Wednesday 24 June 2020

தூயதொண்டர் செ.மு வழிநடப்போம் எழுதியவர்:- ப.ஆல்பர்ட் இலால்குடி*

ஆற்றல் மிக்க ஆசிரியர்  பேரினம் அடிமைப்பட்டு ஒடுங்கி போனகாலத்தே ஆர்த்தெழுந்து ஒன்று படுவோம்,போராடுவோம் என போர்ப்படை அமைத்தார் ஆசிரியர் அமைப்பை உருவாக்கிய *மாஸ்டர் இராமுண்ணி*அவரால் கண்டெடுக்கப்பட்ட நல் முத்தே நமது செயல் வீரர் செ.முத்துசாமி.

"பொதுநலத் தொண்டர் நன்றியை எதிர்பார்க்கக் கூடாது. நன்றி செலுத்துவது பயன் பெறுபவர் கடமை" "பொதுவாழ்வில் ஈடுபடுபவர் மானம் அவமானம் பார்க்கக்கூடாது"என்பது தந்தை பெரியார். பொன்மொழி. 

பொதுவாழ்வில் ஈடுபட்டு அன்றும்,இன்றும் நன்றியை எதிர்பாராது எதிர்பார்ப்போடு இயக்கத்திற்கு வந்தோரின்  ஏச்சிகற்கும் பேச்சிற்கும் செவிசாய்க்காது எத்தனை பேர் சுய நலத்திற்காக தனி இயக்கம் கண்டாலும், கருமமே கண்ணாக,
கறைபடாத கையாக
எளிமையே உருவாக
,கனிவான வாதத்தால் களம்பல கண்டு,
சிறை பல ஏகி
கல்வித்துறையினரால்கவரப்பட்ட,
கண்ணியமிக்கபார்லிமென்டேரியனாக
சாதனைகளை
முத்திரையாகப் பதித்து
ஆட்சியாளர் பலராலும்
ஆசிரியர் தொண்டர் முத்துசாமி என பாராட்டப் பெற்று 
எல்லா ஆசிரியர் இயக்க தலைவர்களுக்கும்  தலைமையாக 
ஏற்றமிகு வீறுநடை கொண்டு இன்று வரை 27 ஆண்டுகாலம் 
இயக்க பொதுச்செயலாளராகப்
பணியாற்றும் எம் தலைவர் செ.முவை
பின் பற்றியதால் வரலாற்றில் முத்திரைகள் பதிக்கப்பட்டன.


1972-ல் சிறைப் போராட்டத்தில் சிறை சென்ற இலால்குடி வட்டாரத் தலைவர் இராமையா அவர்கள் சிறைக் கொடுமையால் உடல்நிலை பாதித்து சில மாதத்தில் காலமானார். வட்டாரத்தின் சார்பில் நிதியளிப்பு நிகழ்ச்சி மாநிலப் பொறுப்பாளர் களை அழைத்து அன்றைய அமைச்சர் மாண்புமிகு*அன்பில் தர்மலிங்கத்தின் மூலம் அந்த சமயத்தில் இறந்தஎட்டு ஆசிரியர்கள் குடும்பத்திற்கும் நிதி வழங்கினோம்.அந்த நிகழ்ச்சியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு  அரசாங்கத்தின் மூலம் நிதி அளிக்க வேண்டுமென*பொதுச் செயலாளர்*முத்துசாமி வேண்டுகோள். விடுத்தார் அதை ஏற்று மாண்புமிகு அமைச்சர் அன்பில் தர்மலிங்கம்.முயற்சியால் தான் அன்று இறந்தவர்கள் அனைவருக்கும் ரூ60000/- வீதம் கிடைத்தது."*ஆளும் கட்சிக்கு அடிபணிய மாட்டோம்*,எதிர்கட்சிக்கு எடுபிடி ஆகமாட்டோம்"என்ற தாரகமந்திரத்தை கடைபிடித்து இயக்கத்தை கட்டி காத்து வருகிறார் பொதுச்செயலாளர் செ.முத்துசாமி

திருவரங்கத்தில் நடந்த பொதுக்குழுவில் மதிய உணவுப் போராட்டத்தை முன் எடுத்த நமது பொதுச் செயலாளருக்கு  லால்குடி வட்டாரம் முன் குரல் கொடுத்து வரவேற்று,அன்று போராட்டத்தை வேண்டாம் என்ற இன்றைய வேறு இயக்கத் தலைவருக்கு பதிலடி கொடுத்தது. நமது பொதுச்செயலாளருக்கு கிடைத்த பொறுப்பை மிகச்சரியாக காலமறிந்து,இடமறிந்து கடுமையாக பணியாற்றியதால் பொதுச்செயலாளர் பதவி தேடிவந்தது,அவரால் பதவிக்கு மதிப்பும் மரியாதையும் கி டைத்தது.செ.மு வழிநடப்போம்*
*வாழ்க செயல் வீரர் செ.முத்துசாமி*
எழுதியவர்:-
ப.ஆல்பர்ட் இலால்குடி*
தகவல்:-
செ.வடிவேலு.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.

No comments:

Post a Comment