Tuesday 26 May 2020

ஓய்வறியா சூரியன் அய்யா செ.மு வாழ்க நூறாண்டு _ செ.வடிவேலு

 60 ஆண்டுகள் என்ன இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆசிரியர் சமுதாயத்திற்கு சோர்வில்லாமல் உழைப்பதே என் லட்சியம் என்று சொல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய, இளமையில் நடந்த அதே வேக நடையை  85லும் நடக்கின்ற எங்கள் ஓய்வறியா சூரியன் செ.மு வாழ்க 
ஆசிரியர்  உள்ளங்களில் இடம் பிடித்து சோர்வில்லாமல்,  தொடர் பணியால்  இவருக்கு இணை  இவர் இன்றி வேறு ஒருவரும்   இல்லை என துணிந்து சொல்லுவோம் வரலாறு படைக்கின்ற எங்கள் பொதுச்செயலாளர் செ.மு வை வாழ்த்துவோம்

ஒரு சாதாரண தொண்டன் ஒரு இயக்கத்தில் இணைந்து தொய்வில்லாமல் பணியாற்றி உயர் நிலையை எய்துவதற்கு யார் காரணம் ?


அந்தத் தொண்டனை சரியாக பயன்படுத்தி அந்த். தொண்டனின் நிலையை அறிந்து பரிவு காட்டி அவன் பணிகளைப் பாராட்டி ஆக்க வழிகளில் ஊக்கமளித்து நெஞ்சுரம் கொடுத்து சோர்விலாது உழைக்க நண்பனாய் ,ஆசிரியராய், வழிகாட்டியாய்,  இருந்து நடத்த  நல்ல  தலைவன் வேண்டும் அந்த தலைவன் தான் நம் நாயகன் சேந்தை தந்த நல்முத்து.  செ.மு

 ஆசிரியர்களின் நாடி பிடித்துப் பார்த்து, அரசு அலுவலர்களின் போக்கு கண்டறிந்து, அமைச்சர்களிடம் நயமாகவும் ,நியாயமாகவும், வாதாடி, அறவழியில், போராடி, தன்னையே முதல் களப் போராளி ஆக்கி பெற வேண்டியதை ஆசிரியர்களுக்கு பெற்றே தீருவேன் என்று உறுதிபட செயல்படும் எங்கள் செயல்வீரர் செ.மு

69டிசம்பரில் கோரிக்கை மாநாடு சைக்கிள் பேரணி நடத்தி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகை படி* பெற்றுத்தந்தது* 

85 மீண்டும் ஒன்றிய நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் போக இருந்த கொடுமையை தடுத்து நிறுத்தியது 

மருத்துவப்படி ,மகப்பேறு, விடுப்பு தேர்வுநிலை, சிறப்புநிலை ,பணி விதிகள் மத்திய அரசுக்கு இணையான ஊதியம், 

 1_6 _88  க்குபிறகு பதவி உயர்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் சென்று வென்று அரசாணை 207 பெற்றுத் தந்ததும் அதன் மூலம் லட்சக் கணக்கில் ஊதியம் பெற்றுத் தந்ததும் ஆசிரின போராளி செ.மு

இயக்கத் தொண்டனின்  நிலையறிந்து ,பரிவு காட்டுபவர், தனிமனித ஒழுக்கத்திற்கு நிகர் அவரே, தான். ,
 ஈடு இணையற்ற வீரர் அவர் 
பேச்சால்  மூச்சால் இனம் காக்க போராடும்  தீரர்

அவர் சார்ந்திருக்கும் இனம்காக்க  சாவெனினும் ஏற்றிடும் பண்பாளர்
 அவர் இயக்கத்தை உலகுக்குக் வளர்த்து காட்டி நம் ஏக்கத்தைப் போக்கியவர்
* அவர் இன்னும் வக்கற்ற,  சமுதாயம் உரிமை பெற வழிகாட்டும் தலைவர் அவர்

 மனநலம் உடல்நலம் பெற்று இறுதி மூச்சுவரை ஆசிரியர் குறைதீர்க்கும் தலைவராய்   கல்வித் துறையை  சீர்திருத்தும் செம்மலாய்  நூறாண்டு வாழ்க வாழ்கவே
ஆக்கம்:-செ.வடிவேலு
பொதுச் செயலாளரின் நேர்முக உதவியாளர் நிர்வாக ஆசிரியர் 
ஆசிரியர் பேரணி
தகவல் 
சு .ம.பாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment