Sunday 17 May 2020

*உயிருக்கு அஞ்சாத உத்தம தலைவர் அய்யா செ.மு*


சேலம் மாவட்டத்தின் வடகோடி வட்டமான காடையாம்பட்டி வட்டார    பண்ணப்பட்டி  பள்ளியில் பணியாற்றி  வந்த ஆசிரியர்  வையாபுரி எந்த தவறும் செய்யாத அப்பாவி வட்டார பெருந்தலைவர் வெங்கடாசலம் என்பவர் சொந்த காரணங்களால் பள்ளி நேரத்தில் பாடம் கற்பித்துக் கொண்டிருந்த வேளையில் பள்ளியில் நுழைந்து ஆசிரியரை செருப்பால் அடித்து விட்டு ஓடி விட்டார் இவர் ஒரு  குடிகார்ர்

சிறிது நேரத்தில் ஊர் முழுவதும்.  வட்டாரம் முழுவதும்  செய்தி பரவியது   வட்டார பொறுப்பாளர்கள் மனம் குமுறினர் உள்ளூரில் செல்வாக்குமிக்க பெருந்தலைவரை எதிர்க்க இயலாமல்   தத்தளித்தனர் பெருந்தலைவரை  தட்டி கேட்க ஆளில்லை சேந்தமங்கலத்திற்குச்  செய்தி பறந்தது  
செ.மு.  உள்ளம் பதறி ஓடி வந்தார்  காடையாம்பட்டிக்கு வட்டார பொறுப்பாளர்களையும் ஆசிரியர்களையும் அடிப்பட்ட  ஆசிரியரையும் நேரில் சந்தித்து பேசி உண்மை   நிலையை விவரமாக  அறிந்து பெருந்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார் செய்திதாள்களில் போராட்ட செய்திகள் வந்தன 

அண்டை  வட்டாரங்கள் ஓமலூர் ,தாரமங்கலம், சேலம் நகரம்,  அயோத்தியாபட்டினம் போன்றவற்றிலிருந்து ஆசிரியர்கள்  திரண்டன  வரலாற்றில் இதுவரை நடந்திராத வகையில் 200 சைக்கிள்கள்  500 ஆசிரிய ஆசிரியைகள் உடன் கண்டன பேரணி நடத்தினார்   அய்யா செ.மு.
  தீவட்டிப்பட்டி ,திண்ணப்பட்டி, நடுபட்டி , காடையாம்பட்டி என எட்டு கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலம் முடிவில் பெருந்தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடத்தி தனக்கே உரித்தான சிம்மக் குரலில் எடுத்துரைத்தார் அய்யா செ.மு

ஊர் செல்வாக்குப் பெற்றிருந்த பெருந்தலைவர்.  தமது  இன மக்களுடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர் இனத்துக்கு   எதிராக மிரட்டல் விடுத்தார்  செ.முத்துசாமி அவர்கள் காடையாம்பட்டியில் முகாமிட்டார்   எட்டு நாட்கள் தொடக்கப் பள்ளி கட்டிடத்திலேயே  படுத்து இருந்தார்    போராட்டம் வலுவடைந்தது.  ஆசிரியரை அடித்தது தவறுதான் என பொதுமக்கள் பேச ஆரம்பித்தனர்.  இரு தரப்பினருக்கும் பஞ்சாயத்துப் பேசி சமாதானம் செய்ய ஊர் பெரியவர்கள் முடிவெடுத்தனர் 

 ஊர் தலைவர் பெருமாள் பண்ணாடி.  தூதுவிட்டார் நாளை காலை பஞ்சாயத்து விசாரணை என்றார்  சம்மதித்த பொதுச் செயலாளர்  பஞ்சாயத்தில் பெருந்தலைவரை நாற்காலியில் உட்கார வைத்து விசாரணை செய்தால்    வையாபுரி ஆசிரியரையும் அதேபோல் நாற்காலியில் உட்கார வைத்து விசாரணை செய்ய வேண்டும் இல்லையேல் பஞ்சாயத்து இல்லை என்றார்

வந்த்தே  பண்ணாடிக்கு  கோபம் *என்ன தம்பி நீ பள்ளிகூடத்தில் தானே படுத்து தூங்குகிறாய் என்ன ஆகும் தெரியுமா*  என்று மிரட்டினார்

அஞ்சாநெஞ்சன் ஆற்றல்மிகு இளைஞர் நமது பொதுச்செயலாளர் என்ன சொன்னார் தெரியுமா  *என்ன ஆகும் நாளை மாலை முரசு தினத்தந்தி பேப்பர் களில் செ.முத்துசாமி கொலை செய்யப்பட்டார் என்று தானே வரும் என் உயிர் போவது ஒரு முறை தான்  இவ் உயிர் ஆசிரியர்களின் மானம் காக்க நியாயம் கேட்டதற்காக  போனது என்றால் போகட்டும் என் உயிர் போனால் நாளை ஆயிரம் முத்துசாமிகள் வருவார்கள் அதற்கு இந்த அரசும் இப்பகுதி மக்களும் பதில் சொல்லி ஆக வேண்டும்*    என்று வீர முழக்கமிட்டார் இருள்.  சூழ்ந்து மக்கள் கலைந்தனர்   பொழுது விடிந்தது    பொதுமக்கள் முன்னிலையில் பெருந்தலைவர் மன்னிப்பு கேட்டார்     தன் வீட்டைவிட்டு குடும்பத்தை விட்டு காடையாம்பட்டியில்  எட்டு நாட்கள் தங்கி உயிரைத் துச்சமாகக் கருதி துணிச்சலுடன் செய்த அருஞ்செயல் ஐயாவின் உடைய வரலாற்றில் ஒரு பெரும் வரலாற்று சாதனையாகும்

தகவல்
எம்.செங்கோடன்
சேலம் மாவட்ட முன்னாள் செயலாளர்

No comments:

Post a Comment