Tuesday 5 May 2020

ஆசிரியர்களுக்கு ஒரு அன்பளிப்பு செ.மு.

ஆசிரியர் சமூகம் குறிப்பாக தமிழகத்தில் காலப்போக்கில் சமூக சூழலால் பாதிக்கப்பட்டார்கள்."ஊருக்கு இளைத்தவன் பள்ளிக்கூட வாத்தியார்"என்பது பழமொழியாகிவிட்டது.அந்த ஆசிரியர் சமூகத்திற்காக உணர்வு பூர்வமாக ஏங்கி அழுதது ஓர் இதயம் சேந்தமங்கலம் என்ற சிற்றூரில் வாழ்ந்தாலும்  பரந்துபட்ட தமிழகத்தின் ஆசிரியர் சமூகத்தை மனதில் தேக்கி அடைகாத்து அந்த இதயம்.ஆசிரியர்களுக்காக வாழவேண்டும்.அவர்கள் நலனின்றி, தனக்கென்று தனி நலன் இல்லை" என்று வரிந்து கட்டிக் கொண்டு மதிய உணவுக்கு யார் பொறுப்பு?ஆசிரியர்களா?குடும்பகட்டுப்பாடா? யார் பொறுப்பு? ஆசிரியர்கள் என்ற நிலை ஏற்பட்ட போது உள்ளத்தில் புயலாய் தோற்றத்தில் தென்றலாய் எழுந்தது அந்த வேங்கை.சேலம் மாவட்டத்தில் சிற்றூர் பேரூர் அனைத்திலும் போர் முரசு கொட்டியது. சங்கநாதம் கேட்டு ஆசிரியர்கள் ஓர் அணியில் திரண்டார்கள்.
1970களின் பிந்திய ஆண்டுகள்!ஒரு பொதுவுடமைக் கட்சியின் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது ,சென்றேன் செ.மு.வுடன் பேச வேண்டும் ஆசிரியர்கள் கூறுகூறாக பிரிந்துக் கிடப்பது நல்லதல்ல அவர்கள் ஒன்று பட்டு போராடவேண்டும். அதற்காக-அவரிடம் பேச வேண்டும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள்"இது இயக்க கட்டளை" கட்டளை நிறைவேற்றப்பட்டது.அந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான திரு.நல்லசிவன் ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளரான செ.மு.விடம் பேசினார்.நாமக்கல்லில் ஓர் இரவு பூராவும் பேசினார்கள் முடிவு ஏற்படவில்லை. இயக்கத்தை கலந்து கொண்டு முடிவு சொல்வதாக கூறிவிட்டு திரு.நல்லசிவன் சென்று விட்டார்கள். பிறகு எம்.எல்.சி தேர்தல் வந்தது."செ.மு.வுக்கு எதிராக,மாற்று வேட்பாளரை கண்டுபிடியுங்கள்" இது இயக்கதின் அடுத்த கட்டளை!எம் .எல் .சி தேர்தல் வந்தது . "செ.மு.வுக்கு எதிராக மாற்று வேட்பாளரை கண்டுபிடியுங்கள்" இது இயக்கத்தின் கட்டளை!நான் நாமகிரிப்பேட்டை செல்கிறேன்.ஆசிரியர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒருவரை சந்திக்கிறேன்."செ.மு.வை தோற்கடிக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் சரியானவர் நீங்கள் எம்.எல்.சி.யானால் ஆசிரியர் சமூகத்திற்கு நல்ல சேவை செய்வீர்கள் வெற்றி பெறும் வாய்ப்பும் உங்களுக்கு பிரகாசமாக இருக்கிறது"என்று கூறினேன்.அந்த ஆசிரியர் பெயர் பழனிவேல்.அவர் கொஞ்சங்கூட செவி சாய்க்கவில்லை. செ.மு.வை விட கூடுதலாக சேவை செய்வதா? அது யாரால் முடியும்? நான் போட்டியிட தயாராக இல்லை என்று உறுதிபட கூறிவிட்டார்

திரு .பழனிவேல் அவர்களை தொடர்ந்து சந்தித்தேன்.வேட்பாளராகும்படி. வற்புறுத்தி வந்தேன்.திடீரென்று ஒரு நாள் செ.மு. என் அலுவலகம் வந்தார் ."நாமகிரிப்பேட்டை போனாயாமே ஒரு ஆசிரியரை சந்தித்துப் பேசினாயாமே"என்று கேட்டார்.நான் ஒப்புக்கொண்டேன். "என் மீது உனக்கு என்ன கோபம்? செ.மு.கேட்டார்.நீங்கள் ஜாதிப் பித்து பிடித்தவர்"தயக்கமின்றி பதில் சொன்னேன்."என்ன ஆதாரம்"என்று கேட்டார்."உங்களுக்கு அடுத்த படியாக ஒரு தலைமையை உருவாக்குகிறீர்கள்.திட்டமிட்டு உருவாக்குகிறீர்கள்.அவர் கொங்கு வேளாளர்"என்றேன்.

"யார் அவர்" செ.மு.கேட்டார்."உங்களுக்கு தெரியாதவரா அண்ணா?அவிநாசி சுவாமிநாதன் தான்"என்றேன்"அப்படியா?சுவாமிநாதனை வரச்சொல்கிறேன்"செ.மு.போய்விட்டார். சுவாமிநாதன். இரண்டொரு நாட்களில் வந்து சேர்ந்தார்."என்னை திட்டமிட்டு வளர்ப்பதாக செ.மு.வை குறை கூறினீர்களாமே"சுவாமிநாதன் கேட்டார்.

 "நான் கேள்விப்பட்டேன்"என்றேன்."அதுதான் கேட்கிறேன் உங்களிடம் யார் சொன்னார்கள்"என்று கேட்டார்."யார் சொன்னால் என்ன?"என்றேன்."நீங்கள் சொல்வதில் உண்மை இல்லையே!நான் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் அல்லவே!யாரோ உங்களிடம் தவறான செய்தி கொடுத்திருக்கிறார்கள்என்றார்.நான் வாயடைத்து போனேன்.
 தேர்தல் வந்தது.இரண்டு காங்கிரஸ் கட்சிகளும்,செ.மு.வை எதிர்த்தன.இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் செ.மு.வை.எதிர்த்தன.தி.மு.க .அ.தி.மு.க இரண்டும் எதிர்த்தன.மொத்தத்தில் அத்தனை அரசியல் கட்சிகளும்-ஒரு சேர எதிர்த்தனர்.ஆனாலும் வென்றார்! தமிழகத்தின் அரசியல் வரலாற்றில்-அது ஒரு திருப்பு முனை-அத்தனை அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு திரண்ட நிகழ்ச்சி.தோற்ற நிகழ்ச்சி.தமிழகத்தில் வேறோன்றில்லை.
அத்தனை அரசியல் கட்சிகளையும் தாண்டி,ஆசிரியர் சமூகம்,செ.மு.வை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது."என் கண்கள் திறந்தன"தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் ஒரு முறை சொன்னார்கள்.செ.மு.-விமர்சனத்தை ஏற்பவர்.என்று பாராட்டினார்கள்.

 குறைகளை சுட்டி காட்டினால்,அவர் எப்போதும் கோபித்ததில்லை!மாறாக மகிழ்ச்சியுற்றார்.ஆண்டவன் மீது எனக்கு நம்பிக்கையில்லை அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை முற்றிலும் நிறைவேற்ற முடியுமா?எனக்கு நம்பிக்கை இல்லை சமூகம் தானாக திருந்துமா,எனக்கு நம்பிக்கையில்லை நாட்டின் எல்லா தட்டுகளிலும் நேர்மை குறைந்து வருகிறது!நீதித் துறை உட்பட வருவாய்துறை-காவல்துறை-கல்வித்துறை.மற்றும் சமூகத்தின் எல்லா அங்கங்களும் அமுங்கத் துவங்கியுள்ளன.நேர்மையானவர்களின் நெஞ்சங்கள் படிப்படியாக தளர்ந்து கொண்டு வருகின்றன.
 ஆனால் செ.மு.வின் மீது எனக்குள்ள நம்பிக்கை எப்போதும் குறையவில்லை!சீசரின் மனைவியை சந்தேகப்பட முடியாது! செ.மு.வின் சமூகப் பணியும் அப்படிப்பட்ட தே!"ஆசிரியர்களுக்கு "மக்கள்"என்னும் ஆண்டவன் அளித்த நன்கொடை செ.மு-அன்பளிப்பு செ.மு-"அவரை எந்தக் கூட்டத்திற்கு அழைத்தாலும்,எந்தத் தலைப்பில் பேசினாலும்,எந்த இடத்தில் பேசினாலும்,யார் முன்னிலையில் பேசினாலும் ஆசிரியர்களின் கோரிக்கை பற்றிப் பேசாமல் விட்டதில்லை. "ஆசிரியர்கள்" அவரைப் போற்றிப் பாதுகாப்பதில் நியாயம் இருக்கிறது.

எழுதியவர்-செ.சுப்ரமணியம் Bsc,BL.
 வழக்கறிஞர்.நாமக்கல்.
தகவல்-செ.வடிவேலு.

No comments:

Post a Comment