Sunday 1 November 2020

1973 ல் கோவையில் நடை பெற்ற வெள்ளி விழா மாநாட்டில் பொதுச் செயலர் படைத்த மாநாட்டு அறிக்கை ஒரு காலப் பெட்டகம் . 25 ஆண்டுகளுக்கு முந்தைய நமது நிலையையும் , இயக்க வளர்ச்சியையும் ஒப்பிட்டு நோக்கும் . காலக் கண்ணாடி , அது மட்டுமல்ல . அன்றைய கோரிக்கை கல்வி வாரியம் அன்றைய கொள்கை அரசியல் சார்பற்றது . 25 ஆண்டுகளுக்கு முன்பே எத் தனை தெளிவான கண்ணோட்டத்துடன் பொதுச் செயலர் செ.மு. அறிக் கை படைத்துள்ளார் என்பது வரலாறு ! இதோ அந்த அறிக்கை ! நீங்களும் படித்து மகிழ மறுபதிப்பாகிறது

மாநில பொதுச் செயலாளர் அளித்த வெள்ளி விழா மாநாட்டு அறிக்கை

 1973 ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 21 ஆம் நாள் கோவை நகரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில வெள்ளி விழா மாநாட்டில் பொதுச் செயலரால் படைக்கப் பட்ட அறிக்கை , இன்று தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 25 ஆண்டுகளைக் கடந்து விட்டது . இவ்வியக்கம் தமிழ்நாடெங்கிலும் அங்கிங்கெனாது எங்கும் நிறைந்து காணப்படும் வளர்ச்சி பெற்ற மாபெரும் அமைப்பாகத் திகழ்கின்றது . ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி உயர்ந்து நிற்கிறது . இதைக்கண்டு பூரிப்போரும் உண்டு , பொறாமை கொள்வோரும் உண்டு . இவ்வியக்கத்திற்கென உண்டாகி விட்ட 25 ஆண்டு கால வரலாறும் வரலாற்றுத் திருப்புமுனைகளும் , அதன் பயனாய் கேட்பாரற்று , மதிப்பாரற்று கிடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் சமுதாயம் பெற்ற நன்மைகளும் ஏராளம். தொடக்கப் பள்ளி ஆசிரியர் இனம் இவ்வியக்கத்தைப் பேணிக் காத்து அதன் பயனைப் பெற்றும் வருகிறது . தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளியில் பணி புரியும் எந்த ஆசிரியனும் இவ்வியக்கத்தை அறியாமலில்லை , நான்கு சுவருக்குள்ளே இந்த நாட்டின் எதிர்காலத்தை , தலை விதியை ப் படைக்க வல்லது இச்சமுதாயம் . ஜெர்மானிய மக்களெல்லாம் தன்னைப் பாராட்டத்திட்டம் வகுத்த இட்லர் பயன்படுத்தியது ஆசிரியர்களைத்தான் . இதன் மூலம் தன் நாட்டை வளர்த்து உலகம் கண்டு அஞ்சிய தளபதியாய்த் திகழ்ந்தான் . ஏன் மறைந்த மாமேதை அறிஞர் அண்ணா சொன்னார் , மாநில ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய பின் , ஆசிரியர்கள் தான் இந்த ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படை வகுத்தவர்கள் . நான் என்றும் மறவேன் அவர்களை உள்ளத்திலே சுமந்து ஓர் உருவம் கோட்டையில் உலாவி வரும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றார்கள் . இவையெல்லாம் சிறப்புகள் . இவற்றைப் பேசுவதால் பயன் ஏதும் ஆகப் போவதில்லை . இவைகள் எல்லாம் உண்மைகள் என்பதற்காகவே குறிப்பிடுகிறேன் இயக்கத் தோற்றத்தையும் 25 ஆண்டு கால சாதனையின் பட்டியலையும் ஓரளவு தந்து விட்டு , இன்றைய அளவின் தேவைகளையும் , அரசு செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைக்க விரும்புகிறேன்

Friday 10 July 2020

செ.மு.வின் பேரும் புகழும்.எழுதியவர்:- ஆர்.அருள்ராஜ் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்.

தர்மபுரி மாவட்டச் செயலாளர்
வை.பிரகலாதன்
அவர்களின் மகன் பாபு
என்பவருக்கு விருதுநகர் சிவகாசி
* ஜானகி அய்யன் நாடார்*கல்லூரியில்
எம்.எஸ்.சி.மைக்ரோ
பயாலஜி வகுப்புக்கு
இடம் கிடைக்க கல்லூரி
முதல்வர் அவர்களிடம்
கேட்டோம்.நான்(ஆர்.அருள்ராஜ்) தூத்துக்குடி மாவட்டச்
செயலர் என்றும்,அவர்
தர்மபுரி மாவட்டச்
செயலர் என்றும் அறிமுகம்
கப் படித்திக் கொண்டோம்.அப்பொழுது கல்லூரி முதல்வர்
நமது இயக்கம் பற்றியும்
பொதுச்செயலர் செ.மு பற்றியும் கேட்டறிந்தார்.மிகக் குறைந்த இடங்களே
ஒதுக்கப்பட்ட அந்தப்
பட்ட படிப்பிற்கு மனுக்கள் ஏராளமாக
குவிந்திருந்தது.நுழைவுத் தேர்வும் நடத்தப்பட்டது.நுழைவுத்
தேர்விலும் பாபு நன்கு
தேர்வு எழுதி தேர்ச்சி
பெற்றுவிட்டான்.ஆனாலும் இடம் கிடைக்குமோ!கிடைக்காதோ!என்ற
ஐயம்.திடீரென எங்களுக்கு அழைப்பு
வந்தது.நானும்
(ஆர்.அருள்ராஜ்) பிரகலாதனும் முதல்வர்
அறைக்குள் சென்றோம்.
முதல்வர் அவர்கள்
பையனுக்கு இடம்
கொடுத்துள்ளேன்.
கல்லூரியில் சேர்ந்து
விடுங்கள் என்று சொன்ன போது எங்கள்
மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை.இது பொதுச்
செயலர்செ.மு.வுக்கு
கிடைத்த வெற்றி.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல
எங்களுக்கு அதில் ஒரு
துளி இடம் அவ்வளவுதான்.இதனுடைய பெரும் பங்கு
செ.முத்துசாமி
அவர்களையே சேரும்.
என்பதில் ஐயமில்லை.
எழுதியவர்:-
ஆர்.அருள்ராஜ்
தூத்துக்குடி மாவட்டச்
செயலாளர்.
தகவல்:-
செ.வடிவேலு

செ.மு.வின் அணுகுமுறையும் சாதுர்யமும்-எழுதியவர்:- ஆர்.அருள்ராஜ் தூத்துக்குடி*மாவட்ட செயலாளர்*

1998 மார்ச் மாதம்
பொதுச்செயலாளர்
செ.மு அவர்கள்
தூத்துக்குடி வந்திருந்தார்கள்.
அவரோடு மதுரை மாவட்டச் செயலாளர்
மு.கல்யாணி
சிவகங்கை மாவட்ட
செயலாளர்
சூ.அருள்சாமி
ஆகியோரும் வந்திருந்தனர்.தூத்துக்குடி துறைமுகம் சென்று
பார்க்க திட்டமிட்டு கார்
மூலம் தூத்துக்குடி
மாவட்டம் வட்டார பொறுப்பாளர்களையும்
சேர்த்துக்கொண்டு
துறைமுக அலுவலகம்
சென்றடைந்தோம்.
பொதுச்செயலர் செ.மு அவர்கள் உள்ளே செல்ல துறைமுக அலுவலரிடம்
அனுமதி கேட்டார்.ஆனால் அதிகாரி அவர்கள்
விடுதலைப் புலிகள்
காரணமாக அரசு
*அனுமதி கொடுக்கக்
கூடாது*என்று உத்தரவிட்டுள்ளது என
கூறினார். பின் நமது
பொதுச்செயலாளர் நான் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு சட்டமன்ற
மேனாள் மேலவை
உறுப்பினர்.எனவே
நாங்கள் எவ்வித இடையூறும் இன்றி பார்த்து வருகிறோம்
என்று தன்னுடைய
சாதுரிய அணுகுமுறை பேச்சால் *அனுமதி
கேட்டார்*.உடனே
துறைமுக அதிகாரிகள் அவர்கள் துறைமுகத்திற்குள்
செல்ல அனுமதி
கொடுத்தார்.எங்கள்
கார் துறைமுகம் கப்பல்
நிற்கும் இடம் வரைக்கும் சென்றது.
அங்கேஇத்தாலி நாட்டைச்சேர்ந்த பெரிய கப்பல் ஒன்று
நின்று கொண்டிருந்தது.
*பொதுச்செயலாளர்
செ.மு*அவர்கள்
கப்பல் கேப்டன்
அவர்களிடம் உள்ளே
செல்ல அனுமதி கேட்டார்.அனுமதி கிடைத்தது நாங்கள்
அனைவரும் மகிழ்ந்து கப்பல் உள்ளே சென்றோம்.
நமது பொதுச் செயலர்உடன் முதலில்
கேப்டன் அறைக்கு
சென்றோம்.நமது
பொதுச்செயலாளர்
கப்பல் கேப்டனோடு
ஆங்கிலத்தில்
பேசினார்.ஒவ்வொரு
வரையும் கேப்டனிடம்
அறிமுகப்படுத்தினார்.
கேப்டன் மகிழ்ந்தார்
அவரைப் பற்றியும்,
அவரது நாட்டைப் பற்றியும் பொதுச்செயலர் அவர்கள் கேட்டார்கள்.
கேப்டன் மிக மகிழ்ச்சியாக உற்சாகமாக பதிலளித்தார்.பின்பு
எங்களை மது சாப்பிடுகிறீர்களா?
என்று கேடாடார்.பொதுச்செயலர் எங்களுக்கு அப்படியொரு பழக்கம்
இல்லை என கூறினார்.
உடனே கேப்டன் ஆரஞ்சு,லெமன் ஜுஸ் பாக்கெட்டுகளை வழங்கினார்.அனைவரும் பருகினோம்.பின்பு
கப்பலில் அறை அறையாக, மேல் தளம்
கீழ் தளம் என பார்த்தோம் சுமார் ஒன்றரை மணி நேரம்
கப்பலை சுற்றிப்
பார்த்தோம்.பின்பு
அனைவரும் கேப்டனிடம்  விடை பெற்று புறப்பட்டோம்.
இப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியை பொதுச்
செயலாளர் மூலம் தான்
பார்க்க முடிந்தது.அவ்வளவு
கெடுபிடியான தடை
இருந்த நேரத்தில்
எங்களுக்கு அனுமதி
கொடுத்த
துறைமுக. அலுவலரை மனதாரப்
பாராட்டினோம்
இதற்கெல்லாம் காரணம்
நமது பொதுச்செயலர்
செ.முத்துசாமி.
எழுதியவர்:-
ஆர்.அருள்ராஜ்
தூத்துக்குடி*மாவட்ட
செயலாளர்*
தகவல்:-
 செ.வடிவேலு

செ.மு.வின் போர் குணமும் சாதனையும் எழுதியவர்:- ஆ.பழனியாண்டி உப்பிலியபுரம்

995ல் உப்பிலியபுரம்
வட்டாரம் நாகைநல்லூர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
தலைமை ஆசிரியராக
கே.ரெங்கராஜ்
என்பவரை பணியிறக்
கம் செய்த போது,இயக்கம் ஆர்த்தெழுந்து தட்டிக்
கேட்டது.நீதிமன்றம் சென்று  ஸ்டேடஸ்கோ ஆண்டி
பெற்று பணிபுரிய வைத்
ததற்காக 05-01-1996ல்
வெங்கடாஜலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில்*உதவிக் கல்விஅலுவலர் மற்றும்100 ஆசிரியர்கள்
மத்தியில் என் மீது
மாவட்டத் தொடக்கக்
கல்வி அலுவலர் விசாரணை
பணியில் எந்த குற்றமும் செய்யாத
என்னை வெள்ளாளப்பட்டி,எஸ்.
கோம்பை ஆகிய
ஓராசிரியர் பள்ளிக்கு மாறுதல்.
தீர்ப்பாயத்தில் வழக்கு இப்படி
171நாட்கள் பள்ளி
பணியின்றி
ஊதியம் இன்றி
இருந்த போது
செ.மு அரவணைப்பும்
என்மீது கொண்ட பாசமும் என்னைத்
தலைநிமிரவைத்தது 26-06-1996ல் உப்பிலியபுரம் ஊராட்சி
ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மாறுதல் பெற்று தந்தார்.செ.மு
மீண்டும் 8 நாளில்
புடலாத்தி பள்ளிக்கு
மாறுதல்
செ.மு.வோடு
தொலைபேசியில்
தொடர்பு கொண்டு
குடும்பத்தோடு
எரிந்து போகட்டுமா
என்று கேட்ட போது
பள்ளியிலிருந்து
நியாக வரக்கூடாது
உன் பிணம் தான்
வெளியே வரவேண்டும்
இந்த செ.மு.வா
* அந்த AEO வா பார்த்து*
விடலாம் ஒரு கை என்ற
ஆவேச கட்டளை
எனக்கு.
 தொடக்கக் கல்வி இயக்குநரோடு
காரசாரமான
வாக்குவாதம்
இயக்குநர் கட்டிடத்தில்
பெரும் கூட்டம் கூடியது
குரலை உயர்த்தி
மாறுதல் ஆணையை
இரத்து செய்யாவிட்டால்
கொடியன் குளத்தில்
ஏற்பட்டது போல
உப்பிலியபுரத்தில்
தலைமையேற்று
நடத்தப்போகிறேன்
இந்த செ.மு வா
தொடக்கக் கல்வி
இயக்குநராக ஒரு கை
பார்த்து விடலாம்
நாளைக்கு.என
உணர்ச்சிப் பெருக்கோடு
செ.மு கேட்க.அருகாமை
அறையில் இருந்த
இயக்குநர் டாக்டர்
பழனிவேல் அவர்கள்
செ.மு வுக்கு சமாதானம் கூறி
மாறுதல் ஆணையை
தொடக்கக் கல்வி
இயக்குநரால் இரத்து
செய்ய வைத்தவர்
தனியாசிரியர்
பிரச்சனையானாலும்
ஒட்டு மொத்த ஆசிரியர்கள் பிரச்சனையானாலும்
தீர்வு காண்பதில்
செ.மு வுக்கு நிகர் செ.மு வே
அவர் எடுத்த பிரச்சனைகள்
கோரிக்கைகள் தீர்வு காண்பதில்
தோல்வி கண்டதாக
சரித்திரம் இல்லை
வெற்றி கண்ட சரித்திர
நாயகனாக
தமிழக ஆசிரியர்களுக்கு
தோன்றினார் செ.மு1969முதல்2000 ஆண்டு
வரை எத்தனையோ
போராட்டங்களை
ஆசிரியர்களுக்காக
நடத்தி சேதாரமின்றி,
ஊதிய இழப்பின்றி,
ஒட்டு மொத்த ஆசிரியர்
சமுதாயத்தை காப்பாற்றியவர் வரிசையில் உலக அளவில் தேடினால்
அதில் முதல் நிலையில்
இருப்பவர்
நமது செ.மு. அவர்களே.அவரது
சேவைகள் ஆசிரியர்
சமுதாயத்திற்கு
மகத்தானது.
தியாகம் மலைபோன்றது
எதையும் சாதிக்க
வேண்டும் என்ற துடிப்பு
எழுச்சி மனப்பான்மை
போராட்ட குணம்
ஆசிரியர்களை
தன்பால் கவர்ந்து
இழுக்கும் பேச்சாற்றல்
கொண்டவர் தான்செ.மு.
தமிழகத்தில் கல்வி தரம் குறைந்து விட்டதென தமிழக
அரசியல் வாதிகளால்
1990ல் விமர்சிக்கப்பட்ட
போது,தமிழக ஆசிரியர்
பெருமக்களைப் பார்த்து
இருகரம் கூப்பி
 One Step Forward
in the Class Room
பள்ளிக்கு முன் சென்று
பின்வர முதன் முதலில்
குரல் கொடுத்தவர்
இந்த செ.மு.அவர்களே.
அவர் விடுத்த வேண்டுகோள் ஆசிரியர் மத்தியில்
தன்னுடைய பணியை
செவ்வனே செய்ய
வேண்டும் என்ற உணர்ச்சிப்பெருக்கு
ஆசிரியர் மத்தியில்
ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள
தொகுப்பூதிய
ஆசிரியர்களுக்காக
வழக்குத் தொடுத்து
சென்னை உயர்நீதி
மன்றத்தில் 176 பக்க
தீர்ப்பையும் 01-01-1971
ஆசிரியர் பிரச்சனைக்கு
நீதிமன்றம் சென்று
தீர்வு கண்டு அரசிடம்
ஆணை பெற்று நிலுவை
ஊதியம் பெற வழிவகை
செய்தவர் தான் இந்த
இயக்கத்தின்
பொதுச் செயலாளர்
செ.முத்துசாமி.
13 ஆண்டுகள் சட்ட
மேலவை உறுப்பினர்
பணியில் 5 நிமிடம்
5 மணிக்கு நேரம்
ஆனாலும் ஆசிரியர்
பிரச்சனையில் தொடங்கி
ஆசிரியர் பிரச்சனையில்
பாராட்டப்பட்டவர் தான்
இந்த செ.முத்துசாமி
தனது மேலவைப்
பணியில் டாக்டர்
கலைஞரோடு
புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆரோடும்
சட்ட மேலவையில்
நேர் நேர் எதிர் வாதம்
செய்து ஆசிரியர்களுக்காக
பல அரசாணைகளை
பெற்று தந்தவர் செ.மு.
உலகில் இருபெரும்
வல்லரசு நாடுகளான
ருசியா,அமெரிக்கா
ஆகிய நாடுகளில்
சுற்றுப்பயணம் செய்து
அவ்விரு நாடுகளில்
உள்ள ஆசிரியர்
மாணவர் நிலை
கல்வித்தரம்,கட்டிக்
காக்கப்படும் முறைகள்
நிர்வகிக்கப்படும் நெறி
முறைகள் ஆகியவற்றை
ஆசிரியர் பேரணி இதழ்
வாயிலாக தமிழக
ஆசிரியர்களுக்கு
கட்டுரை வாயிலாக
அறியச் செய்தவர் தான்
இந்த செயல் வீரர் செ.மு.1969முதல்2000 ஆண்டு
வரை எத்தனையோ
போராட்டங்களை
ஆசிரியர்களுக்காக
நடத்தி சேதாரமின்றி,
ஊதிய இழப்பின்றி,
ஒட்டு மொத்த ஆசிரியர்
சமுதாயத்தை காப்பாற்றியவர் வரிசையில் உலக அளவில் தேடினால்
அதில் முதல் நிலையில்
இருப்பவர்
நமது செ.மு. அவர்களே.அவரது
சேவைகள் ஆசிரியர்
சமுதாயத்திற்கு
மகத்தானது.
தியாகம் மலைபோன்றது
எதையும் சாதிக்க
வேண்டும் என்ற துடிப்பு
எழுச்சி மனப்பான்மை
போராட்ட குணம்
ஆசிரியர்களை
தன்பால் கவர்ந்து
இழுக்கும் பேச்சாற்றல்
கொண்டவர் தான்செ.மு.
தமிழகத்தில் கல்வி தரம் குறைந்து விட்டதென தமிழக
அரசியல் வாதிகளால்
1990ல் விமர்சிக்கப்பட்ட
போது,தமிழக ஆசிரியர்
பெருமக்களைப் பார்த்து
இருகரம் கூப்பி
 One Step Forward
in the Class Room
பள்ளிக்கு முன் சென்று
பின்வர முதன் முதலில்
குரல் கொடுத்தவர்
இந்த செ.மு.அவர்களே.
அவர் விடுத்த வேண்டுகோள் ஆசிரியர் மத்தியில்
தன்னுடைய பணியை
செவ்வனே செய்ய
வேண்டும் என்ற உணர்ச்சிப்பெருக்கு
ஆசிரியர் மத்தியில்
ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள
தொகுப்பூதிய
ஆசிரியர்களுக்காக
வழக்குத் தொடுத்து
சென்னை உயர்நீதி
மன்றத்தில் 176 பக்க
தீர்ப்பையும் 01-01-1971
ஆசிரியர் பிரச்சனைக்கு
நீதிமன்றம் சென்று
தீர்வு கண்டு அரசிடம்
ஆணை பெற்று நிலுவை
ஊதியம் பெற வழிவகை
செய்தவர் தான் இந்த
இயக்கத்தின்
பொதுச் செயலாளர்
செ.முத்துசாமி.
13 ஆண்டுகள் சட்ட
மேலவை உறுப்பினர்
பணியில் 5 நிமிடம்
5 மணிக்கு நேரம்
ஆனாலும் ஆசிரியர்
பிரச்சனையில் தொடங்கி
ஆசிரியர் பிரச்சனையில்
பாராட்டப்பட்டவர் தான்
இந்த செ.முத்துசாமி
தனது மேலவைப்
பணியில் டாக்டர்
கலைஞரோடு
புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆரோடும்
சட்ட மேலவையில்
நேர் நேர் எதிர் வாதம்
செய்து ஆசிரியர்களுக்காக
பல அரசாணைகளை
பெற்று தந்தவர் செ.மு.
உலகில் இருபெரும்
வல்லரசு நாடுகளான
ருசியா,அமெரிக்கா
ஆகிய நாடுகளில்
சுற்றுப்பயணம் செய்து
அவ்விரு நாடுகளில்
உள்ள ஆசிரியர்
மாணவர் நிலை
கல்வித்தரம்,கட்டிக்
காக்கப்படும் முறைகள்
நிர்வகிக்கப்படும் நெறி
முறைகள் ஆகியவற்றை
ஆசிரியர் பேரணி இதழ்
வாயிலாக தமிழக
ஆசிரியர்களுக்கு
கட்டுரை வாயிலாக
அறியச் செய்தவர் தான்
இந்த செயல் வீரர் செ.மு.
  (15வதுமாநில மாநாடு
சிறப்பு மலரிலிருந்து)
தகவல்:-
செ.வடிவேலு.

குறள் நெறிக் குணாளன் செ.மு_எழுதியவர்:- அ.இராமசாமி கடலூர் மாவட்ட தலைவர்

பொதுத் தொண்டு
செய்பவர்கள் எவ்வாறு
இருக்க வேண்டும்
என்பதை வள்ளுவர்
கூறும் போது
குடி செய்வார்க்கில்லை
பருவம் மடி செய்து
மானங்  கருதக் கெடும் என்று கூறுகிறார்.
அதாவது மக்களுக்கு
நன்மை செய்ய வேண்டும்
என்று ஒருவன்‌ நினைத்தால்
அதற்கு காலமோ நேரமோ பார்ப்பது
தவறு மானம் மரியாதை இவற்றைப்
பற்றி சிந்திக்காமல்
தொண்டாற்ற வேண்டும்
எனக் கூறுகிறார்
மேற்கண்ட குறளின்
கருத்துக்கு ஏற்ப தன்னுடைய
பொது வாழ்க்கையை
அமைத்துக் கொண்டவர்
செயல் வீரர் செ.முத்துசாமி என்பது
குன்று மேலிட்ட விளக்காகும்.
சாதனை:-
எல்லா காரியங்களும்
தெய்வத்தால் தான்
ஆகிறது என்று சொல்லப்பட்டாலும்
உண்மை நடப்பு என்ன வென்றால்,மனிதனுடைய,முயற்சியும்,செய்கையும் இருந்தால்தான் பயன் உண்டாகும்.
வெற்றி கிட்டும்.நினைத்ததை
அடையமுடியும் என்பதை குறள் காட்டுகிறது.
தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சிதன்
மெய் வருத்திக் கூலி
தரும்.என்ற குறளுக்கு ஏற்ப
எண்ணற்ற சாதனைகள்
பயன்களை
ஆசியர் சமுதாயத்திற்கு
பெற்றுத் தந்த சாதனை
யாளர் செ.முத்துசாமி.என்பதும்
உள்ளங்கை நெல்லிக்கனியாகும்
சான்று ஒரு சில அறிதல் வேண்டும்.
மத்திய அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம்
தமிழக ஆசிரியர்களுக்கு
பெற்று தந்தார்.
1 3/4 நாள் ஈட்டிய
விடுப்பு இன்றைக்கு
15 நாட்கள் வீடு கட்ட
இருசக்கர வாகனங்கள்
வாங்க அரசு கடன் சலுகை.
பல்வேறு நிலைகளில்
பதவி உயர்வு எல்லாவற்றிற்கும்
மேலாக உதவி தொடக்கக் கல்வி
அலுவலர்கள் பதவி
உயர்வு இன்னும்
எண்ணற்றவை
நீடு வாழ்வார்:-
நல்லொழுக்கத்தை
மேற்கொண்டவர்,
ஐம்புலன்களையும்
அடக்கி வாழ்பவர்
நீண்ட நாட்கள் வாழ்வார் எனக் கூறுகின்றது வள்ளுவம்
பொறிவாயில் அய்ந்தவித்தான்
மொய்தீன் ஒழுக்கம்
நெறி நின்றார் நீடு வாழ்வார் என்பது குறள்.
மக்கள் நீடுவாழ,அதாவது
நீண்டநாள் உயிர் வாழ
வேண்டும் என்பதையே
கருத்தாகக் கொண்டதாகும்.
மனிதனுக்கு உண்டான
ஐம்பொறிகளையும்
அடக்கி தன் இச்சைப்படி
செலவிடாமல்,கேடில்லாத தன்மையில்
உண்மையான  ஒழுக்கத்தோடு
நடந்து கொள்கிறவனது வாழ்வு
நீண்ட நாளைக்கு
நிலைபெறும் என்பதே
வள்ளுவர் கூறும்
வாழ்க்கை நெறியாகும்
மேற்கண்ட குறள் வழி
வாழ்ந்து வரும் ஆசிரியரினப்
போராளி செயல் வீரர்
செ.முத்துசாமி அவர்கள் நீடு வாழ்க
விழைவோமாக.
'உள்ளத்தனையது உயர்வு" என வள்ளுவர் கூறுகின்றார்.அதற்கு ஏற்ப
செயல்வீரர் செ.முத்துசாமி அவர்கள்.
நல்ல உள்ளமும்,
தூய தொண்டும்
பெற்றிருப்பதால்
இல்லறத்திலும்,
பொருட்செல்வத்திலும்*
உயர்ந்து நிற்கின்றார்
"வாழ்க அவர் தம் உள்ளம்
வளர்க அவருடைய
சமுதாயப்பணி".
எழுதியவர்:-
அ.இராமசாமி
கடலூர் மாவட்ட தலைவர்
(பொன்விழா மலரிலிருந்து 07-10-1995)
தகவல்:-
செ.வடிவேலு

செ.மு.வின் செயல் மிக்க சீர்மிகுந்த தொண்டினை நினைவு கூர்கிறோம் எழுதியவர்:- அ.ஜகதீச செட்டி

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுவை
அன்று கோட்டையில்
ஆண்டவர்களிடம்
கொடுத்த போது
"அடக்கி விடுகிறோம்" எனக்
கூறிய ஆட்சியாளர்கள்
ஆசிரியர்களை சிறையில் அடைந்ததை நினைவு
கூர்கிறோம்
வேலை போய்விட்டது
வேலை போய்விடும்
என அரசு கூறி வேதனையை ஏற்படுத்திய போதும்
அச்சமில்லை அச்சமில்லை எனக்
கூறிய ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்களை
நினைவு கூர்கிறோம் சிறையின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல் வீரர்
களாக நடந்து கொண்ட
ஆசிரியர்களை நினைவு கூர்கிறோம்.மருத்துவ
வசதி குறைவாக இருந்தபோதும் மனம்
தளராது இருந்த ஆசிரியர்களை நினைவு கூர்கிறோம்.
 நீரை காய்ச்சி கொடுக்க
வசதி இல்லை என
காவலர்கள் கூறிய போது
நீரை காய்ச்சிக் கொடுக்கிறோம்
அருந்துங்கள் என்று கூறிய
காவலரின் மனைவியரை நினைவு கூர்கிறோம்.
சோர்ந்து கிடந்த ஆசிரியர்களை
ஒன்று சேர்த்து
செயல் வீரர்களாக
நடக்கச் செய்த
செயல் வீரர்
செ.முத்துசாமியே
,உன் செயல்மிக்க
சீர்மிகுந்த தொண்டினை
அ.ஜெகதீசனும் கோவிந்தராஜனும்
நினைவு கூர்கிறோம்.


எழுதியவர்:-
அ.ஜகதீச செட்டி
முன்னால் தலைவர்
ஓமலூர் வட்டாரம்
சேலம் மாவட்டம்.
தலைவர்:-
செ.வடிவேலு.

ஆசிரியர் நலம் காக்கும் போர் வாள் செ.மு எ ழுதியவர்:- டாக்டர் கி.வேங்கடசுப்ரமணியன் மேனாள் பள்ளிக் கல்வி இயக்குநர்

தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி பொன்விழாவும்
,என் கெழுதகை நண்பர்
இந்த மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர்
திரு.செ.முத்துசாமி
அவர்களின்
அயராத ஆசிரியர்
இயக்கப் பெரும் பணியின்
வெள்ளிவிழாவும்
ஒருங்கே நடைபெறுவது
மிகவும் பொருத்தமாகும்
ஆசிரியர் இயக்க வரலாற்றில்
மாஸ்டர் இராமுண்ணி
அவர்களின்
அடிச்சுவட்டில் நெறியாளராக
நின்று இன்று வரை
அறப்பணி புரியும் செ.மு அவர்களின்
அயராப்பணி பற்றி
நான் நன்கு அறிவேன்
ஆசிரியர் இயக்கத்தின்
முதுகெலும்பாக
கூட்டணியை இவர்
வளர்த்தபாங்கு கண்டு
நான் வியந்ததுண்டு
அரசுடன் வாதாடி,
வேண்டுமென்றால்
போராடி,தமிழக ஆசிரியன்
நலம் காத்த வித்தகர்
செ.முத்துசாமி.
மாசகற்றும் பெரும்
பணியில் ஈடுபட்டுவரும்
ஆசிரியர்களின் இன்னல்கள் பலப்பல
நான் கல்வி இயக்குநராக இருந்த
போது
பேரறிஞர் அண்ணா
அவர்களின் கருத்து
ஒன்றை அடிக்கடி கூறுவதுண்டு
" ஆசிரியர் இன்று ஏங்கினால் நாடு ஏங்கும்
ஆசிரியர் இன்று தூங்கினால் நாளை நாடு
தூங்கும்
ஆசிரியர் இன்று தேங்கினால் நாளை
நாடு தேங்கும் என்றார் அறிஞர் பெருந்தகை.கல்வியின்,
இதயம்,இயக்குநர் பெருந்தகை அல்ல,
கல்வியின் மூளை கல்வி இலாகாவல்ல,
கல்வியின் கண்கள்
அதிகாரிகள் அல்ல,
கல்விக்கே இதயமாய்,
மூளையாய்,கண்களால் விளங்குபவர்
ஆசிரியப் பெருமக்கள்.இவர்கள்
வாழ்க்கை சீருடனும்
சிறப்புடனும் இயங்காவிடில் நாடு
முன்னேறமுடியாது.
கோத்தாரிக் குழுவின்
அறிக்கையின் முதல்
வரியைப் பார்ப்போம்
இந்தியாவின் எதிர்காலம் அதன்
வகுப்பறையில் சமைக்கப்படுகிறது
இதுதான் உண்மை.
இதை மெய்ப்பிக்க
அருமை சகோதரர்
செ.முத்துசாமி ஆற்றிய
பணிகள் ஏராளம் ஏராளம்.
ஆசிரியர் இயக்கத்திற்கு ஒரு
மதிப்பும் முகவரியும்
கொடுத்த
மாஸ்டர் இராமுண்ணியின்
இளவல் அன்பர்
திரு.செ.மு
அவர்கள் பணி அயராதப் பணி
அறிவுப் பணி
செ.மு.ஆசிரியர் நலம்
காக்கும் போர்வாள்
சுருக்கக் கூறின்
திரு.செ.முத்துசாமி
பணி மறக்கமுடியாத
ஒன்று.அவர் வாழ்க
வளர்க என வாழ்த்தி
ஆசிரியர் தம் அறப்பயணம்
தமிழகத்தில் தொடர்க எனக் கூறி
வாழ்த்துரையை முடிக்கிறேன்
எழுதியவர்:-
டாக்டர் கி.வேங்கடசுப்ரமணியன்
மேனாள் பள்ளிக் கல்வி
இயக்குநர்
மேனாள் துணைவேந்தர்
பாண்டிச்சேரி மத்திய
பல்கலைக் கழகம்.(பொன்விழா மலரிலிருந்து 07-10-1995)
தகவல்,:-
செ.வடிவேலு.

கர்ம வீரன் செ.மு._வீ.ஜெயச்சந்திரன் மேனாள் A.E.E.O.

கொங்கு நாட்டிலே சிறப்பு மிக்க மாமலை
கொல்லிமலை .கொல்லிமலைக்கீழ் உள்ள
சேந்தமங்கலம் அருகே
மரூர்பட்டியில் ஏழை விவசாய குடும்பத்தில்
தோன்றி,விரிந்து பரந்து
விட்ட தமிழகத்தில்
ஆசிரியர் இனம்
தலைநிமிர்ந்து நிற்க
ஏன் பாரத நாட்டிற்கே-
ஆசிரியர் சமுதாயம்
சுயமரியாதை பெற,
நிலை தாழ்ந்து
பின்னோக்கி தள்ளப்பட்ட
ஆசிரியர் இனத்தின்
மதிப்பும் கௌரவமும்
மீண்டும் சீர் செய்ய
வள்ளார்  என மாஸ்டர் இராமுண்ணியால்
முன்னிலை படுத்தப்
பட்டவர் செ.மு.
ஆசிரியர் இனத்தின்
விடிவெள்ளி யாக
திகழ்பவர் செ.மு
ஆசிரியர் சமுதாயம்
மக்களுக்கு சேவை
செய்கிறது என்றால்
ஆசிரியர் சமுதாயத்திற்கே
என் சேவை என
வாழ்பவர் செ.மு
சீரிய தொண்டால்
கடின உழைப்பால்
இயக்கத்தின் மாநிலப்
பொதுச்செயலராக
உயர்ந்தவர்
பாரத நாட்டு வரலாற்றில்
தொடக்கப்பள்ளி
ஆசிரியர் சட்ட மன்ற
மேலவையில் அங்கம்
பெற்று ஆசிரிய இனத்துக்கே
பெரும் புகழ் சேர்ந்தவர்
செ.முத்துசாமி
செல்வயோக வாழ்வும்
பட்டமும் பதவிகளும்
அரசியல் வாழ்வும்
வந்தன அத்தனையும்
ஒதுக்கி தள்ளிவிட்டு
தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணிக்குத் தன்னை
முழுமையாக அர்பணித்து
இராப்பகல் அயராது
பணியாற்றும் செம்மல்
செ.மு
மேலவையில் ஆசிரியர்
பிரச்சனை குறித்து
இவர் எழுப்பிய குரல்
உரிமைக்குரல்-
உரிமை முழக்கம்
நாட்டில் ஆசியர்கட்கு
தனி அந்தஸ்தை பெற்றுத்
தந்தது என்பதை
நாடறியும்
ஆசிரிய இனத்துக்கே
காவலனாய்த்
திகழ்பவர் செ.மு
ஆசிரியர்கட்கு ஓர் பிரச்சனை என்றால்
முன்னின்று
சிங்கமென முழக்கமிடுவதில்
இவருக்கு நிகர் இவரே.இவரது ஒரே
நோக்கு
ஆசிரியர் நலன் ஒன்றே
ஆசிரியர் நலன் காக்க
இவர் செய்த சாதனைகள்
பெற்றுத் தந்த பலன்கள்
எண்ணிலடங்கா
ஏட்டிலும் அடங்கா!
வலுவிழந்த ஆசிரிய
இனத்தை வீறு கொண்டு
எழச்செய்தவர் செ.மு
ஆசிரியர் நலன் கூவிடும்
உரிமைக்(குரல்)
குயில் செ.மு
"போற்றுவார் போற்றப்படும்
புழுதிவாரித் தூற்றுவார்
தூற்றட்டும்
என்பணி ஆசிரியர்கட்கு
தொண்டு செய்வதே
ஆசிரியர்களே என்
வாழ்வு என்று கடமை
புரியும் கர்மவீரர்
வாழிய பல்லாண்டு
பல்லாண்டு
எழுதியவர்:-
வீ.ஜெயச்சந்திரன்
மேனாள் A.E.E.O.
எடப்பாடி வட்டாரம்
(15வது மாநிலமாநாடு
சிறப்பு மலரிலிருந்து
நாள் 13-08-2000)
தகவல்:-
செ.வடிவேலு

செ.மு ஒரு கலங்கரை விளக்கம்- எழுதியவர்:- எம்.எல்.வெங்கடேசன்

மனித வாழ்வியல் நோக்கத்திற்கு ஆதாரமாக விளங்கும்
அறிவையும்,ஒழுக்கத்தையும் கல்வி மூலம்
வழங்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆசிரியப் பெருமக்கள்
ஆவார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்விப் பணியில் கற்பகக் கனியாக விளங்கும்
ஆசிரியச் சமுதாயத்தில்
வலம்புரி சங்காக
மிதந்து திகழ்பவர் தான்
செ.முத்துசாமி அவர்கள்
சுமார 27 ஆண்டுகளுக்கு முன்பு
அண்ணார் அவர்கள்
தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி அமைப்பில்
பொதுச்செயலாளராக பொறுப்பேற்று பணி
யாற்றி வருகிறார் என்று சொன்னால்
வினைத்திட்பம் என்பது
ஒருவன் மனதிட்பம்
மற்றைய எல்லாம் பிற என்ற
வள்ளுவரின்
திருக்குறளுக்கு ஏற்ப,
அவரது சிந்தனையும்
செயலும் ஒன்றாக
அமைந்ததே அதற்கு
காரணமாகும்
அண்ணாரது பணியை
எண்ணிப் பார்க்கையில்
ஆசிரியச் சமுதாயத்திற்கு
செய்த சேவை
இமாலய சாதனை
என்றே கூறலாம்.
திரு.செ.முத்துசாமி
அவர்களது இடையறாத
உழைப்பும்,இடையறாத
முயற்சியும்,இடையறாத
பயிற்சியுமே ஆசிரியச்
சமுதாயம் கண்ட பல
இன்னல்களையும்
இடையூறுகளையும்
விலக்கிட ஆயுதமாக
அமைந்தது என்று
சொன்னால் அஃது
மிகையாகாது
அதோடு மட்டுமல்லாமல்
ஆசிரியப் சமுதாயத்தின்
இல்ல சுக துவக்கத்திலும்
பங்கெடுத்து குடும்பப்
பாச உணர்வோடு
ஓடோடி வந்து ஒருங்கிணையும்
பண்பாளராகவும்,
அவ்வப்போது தமது
எண்ணங்களை
கல்வித்துறைக்கு
வழங்கி வந்த ஆலோசகராகவும்
சிறந்து விளங்கி
வருபவர்
இத்தகைய போற்றுதலுக்கும்,
பாராட்டுக்குரிய
செ.முத்துசாமி
ஐயா அவர்களுக்கு
இன்று ஆசிரிய சமுதாயத்தால்
எடுக்கப்படும்
இவ் வெள்ளிவிழா
மாநாடு இன்றைய
செய்தியாக இருக்கலாம்
ஆனால் நாளைய
,வரலாறு என்பது
என்பதை எண்ணி
பார்க்க வேண்டும்.
அவரிடம் உள்ள
கலை உள்ளமும்
தொண்டுள்ளமும்
நிரந்தரமாக இருக்கும்
வரை,ஆசிரியச் சமுதாயத்தின் ஒட்டு
மொத்த குரல் ஆதரவாக ஒலிக்கும்
வரை என்றைக்கும்
செ.முத்துசாமி அவர்களை
காலத்தாலும், அரசியல்
காற்றாலும் அணைக்க
முடியாது
ஏனெனில் அவர்
கல்வித்துறையின்
கலங்கரை விளக்கம்
எழுதியவர்:-
எம்.எல்.வெங்கடேசன்
மாநில துணைச் செயலர் தமிழ்நாடு
காந்திமன்ற இயக்கம்
தகவல்:-
செ.வடிவேலு
(பொன்விழா மலரிலிருந்து 07/10/1995)

செ.மு.வுக்கு முன்னும் செ.மு.வுக்கு பின்னும்

மாதா பிதா குரு தெய்வம் என ஆசிரியரை தெய்வமாகமதித்த பூமி.இப்படி பழைமையும் பெருமையும் பெற்ற நமது சமுதாயம் டைக்காலத்தில் இருந்தநிலை நம்மில்பலருக்கு இன்னும்தெரியாது.ஊராட்சி ஒன்றியத்தில்
பெருந்தலைவர்,ஆணையாளர் அல்லாது அங்குவரும் எடுபிடிகளுக்குமுதுகை வளைந்து கொடுத்த நேரம் அது.எடுப்பார் கைப்பிள்ளையாய்*,ஆண்டான் அடிமையாய் இருந்தநேரம் அது.உள்ளம்குமறினாலும் உதடுகள்சிரித்த நேரம். நமதுஉழைப்பும்,உரிமையும் நமக்கே தெரியாமல் பறிக்கப்பட்ட காலம்.இப்படிப்பட்ட நேரத்தில்தான் வாராது வந்த மாமணிபோல் மாஸ்டர் இராமுண்ணியால் அடையாளம் காட்டப்பட்ட நமது பொதுச்செயலர் செ.மு.தலைமையேற்றார் கூட்டணி என பெயர்   பின்புதான்,ஆசிரியர் இடையே எழுச்சி ஏற்பட்டது.அச்சம் மெல்ல அகன்றது.

தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி- தொடர்-7

Wednesday 24 June 2020

செ.மு வின் பாதையில் ஆசிரியர் கூட்டணியும் நானும் இ.ம.வேலுசாமி

எழுபதில்  மதுரையில் நடைபெற்ற இயக்க நிறுவன ர் ராமுண்ணியின் மணிவிழா மாநாட்டுக்கு சிங்காநல்லூர் நகர செயலாளர்., ஆசிரியர் பேரணிக்கு  அணிதிரட்டியவன்    .. 71ல் மாவட்ட பொருளாளர், 72ல் திருப்பூரில் கோவை மாவட்ட மாநாடு பொதுச் செயலாளர் பதவி ஏற்று மாநாட்டு வெற்றிக்கு உழைத்தார். 
 அன்றைய அமைச்சர் அண்ணன் சாதிக் பங்கேற்றார் .
72 ஆம் ஆண்டு எழுச்சிமிக்க சிறைப் போராட்டம் கோவை மாவட்ட போராட்டக்குழு ஐவரில் ஒருவராக பணியாற்றினேன் ,  73ல் கோவை வெள்ளி விழா மாநாடு மாநாட்டு மலர் பணியில் அடியேனுக்கு பொதுச்செயலாளர் பாராட்டு
 78 முதல் 84 வரை தலைமை நிலைய செயலாளர்.
 84 ல்துணை பொதுச்செயலாளர்.
 87 ல் மற்றும் 93 ல் நடைபெற்ற மாநில தேர்தலில் மாநில பொருளாளராக* பொறுப்பேற்று ,இதை அடுத்து வந்த பொறுப்பு மாநில தலைவர்

 இயக்கத்தில் பொன்விழா மாநாட்டுத் தலைவர். என படிப்படியாக பொறுப்புகள். துளித்துளியாக விழுந்த மழை நீர் சேர்த்து தூர் எடுத்து குளத்தில் நிரம்பியது போல், உழைப்பு_ உழைப்பு_ உழைப்பு எனும் ஓய்வற்ற பணிகளி ன்  தொடர் நிகழ்ச்சியாகவே பணியாற்றினேன்

 சென்னையில் அலுவலகம் இல்லாமல் சில காலம், சில நேரம் ,சட்டமன்ற பழைய விடுதி ,திண்ணையிலும் படுத்து, எழுந்து ரயில் இருந்தும், கட்டணத்திற்கான நிதி வசதி இல்லாமல் லாரிகளில் பயணம் செய்தும் அவ்வளவு ஏன், செயற்குழு உறுப்பினர்களின் பயணப்படி மட்டுமே இயக்க நிதியாக வைத்துக்கொண்டு அறுபது, எழுபதுகளில் சங்கம் கட்டி வளர்த்து, போராட்டம் நடத்தி சலுகைகளை பெற்றுத் தந்தது ,என்பது சாதாரணம்அல்ல 
.
 மாநில அலுவலகம் இல்லாத இடைப்பட்ட இரண்டு ஆண்டு காலம் இயக்க வழக்குக்காக, சென்னை வந்து செல்லவே எனது மருத்துவ விடுப்பு அவ்வளவு  தீர்ந்த்து. இந்த இயக்கத்திற்காக ஒரு நாள் விடுப்பு எடுக்க தயங்குகின்ற காலகட்டத்தை எண்ணி வியப்பும் வேதனையும் அல்லவா தோன்றுகிறது. இயக்க வழக்குக்காக சென்னை வந்து தங்க இடமின்றி, சட்டமன்ற பழைய விடுதி மொட்டை மாடியில் ,படுத்து உறங்கி பறவைகள் ஒலி கேட்டு எழுந்து, யாருடைய அறையில் சென்றாவது குளிக்க முடியாதா ,என்ற ஏக்கத்தோடு அலைந்து, முகம் கைகால் கழுவி, வழக்கறிஞர் வீட்டுக்கும், நீதிமன்றத்துக்கும் அலைந்து, அலைந்து இரவு பயணங்கள் மேற்கொண்டதெல்லாம்  அதாவது  வசதியின்மை, பயணம் அலைச்சல் ,பயண செலவு ,விடுப்பு இழப்பு இவை ,எதுவுமே கணக்கில் கொள்ளாமல் நான் உழைத்ததற்கு அடிப்படையே  நமது பொதுச் செயலாளர் செ.மு அவர்களிடம்  பெற்ற பயிற்சிதான்இதே  வள்ளுவர் கோட்டத்தில் தான் இயக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என ஐயன் கலைஞர் அறிவித்த பெருமை உண்டு. அன்றைய வாக்குறுதியை நிறைவேற்றி அங்கீகாரம் அளித்த போது  அடியேனே மாநில தலைவர். 1989 இல் இதே வள்ளுவர் கோட்டத்தில் மாநாடு. அதில் நான் தான் வரவேற்பாளர். மாநில பொருளாளராக அளித்த ஊதியத்தை ஒரு அறுவடை என்றும், அகவிலைப்படி ஒரு  அறுவடை என்றும் குறிப்பிட்டுக் கூறி வரவேற்றபோது,, கலைஞர் அவர்கள் தம்பி  வேலுச்சாமி அறுவடை ,அறுவடை என்று குறிப்பிட்டு கூறினார். அறுவடைக்கு பின் களத்துக்கு வரவேண்டும் தூற்றலும் உண்டு என இரு பொருள்பட கலைஞர் அவர்கள் கூறியது. இன்றும் கூட காதுகளில் இனிக்க இனிக்க எதிரொலிக்கிறது.

 1967இல் நமது செ.மு சேலம் மாவட்ட செயலாளராக இருந்தார். நேர்முக உதவியாளராகவோ,  பொதுச்செயலாளராகவோ பதவிக்கு வராத  நேரம், சேலம் மாவட்ட மாநாட்டை முடித்துவிட்டு, ஆங்கில பயிற்சி பெற கோவைக்கு வந்து இருந்தார் .பயிற்சி வகுப்பு முடிந்ததோ இல்லையோ பள்ளி,பள்ளியாக  சென்று ஆசிரியர்களிடமும் ஆசிரியர் சங்க கூட்டங்களிலும் , ஆசிரியர் கூட்டணி பற்றியும் எல்லா ஆசிரியர்களிடமும் ஒரே ஆசிரியர் இயக்கத்தில் இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் , பேசி ,சேலம் மாநாட்டு மலரை அவர்களிடம் வழங்கிவிட்டு தான் வருவார். ஆசிரியர்கள் மத்தியில் ஐக்கிய சங்கம் போன்ற பிரிவுகள் அன்று கோவையில் இருந்ததை அவரது ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் முடிக்கின்ற காலத்துக்குள் மாற்றி ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவந்தார்.

இவரோ, சேலம் மாவட்ட செயலாளர்.  பயிற்சிக்கு வந்து இருப்பது  கோவை மாவட்டம்.   வெளி மாவட்டத்துக்கு செயலாளர் ஆயிற்றே  கோவை மாவட்டத்தில் வந்து ஆசிரியர்களிடம்  கூட்டம் போட்டு பேச வேண்டுமோ என்றெல்லாம் கருதாமல் பல்வேறு பெயர்களில் பிளவு பட்டிருந்த ஆசிரியர்களை ஒன்றாக்கும் முயற்சியே தேவை என்று சங்க வளர்ச்சி பற்றி மட்டுமே சிந்தித்து செயல் பட்டவர்செ.மு  என்றால் இது பிறவிலேயே தலைமை ஏற்கும் பக்குவத்தை பெற்று உருவான தலைமை என்று தானே பொருள்

 1977 செப்டம்பர் 5 இல் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்ற பெயரில் சென்னையில் சங்கத்தைப் பதிவு செய்ய சங்கம் இட்ட கட்டளையை ஏற்று தனிமனிதனாக சென்னை சென்று முதல் மாநில தலைவர் என்ற பொறுப்பில் சங்கத்தைப் பதிவு செய்து பதிவு எண் 197 /77 பெ ற்றேன்.    1977 செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினத்தன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்ற பெயரை பதிவு செய்த போதே மாநில தலைவராக பொறுப்பேற்று பதிவு செய்த இளையவன் நான். பதிவுகளின்படி 1977இல் மாநில தலைவர் ஆனாலும் சட்டப்படி 1994இல் மாநில தலைவராய் போற்றுதற்குரிய பொதுக்குழு வால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்

இ. ம. வேலுச்சாமி முன்னாள் மாநிலத் தலைவர்
 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
தகவல்
சு.ம.பாலகிருஷ்ணன்

உள்ளத்தாலும் பொய்யாத உத்தமர்அய்யா செ.மு* _மதுரை கோ. ராமசாமி

தமிழகத்தில் பல ஆசிரியர் இயக்கங்கள் இருப்பினும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்ற இயக்கத்திற்கு ஒரு தனித்தன்மையும்,  தரமும் என்றும் உண்டு.  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ஐயாசெ.மு  அவர்கள் பொதுச் செயலாளராக இருந்த காலத்திலும், இயக்கம் தோன்றுவதற்கு முன்பும் ,பல அரிய செயல்களை எல்லாம் அவர்  நடத்திய மாநாட்டு தீர்மானங்கள் அவரின் அறிவாற்றலையும் அன்றைய , இன்றைய இயக்க   முதுபெரும் உறுப்பினர்களுக்கு மிகவும் நன்றாக தெரியும்..  சட்ட மேலவை உறுப்பினராக இருந்த காலத்தில் எண்ணிலடங்காத நன்மைகளை பெற செய்தார் அந்த பேரறிவு படைத்த பெருமகன் அவர்கள்.

நான் இந்த இயக்கத்தின் நிறுவனர் மாஸ்டர்இரா.முண்ணி காலத்தில். இருந்து உறுப்பினராக இருந்து வருகிறேன் பல ஆசிரிய மாநாடுகளில் கலந்து கொண்டவன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு செ.மு  அவர்கள் சொல் வேறு, செயல் வேறு அறியாதவர் . தன்னலமற்ற வெறுப்பும் சலிப்பும் இன்றி ஆசிரியர்களுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர் 

 மத்திய மாநில அமைச்சர்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்.கறைபடாத கரங்களுக்கு என்றும் உரியவர்  கள்ளமும், கபடமற்றவர் , என்றும் எங்கும், வேற்றுமை பாராட்டாதவர் ,  இயக்க வரலாற்றை செம்மையாகவும், சிறப்பாகவும், நேர்மையாகவும் எடுத்துரைப்பவர்* எழுதி நூல் வடிவில் கொண்டு வந்தவர்.  மேலும் கொண்டு வருபவர்.*அழுக்காறு
,வெகுளி அற்றவர்* .சீரிய சிந்தனையாளர்**

ஒப்பற்ற இந்த ஆசிரியர் பேரொளியை போற்றுகிறேன். பின்பற்றுகிறேன், தமிழக ஆசிரியர் பெருமக்கள் செய்த பெருந்தவத்தால் கிடைத்த இந்த பேரறிஞனைப் , போற்றி நாளும் புகழ்கிறேன்

 என்னை போன்ற வயதில், அவரை அறிந்தவர்களுக்கும், இன்று இருக்கும் உறுப்பினர்களுக்கும், நாளை இந்த இயக்கத்திற்கு வருபவர்களுக்கும்
இந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்கத்தில் சேர்ந்து ஆசிரியர் இனம் என்றும் வாழ வேண்டும், வளம் பெற வேண்டும். வையகத்தில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும்.

 உள்ளத்தாலும் பொய்யாத உத்தமரை என் வாழ்நாளில் கண்டு நீங்காத , தொடர்பு கொண்டிருப்பது  நான் பெற்ற பேறு

தகவல்
சு.ம.பாலகிருஷ்ணன்

வரலாற்று நாயகன் செ.மு._கு.அருள்சாமி. சிவகங்கை

நேற்றைய நிகழ்ச்சிகள்
இன்றைய வரலாறு.
இன்றைய நிகழ்ச்சிகள்
நாளைய வரலாறு.
நீண்ட நெடிய வரலாற்றுக்குச் சொந்காரராகிய
 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மாநில பொதுச் செயலர்
செ.முத்துசாமிExMLC
அவர்கள் ஒரு
வரலாற்று நாயகன்.
இயக்க வரலாற்றில்
இவர் ஒரு சகாப்தம்.
சுமார் முப்பத்து இரண்டு ஆண்டுகள்.
இயக்கத்தின் பொதுச்
செயலாளராகவே
தொடர்ந்து தம் இயக்கப்
பணியை சிறப்பாக
ஆற்றிவரும் இவரைப்
போல்வேறு யார் உளர்?
டாக்டர் அம்பேத்கார்.
"நான் என் மக்களுக்காக உறங்காமல் விழித்திருக்கிறேன்"
என்று கூறியது போல
ஆசிரியர் பேரினத்திற்காக என்றும் *விழித்திருந்து
போராடும் *மாவீரன் *
அல்லவா?.இவர் பெற்ற
இன்னல்கள் எத்தனை!
எத்தனை!! அவற்றை நாம் அவர் வாயால்
கேட்டு வியந்து பலமுறை புத்துணர்வு
பெற்று பணியாற்றினோம்.
பணியாற்றி கொண்டிருக்கிறோம்.
"*அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
என்ற பாரதியாரின்.
வரிகளுக்கு ஏற்ப இயக்க வரலாற்றில்
அச்சம் தவிர்த்து வாழும்
நாயகன் அல்லவா நம்
பொதுச்செயலர் செ.மு.மாஸ்டர் இராமுண்ணிக்குப் பின்பு இயக்கத்தின்
பொதுச்செயலாளராக
பொறுப்பேற்றுக் கொண்டு இயக்கத்தை
துணிச்சலுடன்.
வளர்த்து மிகச்சிறப்பாக
செயல்பட்ட போதிலும்
சிலரது*பதவிஆசையால்  இயக்கம் பல முறை
பிளவு பட்ட போதிலும்
அஞ்சாது சோர்விலாது
துணிவுடன் செயலாற்றி
ஊழையும் தோல்வி
அடையச் செய்து வெற்றிகளைக் குவித்துள்ளார்.
(நாளையும் தொடரும்)
எழுதியவர்:-
கு.அருள்சாமி.
சிவகங்கை மாவட்டச்
செயலாளர்.15-வது மாநில மாநாடு சிறப்பு
மலரிலிருந்து...
தகவல்:-
செ.வடிவேலு.

தென்மண்டல மாநாடுசெ.மு.வுக்கு* ஒரு திருப்பு முனை._ஏ.சாமுவேல் வேதமாணிக்கம்.

மதுரையில் தென் மண்டல மாநாடு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருப்பு
முனை மாநாடு *மதுரை மேயர் முத்து*வரவேற்பு குழுத் தலைவராக பொறுப்பு ஏற்று செயல்பட்ட மாநாடு.அன்றைய மாநாட்டுச் செயலாளர் திரு.என்.இராமன். பெரியவர் வெள்ளைச்சாமி அவர்கள் மாநாட்டுப் பொருளர்.நான் மாநாட்டுச் செயலாளரின் நேர்முக உதவியாளராக செயல் பட்ட மாநாடு.

செ.முத்துசாமி தென் பகுதிக்கு வந்து *திரும்ப முடியுமா?,முதுகுத் தோலை உரித்து விடுவேன் என சூளுரைத்தவர் இருக்கும் இடத்தில் நடைபெற்ற மாநாடு.

கிராமப்புற ஆசிரியர் களுக்கு *கிராம ஈட்டுப் படிவேண்டும் என கோரிக்கை வைத்த மாநாடு மட்டுமல்ல,ஈட்டுப்  படி ரூ 10/-*என பெற்றுத்தந்த மாநாடு. அதன் பெருமைக்குரியவர் சமீபத்தில் காலமான வருவாய்த் துறை அமைச்சர் மாண்புமிகு நா கி.மனோகரன்.அவர்கள்.மாநாட்டில் அவர் நிதி அமைச்சர் என்ற
முறையில் கலந்து கொண்டு பேருரையாற்றினார்.  நமது பொதுச்செயலாளர் செயல்வீரர் செ.மு. அவர்களின் செயல்திறனையும், அணுகுமுறையையும் மாண்புமிகு நாஞ்சிலார் அவர்கள் வெகுவாக  பாராட்டிப் பேசினார்.
கிராம ஈட்டுப்படியின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சர் தொகையை முறைப்படி அறிவிப்பதாகக் கூறினார்.அதன் பலனை இன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புற ஆசிரியர்களும் அனுபவித்து வருகிறோம்.இதற்கு காரண கருவியாக பயன்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியையும்,மதுரையில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டையும், நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி. அவர் களையும் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். 

*இது ஓர் வரலாறு*. செ.முத்துசாமி.தென் பகுதிக்கு வந்து திரும்ப முடியுமா?என்றவரைத்தான் அன்று காணவில்லை. அரசடி இரயில்வே மைதானத்திலிருந்து அன்றைய மாவட்டத்தலைவர் திரு. மு.சேவகபாண்டியன்.தலைமையில் புறப்பட்டஆசிரியர் பேரணிகல்பாலம் வழியாக மாநாடு நடைபெற்ற தமுக்கம் அரங்கம் நோக்கி சென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சி. மாநாட்டுப் பொருளாளரும்,மாவட்டச் செயலாளருமான  பெரியவர் வெள்ளைச்சாமியும். நானும் ஆல்பர்ட் விக்டர் பாலம் என்ற பெரிய பாலத்திலிருந்து ஊர்வலத்தைபார்த்தோம்.

மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் போது கல்பாலம் இருக்கும் வைகை ஆற்றில் கள்ளழகர். இறங்கும் போது பெரும் திரளான மக்கள் கூட்டம் கூடும்.அதற்கு ஒப்பான கூட்டம் போல் ஊர்வலம்சென்றதை இன்னும் மறக்க முடியவில்லை.

ஏனெனில் பொது வாழ்க்கையில் மிக இக் கட்டான நேரத்தில் நடை பெற்ற மாநாடு.இயக்க வரலாற்றில்*பெருமை சேர்த்த மாநாடு*  மாநாட்டில் பேருரை
ஆற்றிய நமது பொதுசெயலாளர் செ.மு.வின் உரையை கேட்டுக் கொண்டிருந்த ஓர் கல்லூரி ஆசிரியர் கூறினார் உங்களுக்கு எப்படியோ! எங்களுக்கு செ.மு. Fighting.M.L.C.  என்று கூறினார்.
அன்பார்ந்த ஆசிரிய சகோதர,சகோதரியர்களே,அன்பர்களே,நண்பர் களே! *தென்மண்டல மாநாட்டின்*நிகழ்ச்சிகளை நினைவு கூறவும் முக்கிய நிகழ்வுகளை இம்மலரில்எழுதவும், வாய்ப்பளித்த மலர் குழுவினருக்கு அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!வணக்கம்!!
எழுதியவர்:-
ஏ.சாமுவேல் வேதமாணிக்கம்.
மாவட்டத்தலைவர்
மதுரை மாவட்டம்.
தகவல்:-
செ.வடிவேலு.
(15-வது மாநில  மாநாடு
சிறப்பு மலரிலிருந்து.) 

செ.மு.சாதித்தவைகள்எத்தனையோ?*_ஆர்.அருள்ராஜ்.

தோன்றில் புகழோடு தோன்றுக"என்றார் அய்யன் வள்ளுவன்.
இப்புவியில் எல்லாருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது.சிலருக்குத்தான் கிடைக்கும்.அந்தப்பட்டி யலில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி.யும் ஒருவர் ஆவார். சேலம் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் மரூர்பட்டி. என்ற ஊரில் பிறந்தவர் ஒரு கிராமத்தில் துவக்கப்பள்ளியில் இடைநிலை தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். 
ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டச் செயலாளராக.பணியாற்றினார்.பின்னர் ஆசிரியர் கூட்டணியின் ஸ்தாபகர் *மாஸ்டர் இராமுண்ணியால் அடையாளம் காட்டப்பட்டு மாநிலப்பொதுச்செயலாளராக.பணி ஏற்றார்.அன்று முதல் இன்றுவரை ஆசிரியர்களுக்காக ஓயாத பணியை எந்த பிரதிபலனும் எதிர்பாராது.தொய்வின்றி செய்து வருகிறார் இரு முறை தமிழ்நாடு சட்டமன்றமேலவை உறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட்டு பல சாதனைகளை ஆசிரியர்களுக்கு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உதவியாசிரியையாகப் பணி செய்து வந்தவர் திருமதி.ஜெயச்செல்வி என்பவர்.இவரது கணவர்*சென்னையில் அரசு பேருந்தில் நடத்துனராக பணிசெய்து வருபவர். இவருவரும் மாறுதலுக்காக பலமுறை முயன்றும் மாறுதல் கிடைக்கவில்லை.நமது பொதுச்செயலாளர்
செ.முத்துசாமி அவர் களிடம் அவர்களது நிலையை சொன்ன பின்பு அவர்களுக்காக முயற்சி செய்து உதவி ஆசிரியை திருமதி.ஜெயச்செல்வி அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு ,மாறுதல்.வாங்கிக் கொடுத்து பிரிந்து வாடிய கணவன் மனைவி ஒரே இடத்தில் பணிபுரிய மாறுதல்*வாங்கிக் கொடுத்தவர்.இப்போது அந்த தம்பதியருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்து ஒரு மாதந்தான் ஆகிறது.இது பெரும் மகிழ்ச்சிக்குரிய. செய்தியாகும். 

ஒட்டபிடாரம் ஒன்றியம் தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர கைத்தொழில்.(P.V.T) ஆசிரியையாக பணி செய்பவர்*திருமதி.கு. கனகலட்சுமி*என்பவர் முழுநேர ஆசிரியராக அரசு தேர்வு நடத்தியதில் தேர்ச்சி பெறவில்லை.தொடர்ந்து பகுதி நேர ஆசியராகவே பணி செய்து வந்தார் .பின் பொதுச்செயலாளர் செ.முத்துசாமி.மூலம் அரசுக்கு விண்ணப்பம் கொடுத்து மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.தற்போது முழு நேர கைத்தொழில் ஆசிரியையாகஇடைநிலை ஆசிரியர் ஊதியம் பெற்று வருகிறார்.இந்த ஆசிரியையின் வாழ்க்கைக்கு முழுதீபம் ஏற்றியவர் *நம் பொதுச்செயலாளர் செ.மு.*தான்.

இன்னும் எத்தனையோ செய்திகளைச் சொல்லலாம்.தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்கு செ.மு.செய்த சேவை ஏராளம் இன்னும் செய்ய காத்துக்கொண்டு இருப்பவர்.எனவே அவர் கள் பல்லாண்டு வாழவும்.இன்னும்
அவர்கள் சேவை வளரவும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
எழுதியவர்:-
ஆர்.அருள்ராஜ்.
தூத்துக்குடி மாவட்ட
தலைவர்.
15-வது மாநில மாநாட்டு
சிறப்பு மலரிலிருந்து
நாள்-13-08-2000.
தகவல்:-
செ.வடிவேலு.

தூயதொண்டர் செ.மு வழிநடப்போம் எழுதியவர்:- ப.ஆல்பர்ட் இலால்குடி*

ஆற்றல் மிக்க ஆசிரியர்  பேரினம் அடிமைப்பட்டு ஒடுங்கி போனகாலத்தே ஆர்த்தெழுந்து ஒன்று படுவோம்,போராடுவோம் என போர்ப்படை அமைத்தார் ஆசிரியர் அமைப்பை உருவாக்கிய *மாஸ்டர் இராமுண்ணி*அவரால் கண்டெடுக்கப்பட்ட நல் முத்தே நமது செயல் வீரர் செ.முத்துசாமி.

"பொதுநலத் தொண்டர் நன்றியை எதிர்பார்க்கக் கூடாது. நன்றி செலுத்துவது பயன் பெறுபவர் கடமை" "பொதுவாழ்வில் ஈடுபடுபவர் மானம் அவமானம் பார்க்கக்கூடாது"என்பது தந்தை பெரியார். பொன்மொழி. 

பொதுவாழ்வில் ஈடுபட்டு அன்றும்,இன்றும் நன்றியை எதிர்பாராது எதிர்பார்ப்போடு இயக்கத்திற்கு வந்தோரின்  ஏச்சிகற்கும் பேச்சிற்கும் செவிசாய்க்காது எத்தனை பேர் சுய நலத்திற்காக தனி இயக்கம் கண்டாலும், கருமமே கண்ணாக,
கறைபடாத கையாக
எளிமையே உருவாக
,கனிவான வாதத்தால் களம்பல கண்டு,
சிறை பல ஏகி
கல்வித்துறையினரால்கவரப்பட்ட,
கண்ணியமிக்கபார்லிமென்டேரியனாக
சாதனைகளை
முத்திரையாகப் பதித்து
ஆட்சியாளர் பலராலும்
ஆசிரியர் தொண்டர் முத்துசாமி என பாராட்டப் பெற்று 
எல்லா ஆசிரியர் இயக்க தலைவர்களுக்கும்  தலைமையாக 
ஏற்றமிகு வீறுநடை கொண்டு இன்று வரை 27 ஆண்டுகாலம் 
இயக்க பொதுச்செயலாளராகப்
பணியாற்றும் எம் தலைவர் செ.முவை
பின் பற்றியதால் வரலாற்றில் முத்திரைகள் பதிக்கப்பட்டன.


1972-ல் சிறைப் போராட்டத்தில் சிறை சென்ற இலால்குடி வட்டாரத் தலைவர் இராமையா அவர்கள் சிறைக் கொடுமையால் உடல்நிலை பாதித்து சில மாதத்தில் காலமானார். வட்டாரத்தின் சார்பில் நிதியளிப்பு நிகழ்ச்சி மாநிலப் பொறுப்பாளர் களை அழைத்து அன்றைய அமைச்சர் மாண்புமிகு*அன்பில் தர்மலிங்கத்தின் மூலம் அந்த சமயத்தில் இறந்தஎட்டு ஆசிரியர்கள் குடும்பத்திற்கும் நிதி வழங்கினோம்.அந்த நிகழ்ச்சியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு  அரசாங்கத்தின் மூலம் நிதி அளிக்க வேண்டுமென*பொதுச் செயலாளர்*முத்துசாமி வேண்டுகோள். விடுத்தார் அதை ஏற்று மாண்புமிகு அமைச்சர் அன்பில் தர்மலிங்கம்.முயற்சியால் தான் அன்று இறந்தவர்கள் அனைவருக்கும் ரூ60000/- வீதம் கிடைத்தது."*ஆளும் கட்சிக்கு அடிபணிய மாட்டோம்*,எதிர்கட்சிக்கு எடுபிடி ஆகமாட்டோம்"என்ற தாரகமந்திரத்தை கடைபிடித்து இயக்கத்தை கட்டி காத்து வருகிறார் பொதுச்செயலாளர் செ.முத்துசாமி

திருவரங்கத்தில் நடந்த பொதுக்குழுவில் மதிய உணவுப் போராட்டத்தை முன் எடுத்த நமது பொதுச் செயலாளருக்கு  லால்குடி வட்டாரம் முன் குரல் கொடுத்து வரவேற்று,அன்று போராட்டத்தை வேண்டாம் என்ற இன்றைய வேறு இயக்கத் தலைவருக்கு பதிலடி கொடுத்தது. நமது பொதுச்செயலாளருக்கு கிடைத்த பொறுப்பை மிகச்சரியாக காலமறிந்து,இடமறிந்து கடுமையாக பணியாற்றியதால் பொதுச்செயலாளர் பதவி தேடிவந்தது,அவரால் பதவிக்கு மதிப்பும் மரியாதையும் கி டைத்தது.செ.மு வழிநடப்போம்*
*வாழ்க செயல் வீரர் செ.முத்துசாமி*
எழுதியவர்:-
ப.ஆல்பர்ட் இலால்குடி*
தகவல்:-
செ.வடிவேலு.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.

Friday 19 June 2020

ஆசிரியர் நலம் காத்தவர் செ.மு_ஆ.சின்னப்பன் நகரச் செயலாளர் மேட்டுப்பாளையம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரத்தில்1969ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நகரக்கிளை பொதுக்குழு கூட்டம் சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.கூட்டத்திற்கு பொதுச்செயலாளர்செ.முத்துசாமி.அவர்கள்வருகை ருகிறார்கள்.இயக்கம்ஒரே அணியில் இருந்தகாலம்.அன்றைய நகரக்கிளை செயலாளர் நானே.கூட்டமுடிவில்செ.முத்துசாமி அவர்கள் இயக்க வளர்ச்சிக்கு நிதி திரட்டுகிறார்கள்.அனைவரும்உள்ளதைஅன்புடன் கொடுக்கின்றனர்.அப்பொழுது ஒரு பெண் ஆசிரியை தன் கையில் நிதியில்லை*வளர்ச்சி நிதிக்காக தன்கைக்கடிகாரத்தை கழற்றிப் செ.மு அவர்களிடம் கொடுக்கிறார்கள். அவரது துணிச்சலானசெயலைப் பாராட்டி கடிகாரத்தை திரும்பிக்கொடுக்கிறார் செ.முஎந்த அளவில் *பற்றும்பாசமும்*ஆசிரியர்கள்செ.மு மீது வைத்திருந்தனர் என்பதை இந்நிகழ்ச்சிஎடுத்துக் காட்டியது.அப் பெண் ஆசிரியைதிருமதி. வி.பரிமளகாந்தம் என்பவராவார்.மற்றெரு சமயம் ஆசிரியர் சங்க விழாவில் பள்ளித்துணை ஆய்வாளர் தமிழ்நாட்டின் கல்வித் துறை செயலாளர் யார்என்று ஒரு கேள்வியைகேட்கிறார்.உடனே ஒருஆசிரியர் எழுந்து திரு.செ.முத்துசாமி என்றுகூறுகிறார் .எந்த அளவில் நமது செ.மு அவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்தார் என்பதற்கு இதுவும் ஒருசான்றாகும்.

            ஆசிரியர்கள் விழிப்புணர்வு இல்லாமல் கல்வித்துறையின் கீழ் இயந்திரம் போல் செயல்பட்ட காலம்.நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் .அவர் தம் கடமைகளை செய்து உரிமைகளைப் பெற, உரிமைக் குரல் கொடுத்து,சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கச் செய்ததின்  மூலம் தமிழ்நாட்டு தொடக்க,உயர் தொடக்க,உயர்நிலைப் பள்ளி ஆசிரியரகளின்
நன் மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்றவர்  செ.மு.தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணிபாதுகாப்பிற்காக செ.மு அயராது உழைத்து பல வெற்றிக்களைக் கண்டார்.மேட்டுப்பாளையம் மகாஜன தனியார் பள்ளி நிர்வாகம் ஆர்.டி.கிருஷ்ணசாமி என்ற ஆசிரியரை தக்க காரணம் ஏதுமின்றி நிரந்தரப் பணிநீக்கம் செய்தது மூன்றாண்டு காலமாக சம்பளமே இல்லாமல் தனித்துப் போராடி வந்த அவர்,தம் பிரச்சனையை மேட்டுப்பாளையம் நகரக் கிளை மூலம் நமது பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்களிடம் ஒப்படைத்து நீதி கிடைக்கவும்,தனியார் பள்ளி பணிப்பாதுகாப்பு கிடைக்கவும் கோரிக்கையாக வைத்தார்.


1975 ஆம் ஆண்டு மே மாதம் நமது பொதுச்செயலர்செ.மு அவர்கள் மேட்டுப்பாளையம் நகரத்தில் சுமார்  22 நாட்கள் முகாமிட்டு மேற்படி ஆசிரியரின் பிரச்சினைக்குத் தீர்வு காண உண்ணாவிரதம்,தெருத்தெருவாக  ஊர்வலம்,நிர்வாகிகள் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்,போன்ற அறப்போராட்டத்தை நடத்தச் செய்தார்.போராட்ட இறுதியில் மகாஜன நிர்வாகத்தில் இருந்த காட்டூர் பள்ளியை 01-06-1975 முதல் நகராட்சி நிர்வாகம் ஈர்ப்பு செய்ய அரசு உத்தரவிட்டது  பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஆர்.டி.கிருஷ்ணசாமி அவர்களுக்கு அதே பள்ளியில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு 01-06-1976ல்  வேலைகிடைத்தது இது ஒரு மாபெரும் வரலாற்று சாதனை  அல்லவா? இவரது முயற்சியையும், திறமையையும், சர்வ கட்சியினரும் அனைத்து தொழிற்சங்கங்களும், பொதுமக்களும்,ஆசிரியர்களும் வெகுவாக பாராட்டிப் புகழ்ந்தனர். 

 இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்கள்1968முதல் இன்று வரை 25 ஆண்டுகளுக்கு மேல் *தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின் *பொதுச் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றியதை சிறப்பிக்கும் வகையில் வெள்ளிவிழா 07-10-95ல் ஆசிரியர் பேரினம் கொண்டாடுகிறது.இந்த நல்ல நாளில் செ.மு. என அன்பாக அழைக்கப்படும் நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி.அவர்கள் நற்சுகத்துடன். நீண்டநாள் வாழ்ந்து ஆசிரியர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்ற அருள வேண்டும் என்று
இறைவனை வேண்டுகிறேன்,நல்வாழ்த்துக்களையும் நன்றியையும் காணிக்கையாக்குகிறேன். 

எழுதியவர்:-
ஆ.சின்னப்பன்
நகரச் செயலாளர்
மேட்டுப்பாளையம்.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:-
செ.வடிவேலு.

Thursday 18 June 2020

வரலாற்று நாயகன் செ.மு_வி.வரதராசன்எம்ஏ எம்எட்* .மேனாள் திருப்பூர் மாவட்டச் செயலர்

இதனை இதனால் இவன் முடிக்குமென்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்பது வள்ளுவர் வாக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஆரம்ப ஆசிரியருக்கு என உரிமைக்குரல் கொடுக்கத் தனி இயக்கம் கண்டவர் இராமுண்ணி.பெரியவர்.தொடக்ககப் பள்ளி ஆசிரியர்களின் உரிமையை நிலை நாட்ட வீறு கொண்டு எழுந்து இயக்கம் கண்ட அப்பெரியவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தை வழிநடத்தி சென்றார்.

கொல்லிமலை.பகுதியில் இயக்கத்தை வளர்த்து சேலம் மாவட்டத்தில் இயக்கத்தை நிலைநிறுத்தி *சேலம் மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்று,மாவட்ட மாநாட்டை மாநில மாநாடு போல நடத்திக் காட்டியசெம்மல் செ.முஅவர்களை தமிழ்நாட்டு ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பக்கத்தில் வைத்துப்பயிற்சி கொடுத்தார் இயக்கத் தந்தை.செ.முத்துசாமிஅவர்களின் வெற்றிப்பயணம் தொடங்கிய நாள்*1968டிசம்பர்29 ஆம் ! இவர் பொதுச் செயலாளராகப்பொறுப்பேற்ற நாள் தான் அது.இதன் பின் பட்டிதொட்டியெல்லாம் இயக்கத்தைக் காலூன்றச் செய்தார்.

நன்னீர் பாயும் நன்செய் நிலத்தில் வேளாண்மைப் பணி செய்வது எளிதானது.
ஆனால் கல்லும் முள்ளும் நிறைந்த நிலத்தில் நீர்வளம் குறைந்த மண்ணில் விளைச்சல் காண பெருமுயற்சியும் கடும் உழைப்பும் தேவை என்பதை நாம் அறிவோம். செ.முத்துசாமி. பொதுச்செயலாளராகப்பொறுப்பேற்ற சமயம் ஆசிரியர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. பொருளாதார ரீதியில் ஆசிரியர்கள் பட்ட அல்லல் பெரிதாக இருந்தது.அதைவிட அவர்கள் தன்மானமும்கௌரவமும்*.பாதிக்கும் வகையிலும் அவர்கள் மேற்கொண்டிருக்கும் அறப்பணியாம் ஆசிரியப் பணியை கவனிப்பதை விட கல்வியில்லாப்.பிற பணிகளை அவர்கள் செய்ய வேண்டும் என நிர்ப்பந்தங்கள்,காலையில் ஒரு பள்ளிமாலையில் இன்னொரு பள்ளி என்று சொல்லத்தக்க அளவில் மாறுதல் அச்சுறுத்தல்கள்,திடீர்  சஸ்பென்ஷன் உத்திரவு-அதிரடி *பணி நீக்க*ஆணைகள் என சர்வதிகாரம்.தலைவிரித்து ஆடிய நேரம் அது.ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களின் ஒட்டு மொத்த குரலாக,அநீதியை எதிர்க்கும் அழுத்தமான குரலாக,நீதியின் குரலாக,சமுதாயத் தன்மானம் காக்கும் தரம் மிக்க குரலாக ஆசிரியர்களைத் தட்டி எழுப்பும் உணர்ச்சிக் குரலாகசெ.முத்துசாமி அவர்களின் குரல் ஒலித்ததை நாம் கண்டோம் தக்கவர் இவர் என்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் இவரைத் தேர்ந்தெடுத்து அமர வைத்த தமிழ்நாடு சட்ட மேலவையிலும் இவரது குரல் மொத்த ஆசிரியர் சமுதாயத்துக் காதில் ஒலித்தது.
                   அடேயப்பா! எத்தனை எத்தனை பிரச்சனைகளை எடுத்தியம்பி,எப்படிப்பட்ட வாதங்களை முன் வைத்து ஆசிரியர்களுக்காக வாதாடியுள்ளார்!அன்னாரின் சட்ட மேலவைப் பேச்சுக்களைத் தாங்கி வெளிவரவிருக்கும் மலரைப் பாருங்கள்.வியப்பும் பெருமிதமும் தோன்றும்
இவர் ஒரு வழக்கறிஞராக இருந்து இவர் வாதாடிய பிரச்சனைகளை வழக்காகக் கருதி ஆசிரியர்கள் பெற்ற பயனை நல்ல நியாயமான தீர்ப்பாகக்
கருதினால் இவருக்கு நாம் செலுத்தியிருக்க வேண்டிய வழக்கறிஞர் கட்டணம் எவ்வளவு வரும் என்று நினைத்துப் பார்த்திருப்போமா? கட்டணம் கொடுத்தோமா? எண்ணிப்பார்ப்போம்.பெற்ற பயனால் நாம்  விடும் நிம்மதிப் பெருமூச்சு- மகிழ்ச்சி புன்னகை இவையே தனக்கு கிடைத்த கட்டணம் என்று  தானே உள நிறைவு கொள்கிறார்.

                 ஏதோ புகழ்ச்சிக்காக எழுத வேண்டும் .விழா வருவதால் எழுதவேண்டிய கடமை என்பதற்காக எழுதப்படுவது அல்ல இது. உண்மையிலேயே,புரிந்து கொண்டு புகழ்ந்து  பேசினாலும்,புரியாமல் புழுதி வாரித்தூற்றினாலும் ஆசிரியச் சமுதாயத்துக்காக உழைப்பதில் பின் வாங்காமல்,ஆற்றலாய்க் கருத்துக்களை எடுத்துச் சொல்லி சமுதாய மேம்பாட்டுக்குப் பாடுபடும் தலைவர்கள் நம் நாட்டில் பலர் இருக்கிறார்கள்.அவர்களில் குறிப்பிடத்தக்க சிறப்பானவர்கள் சிலர் இருக்கலாம்.எனினும் நிச்சயமாக இவர்களில் முதல்வரிசையில் முதல் நபராக விளங்கும் தன்மையை தன் ஆற்றல் மிகு செயலால் கொண்டு இருப்பவர்  செ.முத்துசாமி.என்று சொன்னால் நிச்சயம் புகழ்ச்சி இல்லை.உண்மையிது. 

      நாடு விடுதலை பெற்ற  பின்னர் தமிழ்நாட்டில்  ஐந்து ஊதியக்குழுக்களை
நாம் பார்த்துவிட்டோம்.  இவைகளில் முதல் ஊதியக்குழுவைத் தவிர்த்து மற்ற நான்கு ஊதியக் குழுக்களிலும்  ஆசிரியர்களுக்காக  வாதாடி யுள்ளார்  செ.மு.படிப்படியான முன்னேற்றத்தில் நாம் தற்போது குறிப்பிடத்தக்க நிலை
அடைந்துள்ளோம்.


எழுதியவர்:-
வி.வரதராசன்எம்ஏ எம்எட்*
.மேனாள் திருப்பூர் மாவட்டச் செயலர்
.பொன்விழா
மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:-
 செ.வடிவேலு.

சத்தியத்தின்பாதையில் செ.மு*_எம்.அல்போன்ஸா முன்னாள்மாவட்டச் செயலாளர். சிவகங்கை மாவட்டம்.

சத்திய மனிதனின் வாழ்வில் சோதனைகளும் துன்பங்களும் நீக்கமற நிறைந்து நின்றாலும், அவன் ஒரு நாளும் துவண்டு விடுவதில்லை.அவன் கொண்ட இலட்சியத்தில் எதிர்ப்படும் இடையூறுகளையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையில் பயணிக்கிறான். என்னைப் பெற்று வளர்த்தவர்களும்,என்னைப் பயிற்று வித்த ஆசான்களும், எனக்கு வழிகாட்டிகளாக  நான் ஏற்றுக்கொண்ட தலைவர்களும் சத்தியம் என்பதையே எனக்கு உயிர் மூச்சாக அளித்து விட்டார்கள் என்பதால் எனது 61 வது வயதிலும் எனக்கென்று நான் அமைத்துக் கொண்ட பாதைகளிலிருந்து இம்மியளவுகூட நான் நெறி பிறழ்ந்தது இல்லையென நெஞ்சுயர்த்திக் கூற முடியும் இந்தக் கண்ணோட்டங்களின் அடிப்படையில் தான் நான் சாரவேண்டிய இயக்கமாக*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியைக் கண்டு கொண்டேன். இயக்க நிறுவனர் மாஸ்டர்இராமுண்ணி
அவர்களின் காலத்தில்  *இயக்கம் ஒரு வீச்சைப் பெறவில்லை*1946ஆம் ஆண்டிலேயே இந்தவொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டாலும் வளர்ச்சி என்பது ஆமை வேகமாக இருந்தது.*சொல்லில் வல்லவன்*,சோர்விலான்,செயல்மறவன் தற்போதைய இயக்க வெள்ளிவிழா நாயகன் செ.முத்துசாமி.அவர்கள் பொறுப்பேற்ற பின் தான்,இயக்கம் இயக்கமாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் இதயங்களில் ஊடுருவிய சங்கமாக உருவெடுத்தது.மாநிலம் முழுமைக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் இதயங்களில் இந்த இயக்கம் எவ்வாறு அசுர வேகத்தில் கொலுவேறி யதோ அதே வேகத்தில் உடைவையும் சிதைவையும்  ஏற்றுக் கொள்ள வேண்டிய போட்டியும் பொறாமையும்,சுயநலமும் இயக்கத்தில் இழையோடியது.இயக்கத்தை அரசியல் கண்ணோட்டத்தில் கொண்டு செல்லத் துடித்தார்கள்,பதவி ஆசைகளால் இயக்கத்தைக் கூறுபோடத் துடித்தார்கள்,இயக்கத்தை வைத்துப் *பணம் பண்ணலாம்*என்று கணக்கு போட்டவர்கள் என்பதாகப் பல்வேறு கால கட்டங்களில் தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்த இயக்கத்தை கூறு போட்டார்கள்.இவ்வாறு கூறு போட்ட நிலையிலும் *சோர்ந்து விடாமல்*சோரம் போய் விடாமல் தனக்கென்று அமைத்துக் கொண்ட இலட்சிய வேட்கைகளிலிருந்து சிறிது கூட நெறி பிறழ்ந்து விடாமல் தாக்கு பிடித்தவர் தான்

     இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் திருமிகு செ.முத்துசாமி.அவர்கள்.பள்ளிப் பணிகளில் நம் சத்தியசித்தாதங்களைப் புகுத்தினால் போதும் என்று பணியாற்றிக் கொண்டிருந்த நான்,காளையார் கோவில் வட்டாரத்தில் ஊடுருவிய இயக்க அலங்கோலங்கள் காரணமாகவும் சத்தியபபாதைகளை மறந்து சர்வ சாஷ்டாங்கமாகப்பரணி பாடும் அவலங்கள் ஊடுருவி நின்றதன் காரணமாக வரும்,ஒரு இயக்கத்திற்குள் நுழைய வேண்டிய நிர்பந்தத்தற்கு ஆளானேன்.திக்கு தெரியாத காட்டில் திசை திருப்பிவிட்டது போல் ஒரு கூட்டம் தவித்து நின்ற போது நான் அவர்களுக்கு தலைமை ஏற்க வேண்டியதாயிற்று. அப்பொழுது நான் சார்வதற்கும் என்னைப்
பின்பற்றி நிற்பவர்கள் சார்ந்து கொள்வதற்கும் நான் கண்டெடுத்த முத்து தான் தானைத் தலைவன் செயல்மறவன்செ.முத்துசாமிஅவர்களைப் பொதுச்செயலாளராக் கொண்ட *தமிழ்நாடு  ஆசிரியர் கூட்டணி* தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தான் அங்கம் வகிக்க வேண்டுமெனத் தேர்ந்தெடுத்தது ஏன்?பிற இடங்களில்,இயக்கத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்காட்டிய சோமாறி களிடம் என்ன இருந்தது?  கையூட்டு பெறுவது தொழிலாக இருந்தது! இயக்கப் பொறுப்பாளர்களே அலுவலர்களுக்கு இடைத்தரகர்களாக இயங்கும் அவலம் இருந்தது. இயக்கம் என்ற பெயரால் ஆசிரியர்களையே சுரண்டித்தின்னும் அசிங்கம் இருந்தது. இதன் காரணமாக ஆசிரியர்களின் சுயமரியாதை சீரழிந்து மீண்டும் ஒரு அடிமைகள் கூட்டம் இயக்கங்களில் ஊடுருவி நின்றது. இவை எல்லாம் தவிர்த்து நின்ற இயக்கமாக இயக்கத்தை வளர்த்து வந்த கட்டிக்காத்த சத்தியசீலனாக மதிப்புமிகுசெ.முத்துசாமி ExM.L.Cஅவர்கள் என் கண்முன்னே நின்றார்.
                  ஆதலின் அவ்ரில் நானும் என்னைப் பின்பற்றி நின்ற அப்பாவி ஆசிரியர்களும் அவரின் தலைமையின் கீழ் இயங்கிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் சங்கமித்தோம். நான் இயக்கத்தில் இருந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் தான் ஆறு ஆண்டுகள் காளையார் கோவில் வட்டாரசெயலாளர் ஆறு ஆண்டுகள் சிவகங்கை மாவட்டச் செயலாளர். இந்த பன்னிரெண்டு ஆண்டுகளிலும் எந்தவொரு ஆசாபாசங்களுக்கும் ஆட்பட்டு விடாமல் நான்
அணிந்து கொண்ட கதர் ஆடைகளில் மாசு படாமல் ஆசிரியர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன்.

         என்னைச் சார்ந்திருந்தவர்களை சுய சிந்தனை உள்ளவர்களாகப் பழக்கியிருக்கிறேன். அன்பும் நட்பும்,உற்றார் உறவினர் உறவும் இயக்கத்தில் இழையோடச் செய்திருக்கிறேன். ஏனேனில் ஆசானாக இன்றிப் பழகுவதும்,
அந்தப் பழக்கத்தால் அவரிடம் பயிலும் மாணவர்கள் அவ்வாறு உருவாவதும் நிகழ்ந்து விட்டால் சத்தியம் காக்கும் சமுதாய மாற்றம் நிகழ்ந்து விடும்.இது நிகழ்ந்திட ஆண்டுகள் பலவாகலாம்.ஆண்டு கள் பலவாயினும் சமுதாயத்திற்கு எது தேவையோ அந்த சத்தியம் கிடைக்கிறது. என்பதை எண்ணும் போதும்அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை விட வேறு என்ன கிடைக்கிறது?மேற்கண்ட எனது சத்திய சமுதாய மாற்றச் சிந்தனைக்கு வழிகாட்டி யார்? அவர் எனக்கு இளவலாக இருந்தாலும் என் கொள்கைக்கு மூத்தவர் கொள்கை மறவன் செ.முத்துசாமி* அவர்கள் இயக்கப் பணியில் வெள்ளிவிழா க் காணும் அவரின் சித்தாந்தங்களே சத்திய சமுதாயம் கிடைக்க ஒரு வழியாகும். ஆனால் தற்போதைய நிலை என்ன? பதவி வேண்டும் என்று எண்ணிய வர்கள் எல்லாம், இயக்கம் கண்டு விட்ட அவலம். ஊழலுக்கு வித்திடும் உருப்படாத போக்குகள்  கொடுப்பதைக் கொடுத்து பெறுவதைப் பெறுகின்ற கேடுகெட்ட இயக்க சித்தாந்தம்.இயக்கங்களில் மேலோங்கி நிற்கின்றன இடைத்தரகுச் சிந்தனை சுயமரியாதைகளை அடகு வைத்து.நிற்கும் மேம்போக்குக்குப் பார்வை.சுயநலச் சிந்தனைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கும்*சுரண்டல்  சிந்தனை*இவைகளே. இந்த அவலங்கள் அனைத்தும் அகன்றால் மட்டுமே சத்தியத்தின் பாதையில் இயக்கம் இருக்கும்.அந்த இயக்கத்தை நாம் கண்டாக வேண்டும்.அப்படியேன்றால் மேற்கண்ட தீயதுகள் அகற்றி தமிழக ஆசிரியர்களிடையே* நல்லதுகளைக் கொண்டு வரக்கூடிய ஒரே சக்தி எங்கே இருக்கிறது? 

        அஃது நம் பொதுச்செயலாளர் திருமிகு செ.முத்துசாமி.அவர்களிடமே என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து செயல்பட்டால் இயக்கம் சத்தியத்தை.நோக்கி என்பது நிதர்சனமாகும். வெள்ளிவிழாகாணும் கொள்கைக்குன்றை நீதியின் காவலனை* அடலேறு மறவனை பொதுச்செயலாளர்செ.முத்துசாமிஅவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
                             இதுவரை காத்து வந்த  சத்தியத்தை என்றும் காத்து சத்திய சமுதாய  மாற்றம் கட்டிட ஆசிரியர்களை பயிற்று விக்க வேண்டுகிறேன்.
சத்தியசித்தாந்தங்களுக்குத் தான் இறுதி வெற்றி ஆதலின் எந்த நிலையிலும் மாறி விடா மல்சத்திய பாதையில் இயக்கம் வளர்த்து சமுதாய மாற்றத்திற்கு
வித்திடவேண்டுகிறேன்.  ஆசிரியர் சமுதாயம் சத்தியத்தை நோக்கட்டும்.அதன் வழியாக சமுதாய மாற்றங்கள் பூத்து மலர்ந்து  *நறுமணம்
வீசட்டும்*

எழுதியவர்:-எம்.அல்போன்ஸா
முன்னாள்மாவட்டச் செயலாளர்.
சிவகங்கை மாவட்டம்.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:-செ.வடிவேலு

Monday 8 June 2020

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்_வாழ்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மா.கருப்பண்ணன் அவர்கள் 77 பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களில் ஒருவர்

நாமக்கல் மாவட்டத்தில்" 77" தலைமை ஆசிரியர்கள் நான் உள்பட 1_8 _2012 இல் சுகாதாரக் குறைவான தொழில் செய்வோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை பெற்றுக் கொடுத்த பிரச்சனையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டோம்.  அப்போது நான் தமிழக ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினராக இருந்தேன் தவறு ஏதும் செய்யாதவர்கள் நாங்கள் குழந்தைகளின் கல்வி நலனுக்காக உதவிய ஆசிரியர்களாகிய எங்களுக்கு அந்த சங்க பொறுப்பாளர்கள் உதவி செய்ய மறுத்துவிட்டனர்

 அந்த நேரம் நடுத்தெருவில் நின்று கொண்டிருந்த நேரம் அப்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களை சந்தித்தபோது நீ எதற்கும் கவலைப்படாதே ஆசிரியர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்க கூடிய  செ.முத்துசாமி எம்எல்சி ஐயா  அவர்கள் உள்ளார் என வட்டாரச் செயலாளர் திரு ராமசாமி அவர்கள் என்னை அழைத்துச் சென்று 12_8_2012 அன்று நாமக்கல் அவருடைய இல்லத்தில் சந்தித்து அறிமுகம் செய்து வைத்தார்

அப்போது அய்யா அவர்கள் எதற்கும் பயப்படாதே நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார் 

77 தலைமை ஆசிரியர்களை அழைத்துக்கொண்டு ஐயா அவர்கள் கல்வி அமைச்சரை கோவையில்  சந்தித்து முறையிட்டார். அதன்பிறகு தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அவர்களை அவருடைய வீட்டில் சந்தித்து முறையிட்டார். அதன் பின்னர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,  தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரிடம் பலமுறை முறையிடப்பட்டது அனைத்திலும் அய்யா அவர்கள் பொறுமையாக எடுத்துரைத்தார்

 பலமுறை தொழில்துறை அமைச்சர், கல்வி அமைச்சரை சந்தித்த பிறகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் கல்வி அமைச்சரிடம் இவர்கள் அனைவரும். எங்கள்ஊர் ஆசிரியர்கள் இவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று அழுத்தமாக கூறி மீண்டும் பணி வழங்க வேண்டும்  என்று கூறினார் கல்வி அமைச்சர் அவர்கள் சிறந்த முறையில் அய்யாவின் வாதத்தை ஏற்றுக்கொண்டு விரைவில் சரி செய்கிறேன் என்று கூறினார் 

11_2_2013  அன்று ஐயா அவர்களின் கடின முயற்சியால் தலைமையாசிரியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தினார்

 பிறகு மோகனூர் ஒன்றியத்தில். இரு ஆசிரியர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில்  சிக்கிய எங்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார் அய்யா  மீண்டும் இயக்குனர், கல்விச் செயலர் ,கல்வி அமைச்சர், தொழில்துறை அமைச்சர் ஆகியோரை பலமுறை பார்த்தும் பயனில்லை 

கடைசியாக நமது அய்யா அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவரிடம் முறையிட்டார் அதற்கு அவர் சரியான முறையில் பதில் தராததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எங்களை 26 6 2013 அன்று மீண்டும் பணியில் அமர்த்திய பெருமை நமது  செ.மு அவர்களையே சாரும் அவர் இல்லை எனில் எங்களுக்கு ஆசிரியர் பணி இல்லை இந்த 77 ஆசிரியர் பிரச்சினையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் தலைவர் ஐயா செ.முத்துசாமி   அவர்கள் 22 முறை சென்னை சென்று ஆணை பெற்று தந்தார் ஐயா அவர்களின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது  எங்கள் பிரச்சனைக்கு கைகொடுக்க  கையில் எடுத்து எங்களை மீட்க முன்வராத மற்ற சங்க பொறுப்பாளர்கள் தவறான உண்மைக்கு புறம்பான கையூட்டு கொடுத்து காரியத்தை முடித்தனர் என்ற பிரச்சாரம் தோல்வியை தழுவியது 

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்  என்ற கூற்று மெய்யானது 
வாழ்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 
வளர்க ஆசிரியர்களின் அறப்பணி 

இவன்
 மா.கருப்பண்ணன் 
 77 பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களில் ஒருவர்

செ.மு.வின் தொண்டு நிழலாடும் நிஜங்கள்*_திரு.ஆர்.அருள்ராசு* தூத்துக்குடி மாவட்ட தலைவர்.

எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் நான் 1966-ஆம் ஆண்டு சேலம்  வட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்தில் பெரிய வடகம் பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதன் முதலில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்

. அதன் பின்பு மறு வருடத்தில் காடையாம்பட்டி ஒன்றிய சேர்மன் வெங்கடாசலம் என்பவர் இதே ஒன்றியம் பண்ணப்பட்டி என்ற ஊரில் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி என்பவரை பள்ளி நடைமுறையில் ருக்கும் போதே செருப்பால் அடித்து விட்டார்.இதில் ஆணையாளர் அவர்கள்
சரியான நடவடிக்கை எடுக்கவில்லை மருத்துவ அலுவலரும் ஆசிரியர்க்கு எதிராக சான்றிதழ் வழங்கினார்.
எனவே ஒரு கண்டன பேரணிசுமார் பத்தாயிரத்துக்கும்*. அதிகமான ஆசிரியர்களை திரட்டிக் காடையாம்பட்டிக்கும், பண்ணப்பட்டிக்கும் 10 கிலோ மீட்டர் தூரம் பெங்களூர்-சேலம் சாலையில் நடந்தே சென்று நடுப்பட்டி  ஆணையாளரின் வீட்டு முன்பு *ஆணையாளரே! ஆணையாளரே!*அடங்கி கிடப்பது ஏன்! ஆணையாளர் தங்கப்பனே அடங்கி கிடப்பது ஏன்? கோஷம் போட்ட பின்பு தீவட்டிபட்டி வழியாக பூசாரிப்பட்டி வந்து சேர்மன் வெங்கடாசலம் வீட்டுக்கு முன்பு கைது செய் ,கைது செய்,குடிகாரன் வெங்கடாசலத்தை  கைது செய் என்று விண்ணதிர கோஷமிட்டு இறுதியாக
பள்ளப்பட்டி சென்று கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.இதைச் செய்தவர் நமது பொதுச் செயலாளர் திரு.செ.முத்துசாமி ஆவார்கள்.
அன்று அவர் ஒன்றுபட்ட ஆசிரியர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலர் ஆவார்.என்னை அவருடைய பேச்சாற்றலும்,இளமை  துடிப்பும்,அவரது போராட்டக் குணமும் என்னை வெகுவாக பற்றிக் கொண்டது.பெத்தநாயக்கன்பாளையம் வட்டார  A.E.O திரு.கந்தசாமி என்பவர்
அன்றைய கல்வி அமைச்சர் அரங்கநாயகம்.என்பவர் ஆணையால் அன்றைய கல்வி இணை இயக்குநர்  ஆனந்தராஜ்.என்பவரது பேச்சை கேட்டுக்கொண்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களையும் 
மதிக்காமல் அலட்சியமாக நடந்து வந்தார்.இதை பொதுச்செயலாளர் செ.முத்துசாமி கவனத்திற்கு‌ கொண்டு சென்றோம்.
உடனடியாக அந்த A.E.O.வை அவர் எந்த மேல்நிலைப் பள்ளியிலிருந்து வந்தாரோ அதே பள்ளிக்கு மீண்டும் உதவி ஆசிரியராக அனுபப்பட்டார். அன்றைய இயக்குநர் கி.வெங்கடசுப்ரமணியம்.A.E.O.வுக்கு எவ்வளவு சொல்லியும் பொதுச்செயலாளர் அதை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பியதுவரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல ஒரு பெரிய சகாப்தமும் கூட.

சேந்தமங்கலம் வட்டார  A.E.O.சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்களுக்கு முறையற்ற இடமாற்றம், வேண்டுமென்றே* G.P.F நிதியிலிருந்து தாமதமாகக் கடன் வழங்குதல் போன்ற காரணங்களுக்காக. A.E.O.வேலையை நீக்கம் செய்து மீண்டும் அவரை பழையபடி உயர்நிலைப் பள்ளிக்கே அனுப்பியதும் மறக்கமுடியாத நிகழ்ச்சி
யாகும்
  .சத்துணவு போராட்டம் சாதாரணமானது அல்ல அதையும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கி 67 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த பெருமையும் நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமிக்கே பொருந்தும்
.
சட்டோபாத்தியாயா  கமிஷன் முன்பு பல முறை சாட்சியங்கள் அளித்து *தேசிய ஊதிய கமிஷன்*அமைத்து தந்தவர்.மத்திய அரசுக்கு இணையான சம்பளம் பெற  முழுக்க  முழுக்க காரணமானவர் நமது பொதுச்செயலாளர் 'செ.மு..ஆவார்.  நமது பொதுச்செயலாளரின் திறமையைக் கண்டு மத்திய அரசு ரஷ்யாவில் நடைபெற்ற அணுஆயுத குறைப்பு மாநாட்டிற்கு அனுப்பியது.அங்கு தனது கருத்தையும் திறம்படக் கூறி உலகளவில் தன்னை
ஒரு திறமைசாலி என்று நிருபித்துக் காட்டியவர் நமது பொதுச்செயலாளர் செ.மு.

டாக்டர் புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர்..அவர்கள் அரசியலுக்கு அழைத்த போது அவருடன் போகாத ஒரே கொள்கை வீரன் நமது பொதுச்செயலாளர் செ.மு.தான்.

பதவிக்கு என்றுமே அடிபணியாதவர்.இவரது தொண்டு.*துவக்கப் பள்ளி*ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல.உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி,கல்லூரிப் பேராசிரியர்கள் வரை பணி செய்தவர்.அவர்கள் போராடிய போது இவரை அழைக்காவிட்டாலும் உடனே களத்திற்குச் சென்று குரல் கொடுத்து பல சலுகைகளை,கோரிக்கைகளை வாங்கிக்  கொடுத்தவர்.

எழுதியவர்:-மறைந்த திரு.ஆர்.அருள்ராசு
மாவட்டத் தலைவர்.
தூத்துக்குடி மாவட்டம்
தகவல்:- செ.வடிவேலு.

நினைத்துப் பார்க்கிறேன் செ.மு.வின் சேவையை

நினைத்துப் பார்க்கிறேன்.இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். கல்வி வளர்ச்சிக்காகவும், ஆசிரியர்களின் வேலை பாதுகாப்பிற்காகவும், மாஸ்டர் இராமுண்ணி அவர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
இயக்கநிறுவனராக இருந்து செயல்பட்ட காலத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் சேந்தமங்கலத்தில் கண்டெடுத்த விலை மதிக்க முடியாத முத்துதான் செ.மு. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை சந்தித்து ஒன்று சேர்த்து
சங்கம் அமைத்து பல மாநாடுகள்,சைக்கிள் பேரணிகள், பல கொள்கை போராட்டங்களை துணிந்து நடத்திய காலங்களில் அம்மனிதர் அனுபவித்த
தொல்லைகள், அப்பப்பா! எத்தனை துரோகங்கள்,  இதன் மூலம் அவருக்கு எத்தனை அனுபவங்கள் எத்தனை ஆதரவுகள், இடை இடையே எத்தனை எதிர்ப்புகள்  இத்தனைக்கும் பின்னால் அவர் அடைந்த வெற்றியை நினைக்கும் போது எத்தனை களிப்பு.

இந்த இயக்கத்தின் வளர்ச்சியும்,வரலாறும், இயக்கத்தின் தோற்றம், தோற்றுவிக்க வேண்டிய சூழ்நிலை,தொடர்ந்த சூழ்நிலைகள்,அடைந்த வெற்றிகள்.இவை தொடர்கதையாக வளரும். 


மாஸ்டர் இராமுண்ணி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, அவருக்குப் பின் ஆசிரியர் சமுதாயத்தால் பாராட்டப்பட்ட செயல்வீரர் செ.முத்துசாமி அவர்களின் வளர்ச்சியை,புகழை ஜீரணிக்க முடியாத அன்றைய அரசும்,அதிகாரிகளும், பலஹுனமான நம் ஆசிரிய சகோதரர்களை பயன்படுத்தி சங்கத்தை உடைப்பதில் ,மகிழ்ச்சியடைந்ததையும்,சங்கம் பிளவுபட்ட பின்பு செ.முத்துசாமியின் வளர்ச்சி, மேலும் மேலும் உயர்ந்து உயர்ந்து மேலவை உறுப்பினராக(M.L.C.)அமர்ந்து சிம்மக்குரலுடன் ஆசிரியர்களுக்காக,  பல பிரச்சனைகளை எழுப்பி எல்லோரின் அன்பைப் பெற்று, அவரின் அணுகுமுறையை எல்லோரும் பாராட்டி மகிழ்ந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன்.

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களை பொதுச்செயலாளர் என்ற முறையில் மாஸ்டர் இராமுண்ணி அவர்களுடன் சென்று சந்தித்துப் பேசிய பேச்சுக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தது.

தனியார் பள்ளி நிர்வாகிகளைப் பற்றி,ஆசிரியர்களது ஊதியம்,நிர்வாகச் செலவு,பர்னிச்சர் கிராண்ட் எல்லாம் அரசு கொடுக்கும் போது,பள்ளியை சுத்தம்  செய்வதற்கு வருடத்தில் ஒரு தடவை சுண்ணாம்பு அடிப்பதற்கு நிர்வாகி என்ற ஒருவர்,இம்மாதிரி பள்ளிகளுக்கு எதற்கு?
என்று கேட்டார்.தனியார் பள்ளியின் நிலையையும் பள்ளி நிர்வாகத்தில் நிர்வாகிகளுக்குள்ள பொறுப்பைப் பற்றியும் அறிஞர் அண்ணா அவர்கள் ஆழ்ந்த கவனம் செலுத்துவதைக் கண்ட நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமிஅவர்கள் அன்று முதல் இன்று வரை தனியார்  பள்ளி ஆசிரியர்களுக்கு அவர் சேவை செய்து வெற்றி வாகை சூடிய நிகழ்ச்சிகளை மறக்கமுடியுமா? மறுக்கத்தான் முடியுமா!

மேலவை(M.L.C)உறுப்பினராக இருந்த காலம் எல்லாம் ஆசிரிய சமுதாய வளர்ச்சிக்காகவே செயல்பட்டார் என்பதை எல்லோரும்ஒப்புக் கொண்டுள்ளனர்.அன்றைய முதல்வர்களாக இருந்த டாக்டர் கலைஞர்புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்*  ஆகியோரிடம் நயமாக  அவருக்கே உரித்தான வழியில்,ஆண்மையுடன் சந்தித்து வாதாடிய விதம்,அணுகுமுறைகளை பாராட்டாதவர்களே கிடையாது.அவருடைய
பேச்சு ஆற்றலை பாராட்டாத உறுப்பினர்களோ அமைச்சர் பெருமக்களோ,அதிகாரிகளோ இல்லையென்று துணிந்து கூறலாம்.இவருடன் சரஸ்வதி இருப்பதாலோ,என்னவோ இம்மனிதர் எந்தக் காரியத்தையும் பேச்சாற்றிலினால் சாதித்து வருகிறார்.இவரின் ஆற்றல் தமிழகத்தில் மட்டுமல்ல டில்லி வரை  சாதனையாளன் செயல் வீரன் என்ற புகழ் உண்டு.

1981மார்ச்12ம் நாள் டில்லியில் பாரதப் பிரதமரிடம் கோரிக்கை வைத்து வெற்றி கண்ட காட்சி 2500ஆசிரியர்களை சந்திக்க வைத்து பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி,உடன் புகைப்படம்,எடுத்து மாநாடு நடத்திய காட்சி களையும் நினைத்துப் பார்த்து மகிழ்கிறோம்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் சமுதாய வரலாற்றிலும், கல்விவரலாற்றிலும்,சங்கவரலாற்றிலும்முத்திரை பதித்தவர் *நம் பொதுச்செயலாளர் செ.முத்துசாமி* சங்கம் உடைந்து பிடித்தவுடன் வரலாற்று
சிறப்பு மிக்க தென்மண்டலமாநாட்டைநடத்தி மாண்புமிகு அமைச்சர்கள் நாஞ்சிலார்*அவர்களையும், அரங்கநாயகம் அவர்களையும்,மேதகு மேயர் முத்து அவர்களையும் அழைத்து சங்க வரலாற்றின் பெருமையை உயர்த்தி
காட்டியவர் நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி

இயக்க வளர்ச்சிக்கு அன்று தென்மண்டலத்தில் உதவிய *மறைந்த பெரியவர் பெரியகுளம் வெள்ளைச்சாமி*அவர்களையும்,போடி பொன்னையா அவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.திரு.செ.முத்துசாமி அவர்களின் வளர்ச்சியையும்,,புகழையும்,செயல்பாடுகளையும்ஜீரணிக்க முடியாதவர்கள் திசைமாறி சென்றதையும்,சென்றவர்கள் உணர்ந்து தன் இருப்பிடம் நோக்கி வந்ததையும்,இனியும் வந்து கொண்டிருப்பவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். குறைகளைக் கூறிக்கொண்டே குற்றம் பார்த்து தேடித் திரியும் கோமாளித் தலைவர்கள்*கோர்ட்டுக்கு சென்று தோல்வி அடைந்தவர்கள்*.

கணக்குகேட்டவர்களின் காலத்தையும்,நம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முதல் தலைவர் திரு.கு.இரத்தினம் முதல் இன்றையக் தலைவர் திரு.இ.ம.வேலுசாமி வரை சாதித்த வரலாற்றையும்,இடையே வந்த தலைவர்களின் பலம் பலஹீனத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.

நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்களுக்கு நட்புச் செல்வம் மிகுதி,*கலைஞர்கள், அறிஞர்கள்,வணிகர்கள் அரசியல்வாதிகள் என்று*எல்லாத் துறையிலும் இன,மொழி வேறுபாடின்றி அவர்களுக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு.

இவரிடம் ஆணவம் இருந்தது ஆடம்பரம் இல்லை,தாராளம், பண்பு இருந்தது,படாடோபம் இல்லை,பண்பு இருந்தது,பகைமை இல்லை. கூட்டங்களில் திரு.செ.முத்துசாமி அவர்களின் நினைவாற்றல் அபாரமானது.இனிமையாகப்பேசுவார், கருத்தளவில் அழுத்தம் குறையாதுஆசிரியர்களிடையே அவர் குலவிளக்கு,வருங்கால தலைமுறைக்கு உணர்வு ஊற்றாக அவர் வழிகாட்டிக் கொண்டிருப்பார்.அவரின் சேவைகளைப் போற்றும் வகையில்  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஔபொன்விழா மாநாட்டில்,*மாமனிதர் செ.முத்துசாமியின் தொடர் பணிக்கு வெள்ளிவிழா*கொண்டாடுவது நம் சிந்தனைகளை மேலும் குளிரச்செய்கிறது.அவரின் புகழ் சொல்லச் சொல்ல விரிவடைந்து கொண்டே போகும்.அந்தச் சிந்தனையிலேயே நான் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் அங்கத்தினராக இருப்பதில் பெருமைப் படுகிறேன்.

*முத்துசாமி பல்லாண்டு வாழ்க!*
வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்.
 நான் ஓய்வு பெற்றும் அவரது
சேவையை நினைத்து
புதுவாழ்வு பெறுகிறேன்
வாழ்க முத்துசாமி
வளர்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


எழுதியவர்:-திரு.சி.வேதகிருபாகரன்*
முன்னால் மாநிலத்தலைவர்.
தகவல்:-செ.வடிவேலு.
(நேற்றைய தொடர்ச்சி) பொன்விழா மலரிலிருந்து..07-10-1995.