Monday 25 May 2020

மூன்று தலைமுறை கண்டவர்!நான்காவது தலைமுறையும் காண்பார்- செ.மு.

                  இயக்க நிறுவனர் இராமுண்ணிக்குப் பின் தற்போதுள்ள ஆசிரியர் சமுதாயம் 3 வது தலைமுறையாகும்.இராமுண்ணி காலத்து தலைமுறையைச் சார்ந்தவர்களில் பலர் காலமாகி, மிகப் பலர் ஓய்வு பெற்று, இரண்டாம் தலைமுறை இயக்கங்களில் பங்கேற்று, அவர்களிலும் பலர் ஓய்வு பெறும் காலம் நெருங்கி உள்ளது. தற்போதுள்ளது மூன்றாவது தலைமுறை.
இந்த மூன்று தலைமுறைகளையும் தொடர்புகொண்டு பணியாற்றியவர், பணியாற்றிக் கொண்டு வருபவர்பொதுச்செயலர் திரு.செ.முத்துசாமி அவர்கள் மட்டுமே ஆக செ.முத்துசாமி அவர்கள் மூன்று தலைமுறை கண்டவர். நான்காவது தலைமுறையைக் காணஉள்ளவர்.
                   இதனால் தெளிவாகத் தெரிந்து கொள்வது ஒன்று.மூன்று தலைமுறைகளாக ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பாடுபட்டு வருபவர் செ.முத்துசாமி அவர்கள் மட்டுமே.வேறு எந்த ஒரு சங்கத்துக்கும் இந்தப் பெருமை கிடையவே கிடையாது என்பது பேருண்மை.
                          மத்தியில் பல அரசுகள் மாறியது.தமிழ் நாட்டிலும் பல அரசியல் மாற்றங்கள் நடந்து முடிந்தன.டெல்லியில் பிரதமர்களும், சென்னையில் முதல்வர்களும் மாறினர்.ஆனால் இத்தனை பேர்கள் மாறியும், அத்தனை அமைச்சர்களோடு மத்தியிலும், மாநிலத்திலும் வாதாடிப் போராடி ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளைப் பெற்றுத்தந்த பொதுச்செயலாளர் என்ற பெருமை செ.முத்துசாமி அவர்களையே சாரும்.
                                 நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் அமுலில்இருந்தபோது, சர்வகட்சிகளும் சப்தநாடி ஒடுங்கி ஊர்வலமோ பொதுக்கூட்டமோ நடத்த முடியாத நிலை இருந்த போதும், எழுத்துக்கும் பேச்சுக்கும் தணிக்கை இருந்தபோது, சகல சங்கங்களும் சாமத்து தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியாத நிலையில் இருந்த போதும், நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்கள்மட்டுமே போராட்ட அறிவிப்பை வெளியிட்டு கோரிக்கையைப் பெற்று தந்த பெருமை இவரது துணிச்சலுக்கு இன்றும் கட்டியம் கூறி நிற்கிறது.
                                      இனிவரும் தலைமுறை ஆசிரியர்கள், இயக்கப் பணியாற்றி, வளர்ச்சிமிகு மேன்மைக்கு வழிகாட்டியாகக் கொள்ள வேண்டுமென்றால், அது திரு.செ.முத்துசாமியாகத்தான் இருக்க முடியும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
எழுதியவர்: திரு.வி.சி.மகாவிஷ்ணு.
மேனாள் மாநில துணைப் பொதுச்செயலாளர்.
15 வது மாநில மாநாடு சிறப்பு மலரிலிருந்து 13-08-2000.
தகவல்: செ.வடிவேலு.

No comments:

Post a Comment