Saturday 23 May 2020

செ.மு.வை மறக்க முடியுமா?

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கட்சியானாலும், இயக்கமானாலும் மாறும் பச்சோந்திகள் வாழும் இக்கால கட்டத்தில் தொடர்ந்து பொதுச்செயலாளராக பொறுப்போற்று இயக்கப்பணி ஆற்றியதும்,  அந்த தலைமையுடன் தொடர்ந்து இயக்கப்பணி ஆற்றுவதும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களுக்கு சிறப்பாகும்.

             தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்புச் செயலாளராகவும், தென் ஆர்க்காடு மாவட்டச் செயலாளராகவும் சீரிய முறையில் செயலாற்றிய வரும், தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்றவருமான அமரர் திரு.த.சின்னத்தம்பி அவர்கள் பணிகாலத்திலும் சரி பணி ஓய்வு பெற்ற பிறகும் ஏன்? தன் உயிர் பிரிவதற்கு 10 நிமிடங்கள் முன்வரை கூட நமது பொதுச்செயலாளரின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்கள்.

                         அதுமட்டுமல்ல தான் இறந்த பிறகு தன் நினைவு நாளில் தன் திருவுருவ படத்தை திரு.செ.முத்துசாமி அவர்களை கொண்டுதான் திறக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளார் என்றால் பொதுச்செயலாளர் மீது அவர் வைத்திருந்த பற்றையும், பாசத்தையும் காட்டும் நெஞ்சுருக செய்யும் நினைவாகும். இந்நிகழ்ச்சி பொதுச்செயலாளர் அவர்கள் ஆசிரியர்களின் ஆயுள் காலம் வரை ஏன் ஆசிரியர்கள் மறைவுக்குப் பிறகும் அவர்கள் நினைவை போற்றுவதும் குடும்பநலனில் அக்கறை காட்டுவதும் மறக்க முடியாத உண்மையாகும்.இந்நிகழ்ச்சி நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.

ஆக்கம்: மறைந்த திரு.கோ.அழகானந்தம்

.மேனாள் மாநில அமைப்புச் செயலர்.
கண்டமங்கலம் வட்டாரம்
.விழுப்புரம் மாவட்டம். 

தகவல்: செ.வடிவேலு.

No comments:

Post a Comment