Friday 10 July 2020

கர்ம வீரன் செ.மு._வீ.ஜெயச்சந்திரன் மேனாள் A.E.E.O.

கொங்கு நாட்டிலே சிறப்பு மிக்க மாமலை
கொல்லிமலை .கொல்லிமலைக்கீழ் உள்ள
சேந்தமங்கலம் அருகே
மரூர்பட்டியில் ஏழை விவசாய குடும்பத்தில்
தோன்றி,விரிந்து பரந்து
விட்ட தமிழகத்தில்
ஆசிரியர் இனம்
தலைநிமிர்ந்து நிற்க
ஏன் பாரத நாட்டிற்கே-
ஆசிரியர் சமுதாயம்
சுயமரியாதை பெற,
நிலை தாழ்ந்து
பின்னோக்கி தள்ளப்பட்ட
ஆசிரியர் இனத்தின்
மதிப்பும் கௌரவமும்
மீண்டும் சீர் செய்ய
வள்ளார்  என மாஸ்டர் இராமுண்ணியால்
முன்னிலை படுத்தப்
பட்டவர் செ.மு.
ஆசிரியர் இனத்தின்
விடிவெள்ளி யாக
திகழ்பவர் செ.மு
ஆசிரியர் சமுதாயம்
மக்களுக்கு சேவை
செய்கிறது என்றால்
ஆசிரியர் சமுதாயத்திற்கே
என் சேவை என
வாழ்பவர் செ.மு
சீரிய தொண்டால்
கடின உழைப்பால்
இயக்கத்தின் மாநிலப்
பொதுச்செயலராக
உயர்ந்தவர்
பாரத நாட்டு வரலாற்றில்
தொடக்கப்பள்ளி
ஆசிரியர் சட்ட மன்ற
மேலவையில் அங்கம்
பெற்று ஆசிரிய இனத்துக்கே
பெரும் புகழ் சேர்ந்தவர்
செ.முத்துசாமி
செல்வயோக வாழ்வும்
பட்டமும் பதவிகளும்
அரசியல் வாழ்வும்
வந்தன அத்தனையும்
ஒதுக்கி தள்ளிவிட்டு
தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணிக்குத் தன்னை
முழுமையாக அர்பணித்து
இராப்பகல் அயராது
பணியாற்றும் செம்மல்
செ.மு
மேலவையில் ஆசிரியர்
பிரச்சனை குறித்து
இவர் எழுப்பிய குரல்
உரிமைக்குரல்-
உரிமை முழக்கம்
நாட்டில் ஆசியர்கட்கு
தனி அந்தஸ்தை பெற்றுத்
தந்தது என்பதை
நாடறியும்
ஆசிரிய இனத்துக்கே
காவலனாய்த்
திகழ்பவர் செ.மு
ஆசிரியர்கட்கு ஓர் பிரச்சனை என்றால்
முன்னின்று
சிங்கமென முழக்கமிடுவதில்
இவருக்கு நிகர் இவரே.இவரது ஒரே
நோக்கு
ஆசிரியர் நலன் ஒன்றே
ஆசிரியர் நலன் காக்க
இவர் செய்த சாதனைகள்
பெற்றுத் தந்த பலன்கள்
எண்ணிலடங்கா
ஏட்டிலும் அடங்கா!
வலுவிழந்த ஆசிரிய
இனத்தை வீறு கொண்டு
எழச்செய்தவர் செ.மு
ஆசிரியர் நலன் கூவிடும்
உரிமைக்(குரல்)
குயில் செ.மு
"போற்றுவார் போற்றப்படும்
புழுதிவாரித் தூற்றுவார்
தூற்றட்டும்
என்பணி ஆசிரியர்கட்கு
தொண்டு செய்வதே
ஆசிரியர்களே என்
வாழ்வு என்று கடமை
புரியும் கர்மவீரர்
வாழிய பல்லாண்டு
பல்லாண்டு
எழுதியவர்:-
வீ.ஜெயச்சந்திரன்
மேனாள் A.E.E.O.
எடப்பாடி வட்டாரம்
(15வது மாநிலமாநாடு
சிறப்பு மலரிலிருந்து
நாள் 13-08-2000)
தகவல்:-
செ.வடிவேலு

No comments:

Post a Comment