Tuesday 19 May 2020

ஆசிரிய சமுதாயத்திற்கு முதல்வர் செ.முத்துசாமி.


ஆசிரியர்களுக்கும் பல சங்கங்கள்!" ஆயிரம் உண்டிங்கு சாதி" என்று 
பாரதி பாடினானே...அது
போன்று! ஆனால் எல்லா பிரிவு ஆசிரியர்களும் ஒரு சங்கத்தில் இருக்கலாம் என்ற எண்ணத்தில்- உயர்நோக்கத்தில் மலர்ந்தது தானே- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி!
 முதன்முதலில்  இத்தகு பொதுப்பெயரில் சங்கம்அமைத்தவர்
நம் செ.மு.தானே! அதனால்தான் அவர் முதல்வர் செ.முத்துசாமி.

ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்- அதுவும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்- உயர்நிலைப்
பள்ளி ஆசிரியர்களால்
மதித்து போற்றி வரவேற்கப்பட்டு வெற்றி வாகை சூடி- சட்ட  மேலவை உறுப்பினராகத் திகழ்ந்ததில் முன்னோடி யார்? நம் செ.மு.தானே? அதனால் தான் அவர் முதல்வர் .

செ.முத்துசாமி! ஆசிரியர் சங்கங்களுக்குத் தலைநகரில்- அதுவும், மாநகரின் இதயமாய்த் திகழும் அண்ணாசாலையில், வான் முட்டும் உயரத்தில் கொடி பறக்கவிட்டு, சென்னை
நோக்கி வரும் ஆசிரியர்
பெருமக்களை வருக, வருக, இங்கே வந்து இருந்து உம் கடன் ஆற்றிச் செல்க என்று அக்கொடி அழைக்கும் விதத்தில்- முதன் முதலில் ஆசிரியர்களுக்காகக் கட்டிடம்-' செ.முத்துசாமி
அரங்கம்" கண்ட நன்முத்து-நம் செ.மு.அவர்கள் அல்லவா? அதனால் தான் அவர் முதல்வர்.


 செ.முத்துசாமி! தமிழகத்தின் சிற்றூர்கள், நகரங்களில் ஆசிரியர்களின் அவலக்
குரல் கேட்டு ஓடி வந்து, அவர்களின் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரைத் துடைக்க ஓடி வந்து- உதவும் தங்கமனம் பெற்ற தகைமையாளர் பட்டியலில் முதலிடம் பெறுபவர் வேறு யார்? நம் செ.மு.அன்றி- எனவே தான் அவர் முதல்வர் 


செ.முத்துசாமி.என் ஆருயிர் நண்பர் ஒருவர்- தமிழ்நாடு கூட்டணியின் மாவட்டப் பொறுப்பாளர்- அவரின்
மூச்சும், நினைப்பும் கூட்டணி அன்றி வேறல்ல என்ற கொள்கைச் செம்மல்! அவர் பள்ளி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்து போது- ஆயிரக்கணக்கில் நிதி உதவி, நீதி மன்றத்தில் அவருக்கு நியாயம் பெற்றுத் தந்து- ஆசிரியர் இயக்க வரலாற்றில் ஒரு புனிதக் கடமை ஆற்றிப்
பொலிந்து முதன்மைக் கண்டவர் நம் செ.மு.அல்லவா? அதனால் தான் இவர் முதல்வர் .

செ.முத்துசாமி! கணீர் கணீர் என்று- உண்மையின் ஊற்றாய்,
இடி முழக்கமாய், வீர உரை நிகழ்த்தி தலைவர்களுக்கெல்லாம்," துணிவுடைமை" நெறிகாட்டியவர் நம் செ.மு.தானே! அதனால்
தான் அவர் முதல்வர் 

செ.முத்துசாமி!

ஆக்கம்: கழுகுமலை வை.பூ.சோமசுந்தரம்.
மாவட்ட சட்ட செயலர்.
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.
தகவல்: செ.வடிவேலு.

No comments:

Post a Comment