Friday 10 July 2020

ஆசிரியர் நலம் காக்கும் போர் வாள் செ.மு எ ழுதியவர்:- டாக்டர் கி.வேங்கடசுப்ரமணியன் மேனாள் பள்ளிக் கல்வி இயக்குநர்

தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி பொன்விழாவும்
,என் கெழுதகை நண்பர்
இந்த மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர்
திரு.செ.முத்துசாமி
அவர்களின்
அயராத ஆசிரியர்
இயக்கப் பெரும் பணியின்
வெள்ளிவிழாவும்
ஒருங்கே நடைபெறுவது
மிகவும் பொருத்தமாகும்
ஆசிரியர் இயக்க வரலாற்றில்
மாஸ்டர் இராமுண்ணி
அவர்களின்
அடிச்சுவட்டில் நெறியாளராக
நின்று இன்று வரை
அறப்பணி புரியும் செ.மு அவர்களின்
அயராப்பணி பற்றி
நான் நன்கு அறிவேன்
ஆசிரியர் இயக்கத்தின்
முதுகெலும்பாக
கூட்டணியை இவர்
வளர்த்தபாங்கு கண்டு
நான் வியந்ததுண்டு
அரசுடன் வாதாடி,
வேண்டுமென்றால்
போராடி,தமிழக ஆசிரியன்
நலம் காத்த வித்தகர்
செ.முத்துசாமி.
மாசகற்றும் பெரும்
பணியில் ஈடுபட்டுவரும்
ஆசிரியர்களின் இன்னல்கள் பலப்பல
நான் கல்வி இயக்குநராக இருந்த
போது
பேரறிஞர் அண்ணா
அவர்களின் கருத்து
ஒன்றை அடிக்கடி கூறுவதுண்டு
" ஆசிரியர் இன்று ஏங்கினால் நாடு ஏங்கும்
ஆசிரியர் இன்று தூங்கினால் நாளை நாடு
தூங்கும்
ஆசிரியர் இன்று தேங்கினால் நாளை
நாடு தேங்கும் என்றார் அறிஞர் பெருந்தகை.கல்வியின்,
இதயம்,இயக்குநர் பெருந்தகை அல்ல,
கல்வியின் மூளை கல்வி இலாகாவல்ல,
கல்வியின் கண்கள்
அதிகாரிகள் அல்ல,
கல்விக்கே இதயமாய்,
மூளையாய்,கண்களால் விளங்குபவர்
ஆசிரியப் பெருமக்கள்.இவர்கள்
வாழ்க்கை சீருடனும்
சிறப்புடனும் இயங்காவிடில் நாடு
முன்னேறமுடியாது.
கோத்தாரிக் குழுவின்
அறிக்கையின் முதல்
வரியைப் பார்ப்போம்
இந்தியாவின் எதிர்காலம் அதன்
வகுப்பறையில் சமைக்கப்படுகிறது
இதுதான் உண்மை.
இதை மெய்ப்பிக்க
அருமை சகோதரர்
செ.முத்துசாமி ஆற்றிய
பணிகள் ஏராளம் ஏராளம்.
ஆசிரியர் இயக்கத்திற்கு ஒரு
மதிப்பும் முகவரியும்
கொடுத்த
மாஸ்டர் இராமுண்ணியின்
இளவல் அன்பர்
திரு.செ.மு
அவர்கள் பணி அயராதப் பணி
அறிவுப் பணி
செ.மு.ஆசிரியர் நலம்
காக்கும் போர்வாள்
சுருக்கக் கூறின்
திரு.செ.முத்துசாமி
பணி மறக்கமுடியாத
ஒன்று.அவர் வாழ்க
வளர்க என வாழ்த்தி
ஆசிரியர் தம் அறப்பயணம்
தமிழகத்தில் தொடர்க எனக் கூறி
வாழ்த்துரையை முடிக்கிறேன்
எழுதியவர்:-
டாக்டர் கி.வேங்கடசுப்ரமணியன்
மேனாள் பள்ளிக் கல்வி
இயக்குநர்
மேனாள் துணைவேந்தர்
பாண்டிச்சேரி மத்திய
பல்கலைக் கழகம்.(பொன்விழா மலரிலிருந்து 07-10-1995)
தகவல்,:-
செ.வடிவேலு.

No comments:

Post a Comment