Friday 10 July 2020

செ.மு.வுக்கு முன்னும் செ.மு.வுக்கு பின்னும்

மாதா பிதா குரு தெய்வம் என ஆசிரியரை தெய்வமாகமதித்த பூமி.இப்படி பழைமையும் பெருமையும் பெற்ற நமது சமுதாயம் டைக்காலத்தில் இருந்தநிலை நம்மில்பலருக்கு இன்னும்தெரியாது.ஊராட்சி ஒன்றியத்தில்
பெருந்தலைவர்,ஆணையாளர் அல்லாது அங்குவரும் எடுபிடிகளுக்குமுதுகை வளைந்து கொடுத்த நேரம் அது.எடுப்பார் கைப்பிள்ளையாய்*,ஆண்டான் அடிமையாய் இருந்தநேரம் அது.உள்ளம்குமறினாலும் உதடுகள்சிரித்த நேரம். நமதுஉழைப்பும்,உரிமையும் நமக்கே தெரியாமல் பறிக்கப்பட்ட காலம்.இப்படிப்பட்ட நேரத்தில்தான் வாராது வந்த மாமணிபோல் மாஸ்டர் இராமுண்ணியால் அடையாளம் காட்டப்பட்ட நமது பொதுச்செயலர் செ.மு.தலைமையேற்றார் கூட்டணி என பெயர்   பின்புதான்,ஆசிரியர் இடையே எழுச்சி ஏற்பட்டது.அச்சம் மெல்ல அகன்றது.


வளைந்த முதுகு நிமிர ஆரம்பித்தது 1969ல் சென்னை மாநகரில் நம் வளமை
காட்ட எட்டு திக்கிலிருந்து தலைநகர் நோக்கி நடந்த  மிதிவண்டி பேரணிக்கு பின்தான் நமது கோரிக்கைகள் வெல்ல காரணமாய் இருந்தது
 கொள்கை முழக்கங்கள் அரசின் காதுக்கு எட்டியது.அன்று மாநாட்டில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் இன்று வரை தொடர் கதையாய் மலர்கிறது.
நமது பொதுச்செயலாளர் செ.மு.வின் தலைமையில் நாம் இருப்பதால்தான்
இன்று சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது.இப்படி நமக்காகவேஉழைத்து இந்த உண்மை நாயகனின்மணிவிழாவில் கலந்துகொள்வதில் பெருமை  கொள்கிறோம் வறுமையாய் இருந்த ஆசிரியரை வருமான   வரி கட்டுமளவுக்கு உயர்த்திய தானைத்தலைவன் செ.மு.

நம்மிடையே வாழும்
வள்ளுவன்
மணிவிழா நாயகன்
நூற்றாண்டு விழா
காணும் வரை நாமும்
வந்து வாழ்த்துவோம்
கோரிக்கைகளை வெல்ல
கோடிக்கைகளை இணைத்த
கோமகன் செ.மு.வை
வாழ்த்தி பாடுவோம்*
செ.மு.தலைமையில்
நாமும் உழைப்போம்
நல்ல கல்வியைத் தருவோம்
வளரும் மழலைகளை
அறிவியல் மேதையாய்
வளர்ப்போம்
அப்துல் கலாம்களை
உருவாக்குவோம்
தாய்மொழியில் கற்போம்
தமிழ்மொழியில் கற்பிப்போம்
நாளும் கடைமையை
செய்வோம்.நாமும்
உரிமையை பெறுவோம்
வாழ்க பாரதம்!வளர்க
தமிழகம் வெல்க நமது
பேரிக்கம்
எழுதியவர்:-
கு.அமிர்தலிங்கம்
சேந்தமங்கலம்
தகவல்:-
செ.வடிவேலு
(15வது மாநில மாநாட்டு
மலரிலிருந்து 13-08-2000)

No comments:

Post a Comment