Friday 15 May 2020

நீங்காத நினைவுகள்*(செ. முத்துசாமி உடன் நான் இயக்க தொண்டாற்றிய காலங்கள்) க. பழனியாண்டி திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர்

1968இல் திண்டுக்கல் அங்குவிலாஸ் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெற்றது  தேர்தலில் எல்லன்னா மாநில தலைவராகவும் திரு செ .முத்துசாமி பொதுச்செயலாளராகவும் கோ .அப்புகுட்டி பொருளாளராகவும் ஓரணியில் போட்டியிட்டனர்
மற்றொரு அணியில்  மாநில தலைவராக,, இ. ராமையா தேவரும் , திரு அப்துல் மஜீத் பொதுச் செயலாளராகவும், மாநில பொருளாளராக க .பழனியாண்டி. ஆகிய நானும்  மற்றொரு அணியில் போட்டியிட்டோம்

 மாநில தலைவராக  திரு  எல்லண்ணாவும்   திரு செ .முத்துசாமி பொதுச் செயலாளராகவும், கோ.அப்புக்குட்டி மாநில பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
              இராமையா தேவரின் ஆதரவாளர்களான.  நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம்1969 டிசம்பரில் சென்னை பெரியார் திடலில் மாநில கோரிக்கை மாநாடு நடைபெற்றது மாநாட்டு செயலாளராக செ.முத்துசாமி பணியாற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் இம்மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் வந்து கலந்து கொண்டனர் இம்மாநாட்டில் கோரிக்கைகளை விளக்கி செ.  முத்துசாமி வீர முழக்கமிட்டு எழுச்சிமிக்க உரையாற்றி ஆசிரியர்களின் உள்ளத்தில் இடம் பெற்று அவர்களை கவர்ந்தார்.
 இந்த சூழ்நிலையில் 1970இல் கோவை சேலம் தர்மபுரி நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் அடங்கிய மேலவை காண ஆசிரியர் தொகுதியில் துணிச்சலாக   ,,செல்வாக்கு மிக்க ஒருவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்

        மேலவையில் வெற்றி பெற்ற செ. முத்துசாமி  அனைத்து நிலை ஆசிரியர்களின் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைகளை ஆணித்தரமாக வலியுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று பல்வேறு அரசாணைகளை பெற்றுத் தந்தார் 
ஆசிரியர்கள் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் மக்கள் தொடர்பான பொது பிரச்சனைகளையும் முன்வைத்து பலனைப் பெற்றுத் தந்துள்ளார்
ஆசிரிய முத்துசாமி மேலவை உறுப்பினராக இருந்த காலத்தில் மேலவை தலைவராக   சிந்தனைச் சிற்பி சிபி சிற்றரசு ,தமிழரசுக் கழகத் தலைவர் மா .பொ .சிவஞானம் ஆகியோர் இருந்தனர் 
               இந்த காலத்தில் மேலவை உறுப்பினர் களாக  ஏ. பி. ஜனார்த்தனம்  .இசைமுரசு நாகூர் அனிபா  ..திரைப்பட பாடலாசிரியர் கு.மா. பாலசுப்பிரமணியன் , சிறந்த எழுத்தாளர்ஏ. கே.வில்வம்,  பேராசிரியர் கஅறிவழகன்   ,குன்றக்குடி அடிகளார் , தென்னரசு போன்ற நாடறிந்த புகழ் மிக்கவர்கள் இருந்தனர்

                      1 970  ஆசிரியதின  நாள் அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆசிரியர் கூட்டணி இதழ் வெளியிடப்பட்டது அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் வெளியிட மாஸ்டர் இரா.முண்ணி பெற்றுக்கொண்டார் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  அதிகாரபூர்வ  நாளேடான ஆசிரியர் கூட்டணி இதழ் இன்று வரை செ. முத்துசாமி  அவர்கள் பெயரில் தான் உள்ளது

 1971 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது  அப்போது மதுரை ஜே.எஸ் ராசு அவர்கள் தன்னிச்சையாக பெருந்தலைவர் காமராஜரிடம் பேசி காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,,

 கூட்டணி சேர இருக்கிறது என்று சொல்லி இரண்டு இடங்கள்  போடி மற்றும் மதுரை மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்டு  அப்போது மாநில தலைவராக இருந்த வர் போடி தொகுதியிலும்   இவர் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது

 1974இல் அதாவது. _ 28_ 4_ 1975  இல் திருச்சி தேவர் மன்றத்தில் திருச்சி மாவட்ட மாநாடு நடத்தினோம் அதில் அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார் அப்போதிருந்த ஒருங்கிணைந்த மாவட்டம் திருச்சி கரூர் பெரம்பலூர்,புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது மாவட்டத்தில் 39 ஊராட்சி ஒன்றியங்கள் 6 நகராட்சிகளை , கொண்ட 45 கிளைகளை கொண்டதாகும் . இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டு திருச்சி மாநகரமே.  குலுங்கியது இதில் மாநில பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பொதுச் செயலாளர் செ. முத்துச்சாமி மாநாடு சிறப்பாக நடைபெற்றதை பாராட்டினார் 

ஆசிரியர் கூட்டணி பெயர் மாற்றம் புதிய ஆசிரியர் கூட்டணிக்கு பெயரை முன்மொழிந்தவர் யார்

நாளை தொடரும்

No comments:

Post a Comment