Wednesday 20 May 2020

*மனிதருள் மாமனிதர் செ.மு._ ப ழ .ராமசாமி கரூர்

மருந்து கேட்டு விண்ணப்பித்திருந்த உங்கள் மனுவை தொடர்புடைய அமைச்சருக்கு அனுப்பி விட்டோம் இன்னும் பதில் வரவில்லை வழக்கம்போல் அமைச்சரின் பொறுப்பாளர் பொறுப்பாக பதில் சொன்னார்
ஓராண்டா ...ஈராண்டா... இந்த பதிலை கடந்த மூன்று ஆண்டுகளாக மாதமிருமுறை கேட்டு கேட்டு என் காதுகள் மருத்துவிட்டன.

நேரமோ உச்சிப் பொழுது சர்க்கரை நோய் சிக்கல் பண்ண ஆரம்பித்தது பசியும் படபடப்பும் இணைந்து என்னை வாட்டின . கண்கள் மூடிய நிலையில் இருந்த என்னை வாஞ்சையுடன் ஒரு கை தொட்டது நிமிர்ந்து பார்த்தேன் .

தொட்டவர் அவர் உள்ளம் போல் வெள்ளுடை தரித்திருந்தார் இரு வரிசைப் பற்கள் பிரிந்து புன்னகையை வெளிப்படுத்தின அந்த மாமனிதர் எனக்கு வேண்டியவர்  என்பதை விட பல்லாயிரக்கணக்கான ஆண் பெண் இருபாலருக்கும் தலைமையேற்று அவர்களுக்குரிய உரிமைகளை மாநாடு கூட்டி அல்லது அரசிடம் போராடி பெற்றுத் தரும்  ஓர் இயக்கத்தின் பொறுப்பான பொதுச்செயலாளர் என்பதே சிறப்பு 

என் துணைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது உயிர்காக்க உண்ண வேண்டிய மிக உயர்ந்த நிலையில் உள்ள *Cycloseforing* மருந்தை அரசிடம் இருந்து இலவசமாக  பெற அலையும்  நிலையை அழாக் குறையாக அவரிடம் சொல்லி வேதனைப்பட்டேன்

அட...டா.  எனக்கு தெரியாதே.  .... என்று வருந்தி என்னை தூக்கி நிறுத்தி   முதலில் சாப்பிடுவோம் என்று கைத்தாங்கலாக பிடித்தபடி கீழே உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார் உணவுக்குப் பிறகு இலவசமாக மருந்து பெற உரிய ஆவணங்களை வாங்கி கொண்டு படியில் ஏறி மேல் நோக்கிச் சென்றார் 

சில மணித்துளிகள் கழிந்தன   சிரித்துக் கொண்டே வந்தவர் * *இனி கவலை வேண்டாம் விரைவில் மருந்துக்கான அரசாணை உங்கள் வீடு தேடி வரும்* இது தொடர்பாக.  இ ங்கு   வந்து அலைய வேண்டாம் என்று என்னிடம் ஆறுதல் சொல்லி விடைபெற்றார் 

நான் மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டேன்  என்னுடைய தலைவர், மற்றும் பேராயக் கட்சி தலைவர்கள் , கரூர் சட்டமன்ற பேராயக் கட்சி உறுப்பினர்   ஆகிய இவர்கள் எல்லாம் நேரடியாகவும் தத்தம். தனி அலுவலர்கள் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் முதல்வரை மருந்து தொடர்பாக அணுகியபோது   வழுக்கு மரம் ஏறி.  வழுக்கி விழுந்த கதைதான். விடையாக வந்தது   நிலைமை இப்படி இருக்க இவரால் மட்டும் எப்படி முடியும் ??என் சிரிப்பின். பொருள் இது தான் 

சரியாக இருபது நாட்கள் கடந்தன.  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில்   இருந்து திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை சென்று   உயிர் காக்கும் *சைக்ளோஸ்போரின்* மருந்து மூன்று மாத காலத்திற்கு பெற்றுக்கொள்ளவும்.  என்று சிபாரிசு செய்தவர் பெயரும் குறிப்பிடப் பட்டிருந்தது  என்னால்   நம்ப முடியவில்லை     இருந்தாலும்   ஆதாரம் கையில் உள்ளதே!


 மருந்து கிடைக்க உதவியவர்  திசை நோக்கி எழுந்து நன்றியுடன் நின்றேன்   *இன்பம் துன்பம் வந்தாலும் கண்ணீர்  கொட்டுவது   தானே கண்களின் பணி* என் கண்களும் நீண்ட நேரம் அதனையே செய்தன 

எப்படி இவர் மட்டும் வழுக்கு மரம் ஏறி வெற்றி பெற்றார்? திறமையா?  ஒரு உயிரை காக்க வேண்டும் என்ற வெறியா? அல்லது தனிப்பட்ட செல்வாக்கா? இன்றுவரை விடை அறியேன் .

வந்த அரசு ஆணையை மேற்கோள் காட்டியே தொடர்ந்து ஆண்டிற்கு 9 மாதம் இலவசமாக மருந்து வாங்கி என் துணைவியை காப்பாற்றி வருகிறேன்

 உரிய காலத்தில் உதவிய
 அந்த எளிய மனிதர்   இந்த எளியவனை  மீண்டும் ஒரு முறை அழைத்து அறுசுவை உணவு படைத்து   வழி செலவுக்கு நிதியும் கொடுத்தார்   அந்த மனித நேய பற்றாளர். யார். என்று அறிந்து கொள்ள ஆவல் வந்துவிட்டதா?? 

 இமயத்தில் விற் கொடியை பறக்கவிட்ட  சேரன் செங்குட்டுவன் போல தமிழகத்தின் தலைநகரில் வானளாவிய மாளிகையில் தன் இயக்க கொடியை ஏற்றியவர்    ஆமாம்     

அவர் தான் செ.மு.   என்று நம்மால் செல்லமாக அழைக்கப்படும் 
செ. முத்துசாமி   அவர்கள் அவருடைய  பணியினால் இது ஒரு வரலாற்றுச் சாதனையாக இடம்பெற்றிருக்கிறது

No comments:

Post a Comment