Thursday 28 May 2020

செ.மு.வுடன்- வசந்தகால நினைவுகள்...

" வயதில் அறிவில் முதியார்- என்றும் வாய்மைப் போருக்கு இளையார்- அவர்தான் தந்தை பெரியார்" என்றார் பாவேந்தர்.

             தொடக்கப் பள்ளி ஆசிரியர் சமுதாயம் ஒன்றாக இருந்த காலக் கட்டத்தில் பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமிக்கு உதவியாளனாக இருந்தது ஒரு கால கட்டம் .அவரோடு இணைந்து- ஆசிரியர் மையங்கள் தோறும் சென்று ஆசிரியர்களிடையே ஒரு உணர்வையும்-  உள்ளுணர்ச்சியையும் உண்டாக்கியது- ஒரு கால கட்டம்.
         அவரின் சேவை நமக்குத் தேவை என்று அவரை மேலவைக்கு அமரவைத்து( MLC)அவரோடு உழைத்தது- ஒரு காலகட்டம்
            .தனி ஒரு மனிதன் சாதிக்காததை சங்கங்கள்தான் சாதிக்க முடியும் என்று இந்த சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக அவரோடு இணைந்து உழைத்தது- ஒரு கால கட்டம். 
             நமது செயல்- சொல்- எண்ணம் ஆகியவை அனைத்தையும் இந்த சமுதாயத்திற்கு என அர்ப்பணித்தார்- என்னுடைய பசுமையான நினைவுகளில்-1965 ல் முத்துகாபட்டி- சண்முகர் சோலை பொதுக்குழு-1969 ல் பெரியார் திடல் கோரிக்கை மாநாடு- மிதிவண்டிப் பேரணி- என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
                   நாமக்கல்- என்றால் ஆசிரிய சமுதாயத்திடையே மூன்று பேர்கள் நினைவுக்கு வருவார்கள்- மா.மு( மேனாள் அமைச்சர் மா.முத்துசாமி) செ.மு. ஆ.மு. இந்த சமுதாயத்திற்கு மறைந்த மா.மு.வும் நானும் தினையளவு நலம் செய்தவர்கள்- அமரர் இராமசாமி ரெட்டியாரும்-செ.முத்துசாமியும் பனையளவு நலம் செய்தவர்கள்.
             இந்த சமுதாய நலனுக்காக அல்லும்- பகலும் அயராது- உழைக்கும் அவருக்கும் மாநில மாநாட்டிற்கும் எனது அன்பான இனிய வாழ்த்துக்கள்.

எழுதியவர்:- மறைந்த ஆறு.முத்துசாமி,
 ஆசிரியர்.
சேந்நமங்கலம்.

தகவல்:- செ.வடிவேலு.

No comments:

Post a Comment