Thursday 28 May 2020

எந்த நாளை நினைக்கட்டும்? செ.மு.வின் இணையில்லா உழைப்பில்!!.

கரைபடியா கரமே! களங்கமில்லா உள்ளமே!

நான், தங்களின் இணையில்லா உழைப்பில் எந்த நாளை நினைக்கட்டும்,
தங்களின் ஏற்றமிகு பணியின் எந்த இடம் சுட்டி கூறட்டும்

.திகைக்கிறேன்- திகைக்கிறேன், தீஞ்சுவை கற்கண்டை சுவைத்திடும் எறும்பு போல் திகைக்கிறேன். 

ஆம் கற்கண்டின் சுவைதான் எந்த புறம் அதிகம்- குறைவு என்றுண்டே! அதுபோல் தாங்கள் ஆசிரியச் சமுதாய பேரினத்திற்கு ஆற்றிய அற்புத செயல்பாட்டினைத் தான் எடுத்துக் கூறிட, நான் என்ன மரியாதைக்குரிய மாஸ்டர் இராமுண்ணிப்பெரியவரா? மரியாதைக்குரிய இராமசாமி ரெட்டியாரா?அல்லது தங்களிடம் பயிற்சி பெற்று அவ்வப்போது தாங்களும் பெரியவர்களே என்று சென்றிட்ட பேதமை பெரியவர்களா!

                 அன்று முதல் இன்றுவரை எம் தலைவனின் திருவடிச்சுவட்டினை சுற்றிச் சுற்றி வந்து இயக்கத்தினை வட்டாரத்தில் ஏற்றமிகு நிலையில் வைத்திருக்கும் தொண்டர்க்கடியேன்! தலைமையையும், இயக்கத்தையும் தொழுது எழுதுகிறேன்.

            தலைவன் செ.மு.வின் தனிச்சிறப்பு:-
1. காடையாம்பட்டி சீனிவாசன் இயக்கம் மாறிய போதும், இனிய முகத்துடன் பொன்னாடை அணிவித்து புகழுரை நல்கினார்
.
.2.ஓமலூர் வட்டாரத்தில் வைப்புநிதிக்கடன் வழங்காத திரு.துரைசாமி ஆணையரைக் கண்டித்ததோடு அய்யோ பாவம்! உங்களுக்கெல்லாம் பெண்குழந்தைகளோ என்று ஏக்கப்பட்டார்?.

3. தாரமங்கலத்தில் தாக்கப்பட்ட தலைமையாசிரியர் கோதண்டனுக்கு ஆதரவு காட்டி ஊர்வலம் நடத்தி, அரியபுத்திரமுதலியார் பூங்காவில் ஆற்றிய பேருரையை நினைக்கிறேன்.

4. மேலவை தேர்தலுக்கு வாக்குகேட்க அரசு பொறியியல் கல்லூரிக்குச் சென்ற பொழுதுதான் எம்.எல்.சி.முத்துசாமி கறை படியாக் கரம் என்றார்கள் கல்லூரி பேராசிரியர்கள், அதனை நினைக்கிறேன்

.5. ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி கிறிஸ்தவ சகோதரிகள் 40 வாக்கும் உங்கள் தலைவனுக்கே, இதுபோன்ற உத்தமன் உண்டோ எனக்கூறி தேர்தல் நிதியாக ₹270 வழங்கியதை நினைக்கிறேன்.

எத்தனையோ ஆற்றல்மிகு செயலினை எந்த ஆட்சியாக இருந்தாலும்,
ஆசிரியப்பேரினத்திற்கு பெற்றுத் தந்த எம் தலைவன் பல்லாண்டு வாழ்க!

 பல நன்மைகளைப் பெற்றுத்தந்த எம் தலைவன் பல்லாண்டு வாழ்க! 
என வாழ்த்துகிறேன்.

எழுதியவர்:- திரு.ப.தாண்டான்.எம்.ஏ;பி,எட்.
துணை செயலர். 
சேலம் மாவட்டம்.

பொன் விழா மலர்.07-10-1995.
தகவல்:- செ.வடிவேலு

No comments:

Post a Comment