Tuesday 5 May 2020

அன்றொரு நாள்... அய்யா செ.மு

அய்யா செ.மு.அவர்கள் சேலம் மாவட்ட செயலாளராக பணியாற்றியகாலம்  காடையாம்பட்டி வட்டாரம் அன்றொரு நாள் இவ்வட்டாரத்தில் ஒரு தவறும்  செய்யாத ஆசிரியர் ஒருவரை அவ்வட்டாரத்தின் பெருந்தலைவர் பண்ணப்பட்டி பள்ளியில் சென்று செருப்பால் அடித்து விட்டு சென்று விட்டார்.

இதை தட்டிக் கேட்க ஆள் இல்லாத நேரம் செய்தியை கேள்விபட்டு பதறி ஓடிவந்தார்.நடந்ததை விசாரித்து பெருந்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டு, அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றுதிரட்டி வரலாறு காணாத பேரணி நடத்திகோஷங்கள்களை போட்டு ஆசிரியர்களின் அவலநிலையை ஊர் பொதுமக்கள் மத்தியில் தனக்கே உரிய சிம்மக்குரலில் எடுத்துக் கூறினார்.
செல்வாக்குப் பெற்றிருந்த பெருந்தலைவர் பொதுமக்களை ஒன்று சேர்த்து மிரட்டல் கடிதங்கள்-கொலை செய்துவிடுவோம் என்ற மிரட்டல் வார்த்தைகளை வீசினர்.அஞ்சாத செ.மு.அவர்கள் என்ன சொன்னார் தெரியுமா? என் உயிர் போவது ஒரு முறைதான் அது இவ்வட்டார ஆசிரியர்களின் நியாயத்திற்கு என் உயிர் மடியட்டும் .

அதை மனதார வரவேற்கிறேன்.ஒன்று நிச்சயம்!என் உயிர் முடிந்தால் நாளை  ஆயிரம் முத்துசாமியின் வருவார்கள்.அதற்கு இந்த அரசும் பொதுமக்களும்  பதில் சொல்லியாக வேண்டும் என்று வீர முழக்கமிட்டார்.பொது மக்கள் உண்மையை உணர்ந்தனர்.செல்வாக்கு மிகுந்த பெருந்தலைவர் பொது மன்னிப்பு கேட்டார்.ஆசிரியர்களின் அவலநிலையை போக்கி ஆசிரியர்களின் தன்மானத்தை நிலைநாட்டியவர் அண்ணன் செ.மு. இது வரலாறு.

செ.வடிவேலு. இயக்கத்தொண்டன்.

No comments:

Post a Comment