Tuesday 5 May 2020

விடிவெள்ளியாய் தோன்றி வழிகாட்டிய வித்தகர்_செ.மு

வெந்ததை தின்று விதியே என்று வாழ்ந்து வந்த தமிழக ஆசிரியர் சமுதாயத்திற்கு நமக்கும் உரிமைகள்  உண்டு என்பதை உணர்த்தியவர்.மாஸ்டர் கோடு கிழித்ததோடு நின்றுவிட்டார்.

    அதிலே பாதையை போட்டுக்காட்டியவர். தன்னை சார்ந்து நிற்கும் ஆசிரியர்கள் சுய மரியாதையோடு நிமிர்ந்து நிற்கவும்-அதிகார வர்கத்தோடு சரி நிகர் சமமாய் அமர்ந்து பிரச்சனைகளை வாதிடவும் பழக வேண்டும் என்பதை உணர்த்தி ஆசிரியர்களுக்கும் முதுகெலும்பு உண்டு என்பதை உலகிற்கு உணர்த்தியவர். இராமாயணத்தில் வாலி என்ற பாத்திரம்  உண்டு மிக உன்னதமான உயர்ந்த பாத்திரம் இராமனாலயே நேருக்கு  நேர் எதிர்கொள்ள முடியாத பாத்திரம் அது. அத்தகைய வாலியைப் போன்றவர் செ.மு.

அவரோடு நேருக்கு நேர்  நின்று வாதத்தில் யாரும் வொன்றது கிடையாது.அனைவரையும் தமது வாதத்திறமையால் வென்று காட்டியவர்.அதிகாரிகளாகட்டும் அமைச்சர்களாகட்டும்,
பிற இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகட்டும்-  
அவரது வாதத்தறனில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சட்ட முன் வடிவு கொண்டு வர பால் கமிட்டியிலும்,செலக்ட் கமிட்டியிலும் செ.மு. பாடுபட்டது அறிந்த ஒன்று.அதன் பின் சட்டம்  நிறைவேற்றப்பட்டு விதிகள் இயற்றப்படும் போது"நடத்தை விதிகள்" என்ற தலைப்பில் சில விதிகள் இயற்றப்பட்டன. அதில்"இன்சால்வென்சி கொடுத்த ஆசிரியர் பணியில் இருக்க தகுதியற்றவர் என்று ஒரு விதி இடம் பெற்று விட்டது.அந்த விதியை காட்டி ஒரு தனியார் பள்ளி நிர்வாகம்- தந்தை விட்டு சென்ற கடன் மகன் தலையில் ஏறிய காரணத்தால்,வேறு வழியின்றி-இன்சால்வென்சி கொடுத்த ஒரு ஆசிரியரை பழிவாங்க-பணி நீக்க ஓலை அனுப்பியது. 



அன்றைய தினம் திரு.பெருமாள் இயக்குநர்,செ.மு. எம்.எல்.சி.யாய் இருந்த சமயம். சட்ட மேலவையில் கல்வி மானியகோரிக்கை விவாதம் நடைப்பெற்றுக் கொண்டருந்தது."இன்சால்வென்சி"பிரச்சனை செ.மு. கவனத்திற்கு வந்ததும்,உடனடியாக அந்த விதியின் பாகத்தை சுட்டி காட்டி அவையிலே எரிமலையாய் கல்வித் துறையின் மீது பொரிந்து தள்ளினார்.
அவை மாடத்திலே அமர்ந்திருந்த இயக்குநர் இதைக் கேட்டு குறித்துக் கொண்டு போய்விட்டார்.

அவை முடிந்து இந்த பிரச்சனை தொடர்பாக இயக்குநரை சந்தித்த பொழுது "என்னங்க,முத்துசாமி!சபையில் எங்க மேலே குண்டு மழையாய் பொழிந்து விட்டீர்களே! நான் மாடத்தில் அமர்ந்து எல்லா வற்றையும் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்.நீங்கள் குறிப்பிட்ட அந்த விதி அநியாயமானது

எனவே அதனை நீக்கி ஆணையிட அரசுக்கு குறிப்புகளைக் அனுப்பி விட்டேன்.அந்த விதி நீக்கப்படும் என்று கூறினார்.நாமக்கல்லில் இதே  போல இராஜாஜி நிதியுதவிப் பள்ளி-என்ற தனியார் பள்ளி நிர்வாகம் பதினோரு ஆசிரியர்களை திட்டமிட்டு ஆட்குறைப்பின் காரணமாய் பணி நீக்கம் செய்ய முற்பட்ட பொழுது, அன்றைய நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு செ.புள்ளியப்பன் அவர்களை செ.மு.அணுகி பதினோரு ஆசிரியர்களுக்கும் ஒன்றிய பள்ளிகளில் ஒரே மாதத்தில் ஊதிய இழப்பின்றி பணி வாங்கிக் கொடுத்தார்.இது போன்ற பணிகள் ஏராளம்!!

எங்கிருந்தோ வந்தான்
இங்கிவனை யான் பெறவே 
என்ன தவம்
செய்து விட்டேன்"
நண்பனாய்,மந்திரியாய்,
நல்லாசிரியானுமாய்
பண்பிலே தெய்வமாய் ,
பார்வையிலே சேவகனாய்
 கண்ணை இமையிரண்டும் 
காப்பது போல் வண்ண முறக் 
காக்கின்றான்.
பாரதி கண்ணனை பாடியது 

போல் ஆசிரியர் சமுதாயத்தை வண்ணமுற காத்து வரும்
 செ.மு.
நூறாண்டு வாழ்க!வாழ்கவே!!

எழுதியவர்:நாமக்கல் மறைந்த ஆசிரியர் சதீஷ்
 சேலம் மாவட்ட துணைச் செயலாளர்

தகவல்-செ.வடிவேலு.

No comments:

Post a Comment