Tuesday 5 May 2020

அஞ்சா நெஞ்சன் செ.மு

சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டாரத்தல் 1972ல் ஓலைப் பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவரை ஊராட்சி மன்றத் தலைவர் பள்ளியில் புகுந்து தாக்கிவிட்டார்.
காவல் நிலையத்தில் புகார் செய்தும்,ஒன்றிய ஆணையாளருக்கு விண்ணப்பம் கொடுத்தும் ஆசிரியருக்கு அரணாக இருக்க வேண்டியவர் முரணாக மாறினார்."கட்டபஞ்சாயத்து" செய்யத் துணிந்தார்.இதனால் ஆசிரியர்கள் கொதித்தெழுந்து ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து கண்டன ஊர்வலம் நடத்த முற்பட்டனர்.ஆளுங்கட்சியின்சட்டமன்ற உறுப்பினரும்,அதிகார வர்க்கமும் வேலைநிறுத்தம் மற்றும் ஊர்வலம் நடத்தக்கூடாது நடத்தினால் அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அச்சுறுத்தின

ர்.பொதுச்செயலாளர் செ.மு. சேலத்தில் கலெக்டரை சந்தித்து ஆசிரியர்கள் அராஜகவாதிகள் அல்ல தங்களது வேதனையை வெளிப்படுத்த அமைதி வழியில் கண்டன ஊர்வலம் நடத்துகின்றனர்.வன்முறை தூண்டப்படும்,

 துப்பாக்கி பிரயோகம் நடைபெறும் என அரசியல்வாதிகள் அச்சுறுத்துகின்றனர்.  துப்பாக்கி பிரயோகம் நடைபெறுமானால் முதல் பலி இந்த முத்துசாமியாகத்தான் இருப்பான் எனக் கூறிவிட்டு தாரமங்கலம் வந்தார்.மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் குவிந்தனர்.அடக்கு முறையை உடைத்தெறிந்து காண்போர் வியக்கும் படி கண்டன பேரணி நடத்தினார்.ஊர்வலத்தின் இறுதியில் ஒன்றிய அலுவலகத்தின் முன் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரவர்க்கத்தினரை கண்டித்து கர்ஜனை செய்தார். 

வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டிய அதிகாரிகள் அடங்கினர். அன்று நடைபெற்ற ஊர்வலம் பிற்காலத்தில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக அமைந்தது.அதிகார வர்க்கத்திற்கு அஞ்சாதவர் செ.மு.

செ.வடிவேலு.இயக்கத் தொண்டன்

No comments:

Post a Comment