Monday 18 May 2020

ஒப்பற்ற தலைமை-செ.மு....( பகுதி2)

மேலவையில் அவரது பேச்சைக் கேட்டு சொக்கியவர்களும் உண்டு! சிக்கியவர்களும் உண்டு! ஆசிரியர்கள் பிரச்சனை என்றால் பாதை ஓரமானாலும் சரி பாராளுமன்ற வளாகமாக இருந்தாலும் சரி எங்கும் அவர் சிந்தனை இச் சமுதாயத்தைப் பற்றியே தான் சுழலும்.டெல்லியில்ஆட்சி பீடத்தில் இருந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னின்று கோரிக்கைகளை நெஞ்சு நிமிர்ந்து கோரிக்கை வைத்த போது கூட சிறிதும் அச்சமோ- கூச்சமோ இல்லாமல் நின்றார்! பிரச்சனைகளை வாதாடுவதிலும் விளக்குவதிலும் அவருக்கு நிகர் அவரே! செ.முத்துசாமி என்ற ஆலமரத்திலிருந்துதான் பல்வேறு கிளைகள் உருவாகி உள்ளன!
அறுவைக்கு ஆள் பிடித்து வா என அரசு ஆணை பிறப்பித்த போது பல போராட்டங்களில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர் பணியின்றி எதனையும் செய்யாது என அரசு தரப்பிலிருந்து ஆணை பெற்ற தலைமை இது! 1982- ல் சத்துணவு விலகல் போராட்டம்! நாம் பெற்ற சுதந்திரம் அது ஆசிரியர்கள் நாயினும் கேடாக மதிக்கப்பட்டு- சந்தேகப்
பார்வைகளால் தன்மானத்தை இழந்து தவித்த நேரம்! ஆசிரியர்
கூட்டணி அதற்காக பட்ட
அல்லல்கள் கொஞ்சமா?
எந்த சங்கமும் துணிந்து அரசை எதிர்க்காத நேரம் செ.மு. மட்டுமே இந்த போராட்டத்தின் ஆணிவேர்! மாவட்டங்களில் கரும்புச் சின்னம் அணிந்து மவுன ஊர்வலங்கள்! ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றால் நாம் அந்த பணியிலிருந்து விடுபட்டோம்! நம்மால் 31,000 சத்துணவு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்!
எத்தனை மாநாடுகள்! கருத்தரங்குகள் உரிமைகளை மட்டும் பெற வேண்டும் சலுகைகளை மட்டும் அனுபவிக்க வேண்டும் என்பதல்ல செ.மு.வின் முழக்கம்! கல்வி வளர பல கருத்தரங்குகள் நடத்தினார்.ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்ய வற்புறுத்துவார்.அவரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் காலத்தால் அழியாதவை.காலம் கடந்தாலும் அவரது கோரிக்கைகள் என்றாவது வெற்றி பெற்றே தீரும்! ஆசிரியர்களுக்கு போனஸாக என கேலி செய்தவர்களை தன் வாதத்தால் போனஸ் வழங்க செய்தவர்கள்.இளநிலையில் காலம் காலமாக இருந்தவர்களை இடைநிலை ஆசிரியர்களாக மாற்ற செய்தவர்.தலைமை ஆசிரியர்களுக்கு தனிப்படி என்று கோரிக்கை வைத்து அதனையும் பெற செய்தார் .அவரால் ஆசிரியர் சமுதாயம் பெற்ற பலன்கள் ஒன்றல்ல! இரண்டல்ல!
சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு பொருளாதார ரீதியில் பெருமை தேடித் தந்தவர்.விழுந்து கிடந்த சமுதாயத்தை வீறு கொண்டு எழச்செய்த சாதனை செம்மல் செ.முத்துசாமி! அவர் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம்! அவர் தலைமையில் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம்! செயல்வீரரே! வாழிய பல்லாண்டு!
ஆக்கம்: மறைந்த எம்.ஐ.ஏ.அக்கீம், மேனாள் வட்டார செயலாளர், திருச்செங்கோடு.
தகவல்: செ.வடிவேலு.

No comments:

Post a Comment