிரியர்கள் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் மக்கள் தொடர்பான பொது பிரச்சனைகளையும் முன்வைத்து பலனைப் பெற்றுத் தந்துள்ளார்
ஆசிரிய முத்துசாமி மேலவை உறுப்பினராக இருந்த காலத்தில் மேலவை தலைவராக   சிந்தனைச் சிற்பி சிபி சிற்றரசு ,தமிழரசுக் கழகத் தலைவர் மா .பொ .சிவஞானம் ஆகியோர் இருந்தனர் 
               இந்த காலத்தில் மேலவை உறுப்பினர் களாக  ஏ. பி. ஜனார்த்தனம்  .இசைமுரசு நாகூர் அனிபா  ..திரைப்பட பாடலாசிரியர் கு.மா. பாலசுப்பிரமணியன் , சிறந்த எழுத்தாளர்ஏ. கே.வில்வம்,  பேராசிரியர் கஅறிவழகன்   ,குன்றக்குடி அடிகளார் , தென்னரசு போன்ற நாடறிந்த புகழ் மிக்கவர்கள் இருந்தனர்

                      1 970  ஆசிரியதின  நாள் அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆசிரியர் கூட்டணி இதழ் வெளியிடப்பட்டது அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் வெளியிட மாஸ்டர் இரா.முண்ணி பெற்றுக்கொண்டார் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  அதிகாரபூர்வ  நாளேடான ஆசிரியர் கூட்டணி இதழ் இன்று வரை செ. முத்துசாமி  அவர்கள் பெயரில் தான் உள்ளது

 1971 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது  அப்போது மதுரை ஜே.எஸ் ராசு அவர்கள் தன்னிச்சையாக பெருந்தலைவர் காமராஜரிடம் பேசி காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,,

 கூட்டணி சேர இருக்கிறது என்று சொல்லி இரண்டு இடங்கள்  போடி மற்றும் மதுரை மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்டு  அப்போது மாநில தலைவராக இருந்த வர் போடி தொகுதியிலும்   இவர் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது

 1974இல் அதாவது. _ 28_ 4_ 1975  இல் திருச்சி தேவர் மன்றத்தில் திருச்சி மாவட்ட மாநாடு நடத்தினோம் அதில் அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார் அப்போதிருந்த ஒருங்கிணைந்த மாவட்டம் திருச்சி கரூர் பெரம்பலூர்,புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது மாவட்டத்தில் 39 ஊராட்சி ஒன்றியங்கள் 6 நகராட்சிகளை , கொண்ட 45 கிளைகளை கொண்டதாகும் . இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டு திருச்சி மாநகரமே.  குலுங்கியது இதில் மாநில பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பொதுச் செயலாளர் செ. முத்துச்சாமி மாநாடு சிறப்பாக நடைபெற்றதை பாராட்டினார் 

ஆசிரியர் கூட்டணி பெயர் மாற்றம் புதிய ஆசிரியர் கூட்டணிக்கு பெயரை முன்மொழிந்தவர் யார்

நாளை தொடரும்

ராஜன் நகர் போராட்டம்.. ஐந்து பெண் ஆசிரியை களின் பணிநீக்கத்தை ரத்து செய்யக்கோரி-செ.மு.

ஈரோடு மாவட்டம் பண்ணாரிக்கு அருகில் உள்ளது ராஜன்நகர்.அங்குள்ள கஸ்தூரிபா உயர்நிலைப்பள்ளியின் நிர்வாகத்திற்கு எதிராக அவ்வூரில் நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி எம்.எல்.சி தலைமையில் நடைபெற்ற போராட்டமும்,கண்டன ஊர்வலமும் நமது இயக்க வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகும்

.கோவைமாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் தோன்றாத நிலையில் கோவை மாவட்டக்கிளையில் இயங்கிய கொடுமுடி வட்டாரத்திலிருந்து சென்று மேற்படி போராட்டகளத்தில் கலந்து கொண்டவன் என்ற முறையில் அது பற்றிக் குறிப்பிட விழைகிறேன்.ராஜன்நகர்-கஸ்தூரிபா உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள் என்பதற்காக 1977 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரே நாளில் அப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர்கள் இருவர், பட்டதாரி ஆசிரியர்கள் இருவர், தொழில் ஆசிரியர் ஒருவர் ஆக  5 பெண் ஆசிரியைகளையும் மிரட்டி, வற்புறுத்தி ராஜினாமாக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு பணியிலிருந்து அவர்களை நிர்வாகம் நீக்கி விட்டது.
         அவ்வாசிரியைகள் நமது இயக்க உறுப்பினர்கள் அல்ல என்ற போதிலும், கோவை, சேலம், தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களுக்கான ஆசிரியர் தொகுதியின் சட்டமன்ற மேலவை உறுப்பினரான நமது பொதுச்செயலாளரான திரு.செ.முத்துசாமி அவர்களிடம் விண்ணப்பித்து தங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, தனது சார்பாக இயக்கத்தின் வட்டார, மாவட்டப் பொறுப்பாளர்களை பேச்சு வார்த்தைக்காக நிர்வாகத்திடம் அனுப்பி வைத்தார்.நிர்வாகத்தினால் நமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி வட்டார அமைப்பு ஆசிரியர்களைத்திரட்டி மேற்படி ராஜன் நகரில் நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டும் மாபெரும் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடத்தி  பொதுமக்களுக்கு இப்பிரச்சனை மீதான கவனத்தைக் கொண்டுவந்தார்.
               அடுத்து அப்பள்ளியில் நடந்த அநியாயத்தை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களைச் சந்தித்து நேரில் கூறி, கோபி மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக அவ்வாசிரியைகளை விசாரணை செய்து நடந்த உண்மைகளை அறிக்கை வாயிலாக மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளிக் கல்வி இணை இயக்குநருக்கு அனுப்ப, மேற்படி இயக்குநர் அப்பள்ளித் தாளாளருக்கு ஆணை ஒன்றை அனுப்பினார்.
" மேற்படி 5 ஆசிரியைகளும்ஒரே நாளில் வற்புறுத்தி ராஜினாமாக்கடிதம் வாங்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது நிருபணம் ஆகிவிட்டது.5 ஆசிரியைகளின் வாசகங்களும் ஒரே மாதிரி (stereo typed) உள்ளது.ராஜினாமாக் கடிதம் தேதி போடாமல் வாங்கப்பட்டுள்ளது. பின்னர் வேறு மையினால் தேதி போடப்பட்டுள்ளது.எனவே அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டு அறிக்கை அனுப்பவேண்டும்" என்ற ஓர் உத்திரவினை பள்ளித் தாளாளருக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அனுப்பி வைத்தார்.
             செயல்வீரான நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்களின் சீரிய முயற்சியும், அஞ்சா நெஞ்சமும், அயராத உழைப்பும் எந்தப் பிரிவு ஆசிரியர்களாக இருந்தால் என்ன, எல்லோரும் நமது ஆசிரியர்கள் என்ற நல்லெண்ணமும் மேற்படி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன.ராஜன்நகர் போராட்டமும் நமது இயக்க வரலாற்றில் ஒரு வெற்றிப் படியாகும்.

எழுதியவர்:' 
"யோகசிரோமணி"பெ.சின்னசாமி.
மேனாள் அலுவலக செயலர்
.கொடுமுடி வட்டாரம்
தகவல்: செ.வடிவேலு.

Thursday 14 May 2020

தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி- தொடர்-7

ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றுத்தந்த அய்யா செ.மு

ஓர்  அலகில் உள்ள மொத்த ஆசிரியர்களில் 10 சதவீதம் பேருக்கு தேர்வுநிலை வழங்கி அரசு ஆணையிட்டது இந்த ஆணையினால்

1. அதிக பணிக்காலம் உள்ள தந்தைக்கு தேர்வுநிலை கிடைக்கவில்லை

 குறைந்த பனிக்காலம் உள்ள மகளுக்கு தேர்வுநிலை கிடைத்தது

2.  அதிக பணிகாலம் முள்ள கணவனுக்கு தேர்வுநிலை  கிடைக்கவில்லை  குறைந்த பணிக்காலம் உள்ள மனைவிக்கு தேர்வுநிலை கிடைத்தது 

3. அதிகம் பணிகாலம்  உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை கிடைக்கவில்லை 
குறைந்த பணிக்காலம் உள்ள அவர்களுடைய மாணவனுக்கு தேர்வுநிலை  கிடைத்தது  

இந்த முரண்பாட்டை மேலவையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இருக்கும்போது மேலவையில் உருக்கமாகப் பேசி பத்தாண்டு  பணிகால அடிப்படையில் தேர்வு முறை பெற்றுத்தந்தது அய்யாவுடைய மிகப்பெரிய ஒரு சாதனையாகும்

இதே போல  5 வதுஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை சிறப்புநிலை வழங்குவது பற்றி பரிந்துரை கோப்பு நிதி துறை இணைச் செயலாளர் திரு வெங்கட்டராமன்  பணியாற்றியபோது  அனுப்பப்பட்டது 
 நிதித்துறை செயலாளர் திரு நாராயணன் அவர்கள் இந்த பரிந்துரையை நிராகரித்து விட்டார்

Wednesday 13 May 2020

வரலாற்றுத் திருப்புமுனை தந்த 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள்

1969 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் இரவு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நடவடிக்கைக் குழுக்கூட்டம், சென்னை ஏ.வி.நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
         முதல்வர் கலைஞர் சங்கப் பிரதிநிதிகளை 03-12-1969 காலை 10 மணிக்கு முதல்வர் அறையில் சந்திக்குமாறு அழைப்பு அனுப்பியிருந்தார்.பொதுச்செயலர் முத்துசாமிக்கு எழுதிய அக்கடிதம் பரிசீலிக்கப்பட்டது.அப்போது பொதுச்செயலராகிய நான் முதல்வருடைய செய்தி அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, "முதல்வரை சந்தித்துப் பேச தயாராக ஆசிரியர் கூட்டணி உள்ளது" என கடிதம் எழுதியதாகவும், அதற்கு முதல்வரிடமிருந்து பதில் வந்துள்ளது என்றும் கூறினேன்.(செ.முத்துசாமி)
பலரும் மகிழ்ந்தனர். நடவடிக்கைகுழு என்பது மாவட்டத்தலைவர்- செயலர் அடங்கியது ஆகும்.

Sunday 10 May 2020

லட்சம் கேட்ட ஆணையர் செ.மு.விடம் தஞ்சம்...

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டாரத்தில் 1978-79 ஆண்டுகளில் ஆணையாளராகப் பணியாற்றியவர் ஜி.கோவிந்தராமானுஜம் .இவர் ஆசிரியர்களுக்குச் செய்த கொடுமை,இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.லஞ்சம் பெறுவதையே தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தார்.லஞ்சம் தராதவர்களை தரக் குறைவாக நடத்துவதும் பழிவாங்குவதும் இவருக்கு பழக்கமானது.இவரது அபிலாசைகளுக்கு இசைந்து கொடுக்காதவர்களை பணி நீக்கம் செய்தார். இயக்க கிளைப் பொறுப்பாளர்களான திரு.கே.ஜெகநாதன்,திரு.எம்.கஞ்சமலை, திரு.பி.துரைசாமி ஆகியவர்களை நொண்டிக் காரணங்கள்காட்டி தண்டித்தார்.தற்காலிகப்பணிநீக்கம் செய்தார்.
" தான் கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்ற ஆணவப் போக்கில் ஆணையர் ஆடினார்.இவரை அடக்க ஆளில்லை.அடங்கிப் போக ஆசிரியர்கள் தயாரில்லை.ஆணையரின் தொல்லை எல்லை மீறியது.வட்டார எல்லையை தாண்டி மாவட்டத் தலைவர் திரு.கை.சி.கணேசசங்கர்,மாவட்டச் செயலாளர் திரு.ஆர்.வேங்கடராமானுஜம் ஆகியோர் மூலம் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி எம்.எல்.சி.அவர்களுக்குச் சென்றடைந்தது.
                                தன்னைப் பற்றிய புகார் மேலிடம் சென்றதால் ஆணையாளர் அதிகமாக ஆட்டம் போட்டார்.சஸ்பென்சன் செய்யப்பட்டவர்களுக்கு" ஷோகாஸ் நோட்டிஸ்" வழங்கினார்.பொறுமையுடனிருந்த ஆசிரியர்கள் பொங்கி எழுந்தனர். 
         தொடர்உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது.பொதுச்செயலாளர் செ.முத்துசாமி, எம்.எல்.சி, தலைமை வகித்தார்.மாவட்ட ஆட்சி அலுவலகம், அரசு, ஆணையருக்குத் துணை போயிற்று.பொதுச்செயலாளர் மேலவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விளக்கமாக உரையாற்றினார்.முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் பொதுச்செயலாளரை தன் அறைக்கு அழைத்து உண்மை நிலையைக் கேட்டறிந்தார்.அரசு உணர்ந்தது.உரிய நடவடிக்கை எடுக்க முனைந்தது.ஆணையாளரின் வேலைக்கே ஆபத்து வர நேர்ந்தது.அலறித் துடித்து ஆணையர் நமது பொதுச்செயலாளர் காலில் விழுந்து " தஞ்சம்" வேண்டினார்.காடையாம்பட்டி ஆசிரியர்களின் பிரச்சனைகள் அனைத்தும் சுலபமாக, சுமுகமாக முடித்துக் கொடுத்த பின்னர் ஆணையாளர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.காடையாம்பட்டி ஆசிரியர்கள் துன்பக் கடலிலிருந்துகரையேறினர்.துயர் துடைத்தவர்செ.மு. செ.மு.வாழ்க! பல்லாண்டு!!

எழுதியவர்: திரு.மு.கஞ்சமலை.மேனால் வட்டார செயலாளர்.
தகவல்: செ.வடிவேலு.

Wednesday 6 May 2020

சரித்திரம் படைத்திட்ட ஒரு மாமனிதன்-செ.மு

1968ஆம் ஆண்டில் அந்தியூர் கிளை முனைப்பாக செயல்பட்டு வந்த போது திரு.பூமாலை ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் என்ற முறையில் ஆற்றிய பணிகளுக்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.வட்டார இணைச் செயலாளராக பணியாற்றி வந்த நான் அன்று கோவை மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த திருவேங்கடசாமிக்கும்,மாஸ்டர் இராமுண்ணி நேர்முக உதவியாளராகவும்,சேலம் மாவட்ட செயலாளராகவும் பணிபுரிந்து வந்த செ.மு.வுக்கும் தந்தி செய்தி அனுப்பினேன்.

Tuesday 5 May 2020

அன்றொரு நாள்... அய்யா செ.மு

அய்யா செ.மு.அவர்கள் சேலம் மாவட்ட செயலாளராக பணியாற்றியகாலம்  காடையாம்பட்டி வட்டாரம் அன்றொரு நாள் இவ்வட்டாரத்தில் ஒரு தவறும்  செய்யாத ஆசிரியர் ஒருவரை அவ்வட்டாரத்தின் பெருந்தலைவர் பண்ணப்பட்டி பள்ளியில் சென்று செருப்பால் அடித்து விட்டு சென்று விட்டார்.

இதை தட்டிக் கேட்க ஆள் இல்லாத நேரம் செய்தியை கேள்விபட்டு பதறி ஓடிவந்தார்.நடந்ததை விசாரித்து பெருந்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டு, அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றுதிரட்டி வரலாறு காணாத பேரணி நடத்திகோஷங்கள்களை போட்டு ஆசிரியர்களின் அவலநிலையை ஊர் பொதுமக்கள் மத்தியில் தனக்கே உரிய சிம்மக்குரலில் எடுத்துக் கூறினார்.
செல்வாக்குப் பெற்றிருந்த பெருந்தலைவர் பொதுமக்களை ஒன்று சேர்த்து மிரட்டல் கடிதங்கள்-கொலை செய்துவிடுவோம் என்ற மிரட்டல் வார்த்தைகளை வீசினர்.அஞ்சாத செ.மு.அவர்கள் என்ன சொன்னார் தெரியுமா? என் உயிர் போவது ஒரு முறைதான் அது இவ்வட்டார ஆசிரியர்களின் நியாயத்திற்கு என் உயிர் மடியட்டும் .

அதை மனதார வரவேற்கிறேன்.ஒன்று நிச்சயம்!என் உயிர் முடிந்தால் நாளை  ஆயிரம் முத்துசாமியின் வருவார்கள்.அதற்கு இந்த அரசும் பொதுமக்களும்  பதில் சொல்லியாக வேண்டும் என்று வீர முழக்கமிட்டார்.பொது மக்கள் உண்மையை உணர்ந்தனர்.செல்வாக்கு மிகுந்த பெருந்தலைவர் பொது மன்னிப்பு கேட்டார்.ஆசிரியர்களின் அவலநிலையை போக்கி ஆசிரியர்களின் தன்மானத்தை நிலைநாட்டியவர் அண்ணன் செ.மு. இது வரலாறு.

செ.வடிவேலு. இயக்கத்தொண்டன்.

செ.முத்துசாமியின் ஆளுமை

சேலம் மாவட்ட அமைப்பில் பொறுப்பேற்றுக் செயல்பட்டு வந்த நிலையில்,1967 சேலம் மாவட்ட மாநாட்டிற்கு அறிஞர் அண்ணாவை அழைக்க சென்னை வந்து அவரை சந்தித்த போது என்னை அழைத்து நடத்துமாறு சொல்ல அவ்வாறே என்னை அழைத்து சென்றார்.மாநாட்டில் பங்குகொண்டேன். அந்த நாள்முதல் அவரை நான் அறிவேன்.ஆசிரியர்களின் உரிமை காப்பதில் சிறிதும் விட்டுத்தராமல் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி வாதாடுவதிலும் முன்னின்றவர்.அவர் சட்டமன்ற மேலவையில் தேர்தல் மூலம் இடம் பெற்றுச் சிறப்பாக கடமையாற்றியவர்.

அவரது பணியை முத்தமிழ் அறிஞர் கலைஞரே பாராட்டியுள்ளார்.திரு.செ.முத்துசாமி அனைத்துக் கட்சியினரிடமும், அமைச்சர்களிடமும் வேறுபாடின்றி பழகும் பக்குவம் பெற்றவர்.எப்பொழுதும் புன்முறுவல் பூத்த முகம்,மாறுபடினும் மரியாதை குன்றாத பேச்சு,இனிய செய்திகளை நினைவூட்டி மகிழவைத்து, ஆசிரியர் குறைகளை எடுத்துக்கூறி, தகுந்த முடிவுகளைக் காணச் செய்யும் திறமை, இவைதான் முத்துசாமியின் ஆளுமைத் திறனுக்கு அடிப்படையாகும்.

பேராசிரியர்.க.அன்பழகன்

ஆசிரியர் இயக்க வரலாறு நூலிலிருந்து
...செ.வடிவேலு .இயக்கத்தொண்டன்

அய்யா செ.மு வின் நிகரற்ற உழைப்பும்-தொண்டும்...

மரூர்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து,நைனாமலை பள்ளிப்பட்டி தனியாசிரியர் பள்ளியில் பணிதொடங்கிய செ.மு..

 படிப்படியாக ஆசிரியர் சங்கத்தின் பல பொறுப்புகளில் அனுபவம் பெறுகிறார்

.சேந்தமங்கலம் ஆசிரியர் மையச்செயலர்,

பள்ளிச் சீரமைப்பு மாநாட்டிற்கான சர்ச் செயலர்.

சேந்தமங்கலம் வட்டமாநாட்டுச் செயலர்

,நாமக்கல் வட்டத் தலைவர்,

சேலம் மாவட்டத்தில் தலைவர்,

மாநில செயற்குழு உறுப்பினர்

அஞ்சா நெஞ்சன் செ.மு

சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டாரத்தல் 1972ல் ஓலைப் பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவரை ஊராட்சி மன்றத் தலைவர் பள்ளியில் புகுந்து தாக்கிவிட்டார்.
காவல் நிலையத்தில் புகார் செய்தும்,ஒன்றிய ஆணையாளருக்கு விண்ணப்பம் கொடுத்தும் ஆசிரியருக்கு அரணாக இருக்க வேண்டியவர் முரணாக மாறினார்."கட்டபஞ்சாயத்து" செய்யத் துணிந்தார்.இதனால் ஆசிரியர்கள் கொதித்தெழுந்து ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து கண்டன ஊர்வலம் நடத்த முற்பட்டனர்.ஆளுங்கட்சியின்சட்டமன்ற உறுப்பினரும்,அதிகார வர்க்கமும் வேலைநிறுத்தம் மற்றும் ஊர்வலம் நடத்தக்கூடாது நடத்தினால் அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அச்சுறுத்தின

ர்.பொதுச்செயலாளர் செ.மு. சேலத்தில் கலெக்டரை சந்தித்து ஆசிரியர்கள் அராஜகவாதிகள் அல்ல தங்களது வேதனையை வெளிப்படுத்த அமைதி வழியில் கண்டன ஊர்வலம் நடத்துகின்றனர்.வன்முறை தூண்டப்படும்,

 துப்பாக்கி பிரயோகம் நடைபெறும் என அரசியல்வாதிகள் அச்சுறுத்துகின்றனர்.  துப்பாக்கி பிரயோகம் நடைபெறுமானால் முதல் பலி இந்த முத்துசாமியாகத்தான் இருப்பான் எனக் கூறிவிட்டு தாரமங்கலம் வந்தார்.மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் குவிந்தனர்.அடக்கு முறையை உடைத்தெறிந்து காண்போர் வியக்கும் படி கண்டன பேரணி நடத்தினார்.ஊர்வலத்தின் இறுதியில் ஒன்றிய அலுவலகத்தின் முன் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரவர்க்கத்தினரை கண்டித்து கர்ஜனை செய்தார். 

வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டிய அதிகாரிகள் அடங்கினர். அன்று நடைபெற்ற ஊர்வலம் பிற்காலத்தில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக அமைந்தது.அதிகார வர்க்கத்திற்கு அஞ்சாதவர் செ.மு.

செ.வடிவேலு.இயக்கத் தொண்டன்

ஆசிரியர்களுக்கு ஒரு அன்பளிப்பு செ.மு.

ஆசிரியர் சமூகம் குறிப்பாக தமிழகத்தில் காலப்போக்கில் சமூக சூழலால் பாதிக்கப்பட்டார்கள்."ஊருக்கு இளைத்தவன் பள்ளிக்கூட வாத்தியார்"என்பது பழமொழியாகிவிட்டது.அந்த ஆசிரியர் சமூகத்திற்காக உணர்வு பூர்வமாக ஏங்கி அழுதது ஓர் இதயம் சேந்தமங்கலம் என்ற சிற்றூரில் வாழ்ந்தாலும்  பரந்துபட்ட தமிழகத்தின் ஆசிரியர் சமூகத்தை மனதில் தேக்கி அடைகாத்து அந்த இதயம்.ஆசிரியர்களுக்காக வாழவேண்டும்.அவர்கள் நலனின்றி, தனக்கென்று தனி நலன் இல்லை" என்று வரிந்து கட்டிக் கொண்டு மதிய உணவுக்கு யார் பொறுப்பு?ஆசிரியர்களா?குடும்பகட்டுப்பாடா? யார் பொறுப்பு? ஆசிரியர்கள் என்ற நிலை ஏற்பட்ட போது உள்ளத்தில் புயலாய் தோற்றத்தில் தென்றலாய் எழுந்தது அந்த வேங்கை.சேலம் மாவட்டத்தில் சிற்றூர் பேரூர் அனைத்திலும் போர் முரசு கொட்டியது. சங்கநாதம் கேட்டு ஆசிரியர்கள் ஓர் அணியில் திரண்டார்கள்.
1970களின் பிந்திய ஆண்டுகள்!ஒரு பொதுவுடமைக் கட்சியின் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது ,சென்றேன் செ.மு.வுடன் பேச வேண்டும் ஆசிரியர்கள் கூறுகூறாக பிரிந்துக் கிடப்பது நல்லதல்ல அவர்கள் ஒன்று பட்டு போராடவேண்டும். அதற்காக-அவரிடம் பேச வேண்டும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள்"இது இயக்க கட்டளை" கட்டளை நிறைவேற்றப்பட்டது.அந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான திரு.நல்லசிவன் ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளரான செ.மு.விடம் பேசினார்.நாமக்கல்லில் ஓர் இரவு பூராவும் பேசினார்கள் முடிவு ஏற்படவில்லை. இயக்கத்தை கலந்து கொண்டு முடிவு சொல்வதாக கூறிவிட்டு திரு.நல்லசிவன் சென்று விட்டார்கள். பிறகு எம்.எல்.சி தேர்தல் வந்தது."செ.மு.வுக்கு எதிராக,மாற்று வேட்பாளரை கண்டுபிடியுங்கள்" இது இயக்கதின் அடுத்த கட்டளை!எம் .எல் .சி தேர்தல் வந்தது . "செ.மு.வுக்கு எதிராக மாற்று வேட்பாளரை கண்டுபிடியுங்கள்" இது இயக்கத்தின் கட்டளை!நான் நாமகிரிப்பேட்டை செல்கிறேன்.ஆசிரியர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒருவரை சந்திக்கிறேன்."செ.மு.வை தோற்கடிக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் சரியானவர் நீங்கள் எம்.எல்.சி.யானால் ஆசிரியர் சமூகத்திற்கு நல்ல சேவை செய்வீர்கள் வெற்றி பெறும் வாய்ப்பும் உங்களுக்கு பிரகாசமாக இருக்கிறது"என்று கூறினேன்.அந்த ஆசிரியர் பெயர் பழனிவேல்.அவர் கொஞ்சங்கூட செவி சாய்க்கவில்லை. செ.மு.வை விட கூடுதலாக சேவை செய்வதா? அது யாரால் முடியும்? நான் போட்டியிட தயாராக இல்லை என்று உறுதிபட கூறிவிட்டார்

திரு .பழனிவேல் அவர்களை தொடர்ந்து சந்தித்தேன்.வேட்பாளராகும்படி. வற்புறுத்தி வந்தேன்.திடீரென்று ஒரு நாள் செ.மு. என் அலுவலகம் வந்தார் ."நாமகிரிப்பேட்டை போனாயாமே ஒரு ஆசிரியரை சந்தித்துப் பேசினாயாமே"என்று கேட்டார்.நான் ஒப்புக்கொண்டேன். "என் மீது உனக்கு என்ன கோபம்? செ.மு.கேட்டார்.நீங்கள் ஜாதிப் பித்து பிடித்தவர்"தயக்கமின்றி பதில் சொன்னேன்."என்ன ஆதாரம்"என்று கேட்டார்."உங்களுக்கு அடுத்த படியாக ஒரு தலைமையை உருவாக்குகிறீர்கள்.திட்டமிட்டு உருவாக்குகிறீர்கள்.அவர் கொங்கு வேளாளர்"என்றேன்.

"யார் அவர்" செ.மு.கேட்டார்."உங்களுக்கு தெரியாதவரா அண்ணா?அவிநாசி சுவாமிநாதன் தான்"என்றேன்"அப்படியா?சுவாமிநாதனை வரச்சொல்கிறேன்"செ.மு.போய்விட்டார். சுவாமிநாதன். இரண்டொரு நாட்களில் வந்து சேர்ந்தார்."என்னை திட்டமிட்டு வளர்ப்பதாக செ.மு.வை குறை கூறினீர்களாமே"சுவாமிநாதன் கேட்டார்.

 "நான் கேள்விப்பட்டேன்"என்றேன்."அதுதான் கேட்கிறேன் உங்களிடம் யார் சொன்னார்கள்"என்று கேட்டார்."யார் சொன்னால் என்ன?"என்றேன்."நீங்கள் சொல்வதில் உண்மை இல்லையே!நான் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் அல்லவே!யாரோ உங்களிடம் தவறான செய்தி கொடுத்திருக்கிறார்கள்என்றார்.நான் வாயடைத்து போனேன்.
 தேர்தல் வந்தது.இரண்டு காங்கிரஸ் கட்சிகளும்,செ.மு.வை எதிர்த்தன.இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் செ.மு.வை.எதிர்த்தன.தி.மு.க .அ.தி.மு.க இரண்டும் எதிர்த்தன.மொத்தத்தில் அத்தனை அரசியல் கட்சிகளும்-ஒரு சேர எதிர்த்தனர்.ஆனாலும் வென்றார்! தமிழகத்தின் அரசியல் வரலாற்றில்-அது ஒரு திருப்பு முனை-அத்தனை அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு திரண்ட நிகழ்ச்சி.தோற்ற நிகழ்ச்சி.தமிழகத்தில் வேறோன்றில்லை.
அத்தனை அரசியல் கட்சிகளையும் தாண்டி,ஆசிரியர் சமூகம்,செ.மு.வை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது."என் கண்கள் திறந்தன"தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் ஒரு முறை சொன்னார்கள்.செ.மு.-விமர்சனத்தை ஏற்பவர்.என்று பாராட்டினார்கள்.

 குறைகளை சுட்டி காட்டினால்,அவர் எப்போதும் கோபித்ததில்லை!மாறாக மகிழ்ச்சியுற்றார்.ஆண்டவன் மீது எனக்கு நம்பிக்கையில்லை அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை முற்றிலும் நிறைவேற்ற முடியுமா?எனக்கு நம்பிக்கை இல்லை சமூகம் தானாக திருந்துமா,எனக்கு நம்பிக்கையில்லை நாட்டின் எல்லா தட்டுகளிலும் நேர்மை குறைந்து வருகிறது!நீதித் துறை உட்பட வருவாய்துறை-காவல்துறை-கல்வித்துறை.மற்றும் சமூகத்தின் எல்லா அங்கங்களும் அமுங்கத் துவங்கியுள்ளன.நேர்மையானவர்களின் நெஞ்சங்கள் படிப்படியாக தளர்ந்து கொண்டு வருகின்றன.
 ஆனால் செ.மு.வின் மீது எனக்குள்ள நம்பிக்கை எப்போதும் குறையவில்லை!சீசரின் மனைவியை சந்தேகப்பட முடியாது! செ.மு.வின் சமூகப் பணியும் அப்படிப்பட்ட தே!"ஆசிரியர்களுக்கு "மக்கள்"என்னும் ஆண்டவன் அளித்த நன்கொடை செ.மு-அன்பளிப்பு செ.மு-"அவரை எந்தக் கூட்டத்திற்கு அழைத்தாலும்,எந்தத் தலைப்பில் பேசினாலும்,எந்த இடத்தில் பேசினாலும்,யார் முன்னிலையில் பேசினாலும் ஆசிரியர்களின் கோரிக்கை பற்றிப் பேசாமல் விட்டதில்லை. "ஆசிரியர்கள்" அவரைப் போற்றிப் பாதுகாப்பதில் நியாயம் இருக்கிறது.

எழுதியவர்-செ.சுப்ரமணியம் Bsc,BL.
 வழக்கறிஞர்.நாமக்கல்.
தகவல்-செ.வடிவேலு.

தொலைநோக்கு உணர்வுடையவர் செ.மு

உதாரணமாக 1977லே ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என முழக்கமிட்டபொழுது, நம்மை ஏளனமாய் பார்த்தவர்கள்-மத்திய அரசு அதைக்கொள்கை யாக ஏற்று-"போனஸ் என்பது கொடுபடாத ஊதியமே-லாபத்தில் பங்கு அல்ல" என தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய பொழுது-
நமது பொதுச் செயலரின் தொலைநோக்கு உணர்வைக் கண்டு ஆசிரியர் உலகம் வியந்தது.

மத்திய அரசின் கொள்கையை ஏற்று மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு போனஸ்-வழங்கிய பொழுது,தூற்றிய வாய்கள் போற்றிப்பாட ஆரம்பித்தன.

ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை அரசுக்கு ஒப்படைப்பு செய்து ஆண்டிற்கொருமுறை ஊதியம் பெற வழிவகுத்தார்

.வீட்டுவாடகைப்படி என்றால் என்னவென்று அறியாத கிராமப்புற ஆசிரியர்களுக்கு"கிராம ஊக்கப்படி"என்ற பெயரில் வீட்டு வாடகைக்கான பாதையைக் கண்டவர் அய்யா செ.முத்துசாமி.

எழுதியவர்:
மறைந்த ஆசிரியர் நாமக்கல்சதீஷ்
 சேலம் மாவட்ட துணைச் செயலர்
தகவல்:செ.வடிவேலு.

விடிவெள்ளியாய் தோன்றி வழிகாட்டிய வித்தகர்_செ.மு

வெந்ததை தின்று விதியே என்று வாழ்ந்து வந்த தமிழக ஆசிரியர் சமுதாயத்திற்கு நமக்கும் உரிமைகள்  உண்டு என்பதை உணர்த்தியவர்.மாஸ்டர் கோடு கிழித்ததோடு நின்றுவிட்டார்.

    அதிலே பாதையை போட்டுக்காட்டியவர். தன்னை சார்ந்து நிற்கும் ஆசிரியர்கள் சுய மரியாதையோடு நிமிர்ந்து நிற்கவும்-அதிகார வர்கத்தோடு சரி நிகர் சமமாய் அமர்ந்து பிரச்சனைகளை வாதிடவும் பழக வேண்டும் என்பதை உணர்த்தி ஆசிரியர்களுக்கும் முதுகெலும்பு உண்டு என்பதை உலகிற்கு உணர்த்தியவர். இராமாயணத்தில் வாலி என்ற பாத்திரம்  உண்டு மிக உன்னதமான உயர்ந்த பாத்திரம் இராமனாலயே நேருக்கு  நேர் எதிர்கொள்ள முடியாத பாத்திரம் அது. அத்தகைய வாலியைப் போன்றவர் செ.மு.

அவரோடு நேருக்கு நேர்  நின்று வாதத்தில் யாரும் வொன்றது கிடையாது.அனைவரையும் தமது வாதத்திறமையால் வென்று காட்டியவர்.அதிகாரிகளாகட்டும் அமைச்சர்களாகட்டும்,
பிற இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகட்டும்-  
அவரது வாதத்தறனில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சட்ட முன் வடிவு கொண்டு வர பால் கமிட்டியிலும்,செலக்ட் கமிட்டியிலும் செ.மு. பாடுபட்டது அறிந்த ஒன்று.அதன் பின் சட்டம்  நிறைவேற்றப்பட்டு விதிகள் இயற்றப்படும் போது"நடத்தை விதிகள்" என்ற தலைப்பில் சில விதிகள் இயற்றப்பட்டன. அதில்"இன்சால்வென்சி கொடுத்த ஆசிரியர் பணியில் இருக்க தகுதியற்றவர் என்று ஒரு விதி இடம் பெற்று விட்டது.அந்த விதியை காட்டி ஒரு தனியார் பள்ளி நிர்வாகம்- தந்தை விட்டு சென்ற கடன் மகன் தலையில் ஏறிய காரணத்தால்,வேறு வழியின்றி-இன்சால்வென்சி கொடுத்த ஒரு ஆசிரியரை பழிவாங்க-பணி நீக்க ஓலை அனுப்பியது. 



அன்றைய தினம் திரு.பெருமாள் இயக்குநர்,செ.மு. எம்.எல்.சி.யாய் இருந்த சமயம். சட்ட மேலவையில் கல்வி மானியகோரிக்கை விவாதம் நடைப்பெற்றுக் கொண்டருந்தது."இன்சால்வென்சி"பிரச்சனை செ.மு. கவனத்திற்கு வந்ததும்,உடனடியாக அந்த விதியின் பாகத்தை சுட்டி காட்டி அவையிலே எரிமலையாய் கல்வித் துறையின் மீது பொரிந்து தள்ளினார்.
அவை மாடத்திலே அமர்ந்திருந்த இயக்குநர் இதைக் கேட்டு குறித்துக் கொண்டு போய்விட்டார்.

அவை முடிந்து இந்த பிரச்சனை தொடர்பாக இயக்குநரை சந்தித்த பொழுது "என்னங்க,முத்துசாமி!சபையில் எங்க மேலே குண்டு மழையாய் பொழிந்து விட்டீர்களே! நான் மாடத்தில் அமர்ந்து எல்லா வற்றையும் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்.நீங்கள் குறிப்பிட்ட அந்த விதி அநியாயமானது

எனவே அதனை நீக்கி ஆணையிட அரசுக்கு குறிப்புகளைக் அனுப்பி விட்டேன்.அந்த விதி நீக்கப்படும் என்று கூறினார்.நாமக்கல்லில் இதே  போல இராஜாஜி நிதியுதவிப் பள்ளி-என்ற தனியார் பள்ளி நிர்வாகம் பதினோரு ஆசிரியர்களை திட்டமிட்டு ஆட்குறைப்பின் காரணமாய் பணி நீக்கம் செய்ய முற்பட்ட பொழுது, அன்றைய நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு செ.புள்ளியப்பன் அவர்களை செ.மு.அணுகி பதினோரு ஆசிரியர்களுக்கும் ஒன்றிய பள்ளிகளில் ஒரே மாதத்தில் ஊதிய இழப்பின்றி பணி வாங்கிக் கொடுத்தார்.இது போன்ற பணிகள் ஏராளம்!!

எங்கிருந்தோ வந்தான்
இங்கிவனை யான் பெறவே 
என்ன தவம்
செய்து விட்டேன்"
நண்பனாய்,மந்திரியாய்,
நல்லாசிரியானுமாய்
பண்பிலே தெய்வமாய் ,
பார்வையிலே சேவகனாய்
 கண்ணை இமையிரண்டும் 
காப்பது போல் வண்ண முறக் 
காக்கின்றான்.
பாரதி கண்ணனை பாடியது 

போல் ஆசிரியர் சமுதாயத்தை வண்ணமுற காத்து வரும்
 செ.மு.
நூறாண்டு வாழ்க!வாழ்கவே!!

எழுதியவர்:நாமக்கல் மறைந்த ஆசிரியர் சதீஷ்
 சேலம் மாவட்ட துணைச் செயலாளர்

தகவல்-செ.வடிவேலு.