Sunday 17 May 2020

*ஒப்பற்ற தலைமை-செ.மு..*பகுதி_1

ஒரு காலத்தில் ஆட்சியாளர்களின் உத்திரவு களை ஏற்று அடிமைகளைப் போல் வாழ்ந்து அதிகாரிகளால் கேவலமாக நடத்தப்பட்டு- பொட்டுப் பூச்சிகளாய்- நான்கு சுவர்களுக்குள் தன் கடமையை செய்து கொண்டு கைகட்டி சேவகம் செய்த ஆசிரியர் சமுதாயத்தை
" *வேங்கையே வெளியே வா, உன்* *ஆற்றல் என்ன என்று நிருபி, நீ பெற்ற* *உரிமைகளை பெறத்* *தயங்காதே"* என தமிழகத்தின் பள்ளிகளில் வீர முழக்கமிட்டு ஆசிரிய சமுதாயத்தை எழிச்சிபெறச் செய்து அவனை உயர்த்திக் காட்டிய செ.முத்துசாமி என்பவரையும் எந்த வரலாற்று ஆசிரியனும்
மறந்து விட மாட்டான்.
கொல்லிமலை அடிவாரத்தில் ஒரு சாதியான விவசாயகுடும்பத்தில் பிறந்து- ஆசிரியனாகப்
பணியை துவக்கி, *ஆசிரியர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும்* *கொடுமைகளை எண்ணி தன்னை அச்சமுதாயத்திற்காகவே* *ஒப்படைக்கச் செய்த*
*வீர மறவன்* பொதுவாழ்வில்
ஈடுபடும் தலைமைக்கு சில பல அடையாளங்கள் உண்டு! அரசியல்வாதிகளின் ஆணவப் போக்கால் ஆட்சி மாற்றங்களே ஏற்பட்டதுண்டு! பெண் பொன் ஆசைகளால் சரிந்த சாம்ராஜ்ஜியங்கள் உண்டு. பொதுவாழ்வு என்பது புனித கங்கை! அங்கே சபலங்கள் சஞ்சரிக்கக் கூடாது.இலட்சியங்களை லட்சங்களுக்கு விற்க என்றும் எவரும் தலைமைக்கு ஆசைப்படக் கூடாது. பொதுச்செயலாளர் செ.மு ஒரு விதிவிலக்கு!
கடமை தவறாதவர்- காட்சிக்கு எளியர்- சொல்லில் உறுதி- சமுதாயத்திற்கு எங்கு தீங்கிழைக்கப்படுகிறதோ அங்கு இருப்பார்! *கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்றான் கண்ணன் அதுபோல் அநியாயங்கள்- அக்கிரமங்கள்- நடந்தால் ஓடிவருவார்!*
அவரது பேச்சாற்றலையும், உழைப்பையும் ஒழுக்கத்தையும் அவரைக் கண்டு *அரசியல் வலையில் சிக்க வைக்க முயன்ற பெருந்தலைகள் தோற்றனர்!* ஆசிரியர்களுக்காகவே
தன்னை அர்பணித்து கொண்டவர்!
*" போற்றுவோர் போற்றட்டும் புழிதிவாரி*
*தூற்றுவோர் தூற்றட்டும்*
*எற்றதொரு கருத்தை* *எனதுள்ளம் ஏற்குமாயின் எவர்* *வரினும் நில்லேன்! அஞ்சேன்!* என தனது புனித பயணத்தை தொடர்கிறார்...
( நாளையும் தொடரும்)
*ஆக்கம்: மறைந்த எம்.ஐ.ஏ.அக்கீம்,மேனாள் வட்டாரச் செயலாளர்*
திருச்செங்கோடு.
தகவல்: செ.வடிவேலு.

No comments:

Post a Comment