Thursday 28 May 2020

செ.மு.வின்- அர்பணிப்பு வாழ்க்கை-- --

        தொடக்கக்கல்வி இயக்கம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை அதன் வரலாற்றை ஆய்வு செய்தால் ஆசிரியர் நலனுக்காக தன்னை முழுக்க முழுக்க அர்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவர் திரு.செ.முத்துசாமி அவர்கள்.
          உண்மை, நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்று  போற்றத்தகுந்த கொள்கைக்காக வாழ்ந்து வருபவர்.வாய்ப்பு கிடைத்தால் MLA;ஆகலாம்;MP;ஆகலாம், மந்திரி ஆகலாம்; வாரியத் தலைவர் ஆகலாம்; சொத்து வாங்கலாம்; சுகபோக வாழ்க்கை வாழலாம் என்றநிலையெல்லாம் வந்து வலைவிரித்த போதெல்லாம் வளைந்திடாத மாபெரும் மனிதர் செ.மு

          கலைஞரின் அசைக்க முடியாத ஆட்சிக் காலத்திலும்; எம்.ஜி.ஆரின் அசைக்க முடியாத ஆட்சிக் காலத்திலும் ஆளுவோர்கள் ஆசை வார்த்தைகளை காட்டினர், அசைந்தாரா? இல்லை.பதவிகள் காட்டி விலை பேசினர், விலையானாரா? இல்லை, இல்லவே இல்லை.

              இயக்கங்கள் சபலத்தாலும், சாதி, மத,      இன அரசியல் காரணங்களாலும் தூண்டப்பட்ட காலங்களிலும், விபீடணர்களால் விமர்சிக்கப்பட்ட காலங்களிலும் தன் இலட்சியங்களால்" ஒரு தலைசிறந்த மாலுமி" போல் இயக்கத்தை வழி நடத்தி வெற்றி பல கண்டவர்.

விருப்பு, வெறுப்பு இல்லாமல் பொதுவாழ்வில் நின்று இயக்கங்களையும்; இயக்கத்தலைவர்களையும் ஆய்வு செய்தால் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத மாபெரும்  ஆசிரியர் இன வழிகாட்டி நம் இயக்க பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தான்.

அவர் வாழ்வே ஆசிரியர்களுக்காகவே

வாழும் வாழ்வு! ஓர் அர்ப்பணிப்பு வாழ்வு! அவர் வாழ்க! அவர் வழியில் நம் பணி தொடர்க.....

எழுதியவர்:-
 காசி.தனபாலன், எம்ஏ பிஎட்
.நீடாமங்கலம் வட்டார செயலாளர்.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:- செ.வடிவேலு.

No comments:

Post a Comment