Wednesday 24 June 2020

தென்மண்டல மாநாடுசெ.மு.வுக்கு* ஒரு திருப்பு முனை._ஏ.சாமுவேல் வேதமாணிக்கம்.

மதுரையில் தென் மண்டல மாநாடு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருப்பு
முனை மாநாடு *மதுரை மேயர் முத்து*வரவேற்பு குழுத் தலைவராக பொறுப்பு ஏற்று செயல்பட்ட மாநாடு.அன்றைய மாநாட்டுச் செயலாளர் திரு.என்.இராமன். பெரியவர் வெள்ளைச்சாமி அவர்கள் மாநாட்டுப் பொருளர்.நான் மாநாட்டுச் செயலாளரின் நேர்முக உதவியாளராக செயல் பட்ட மாநாடு.

செ.முத்துசாமி தென் பகுதிக்கு வந்து *திரும்ப முடியுமா?,முதுகுத் தோலை உரித்து விடுவேன் என சூளுரைத்தவர் இருக்கும் இடத்தில் நடைபெற்ற மாநாடு.

கிராமப்புற ஆசிரியர் களுக்கு *கிராம ஈட்டுப் படிவேண்டும் என கோரிக்கை வைத்த மாநாடு மட்டுமல்ல,ஈட்டுப்  படி ரூ 10/-*என பெற்றுத்தந்த மாநாடு. அதன் பெருமைக்குரியவர் சமீபத்தில் காலமான வருவாய்த் துறை அமைச்சர் மாண்புமிகு நா கி.மனோகரன்.அவர்கள்.மாநாட்டில் அவர் நிதி அமைச்சர் என்ற
முறையில் கலந்து கொண்டு பேருரையாற்றினார்.  நமது பொதுச்செயலாளர் செயல்வீரர் செ.மு. அவர்களின் செயல்திறனையும், அணுகுமுறையையும் மாண்புமிகு நாஞ்சிலார் அவர்கள் வெகுவாக  பாராட்டிப் பேசினார்.
கிராம ஈட்டுப்படியின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சர் தொகையை முறைப்படி அறிவிப்பதாகக் கூறினார்.அதன் பலனை இன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புற ஆசிரியர்களும் அனுபவித்து வருகிறோம்.இதற்கு காரண கருவியாக பயன்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியையும்,மதுரையில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டையும், நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி. அவர் களையும் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். 

*இது ஓர் வரலாறு*. செ.முத்துசாமி.தென் பகுதிக்கு வந்து திரும்ப முடியுமா?என்றவரைத்தான் அன்று காணவில்லை. அரசடி இரயில்வே மைதானத்திலிருந்து அன்றைய மாவட்டத்தலைவர் திரு. மு.சேவகபாண்டியன்.தலைமையில் புறப்பட்டஆசிரியர் பேரணிகல்பாலம் வழியாக மாநாடு நடைபெற்ற தமுக்கம் அரங்கம் நோக்கி சென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சி. மாநாட்டுப் பொருளாளரும்,மாவட்டச் செயலாளருமான  பெரியவர் வெள்ளைச்சாமியும். நானும் ஆல்பர்ட் விக்டர் பாலம் என்ற பெரிய பாலத்திலிருந்து ஊர்வலத்தைபார்த்தோம்.

மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் போது கல்பாலம் இருக்கும் வைகை ஆற்றில் கள்ளழகர். இறங்கும் போது பெரும் திரளான மக்கள் கூட்டம் கூடும்.அதற்கு ஒப்பான கூட்டம் போல் ஊர்வலம்சென்றதை இன்னும் மறக்க முடியவில்லை.

ஏனெனில் பொது வாழ்க்கையில் மிக இக் கட்டான நேரத்தில் நடை பெற்ற மாநாடு.இயக்க வரலாற்றில்*பெருமை சேர்த்த மாநாடு*  மாநாட்டில் பேருரை
ஆற்றிய நமது பொதுசெயலாளர் செ.மு.வின் உரையை கேட்டுக் கொண்டிருந்த ஓர் கல்லூரி ஆசிரியர் கூறினார் உங்களுக்கு எப்படியோ! எங்களுக்கு செ.மு. Fighting.M.L.C.  என்று கூறினார்.
அன்பார்ந்த ஆசிரிய சகோதர,சகோதரியர்களே,அன்பர்களே,நண்பர் களே! *தென்மண்டல மாநாட்டின்*நிகழ்ச்சிகளை நினைவு கூறவும் முக்கிய நிகழ்வுகளை இம்மலரில்எழுதவும், வாய்ப்பளித்த மலர் குழுவினருக்கு அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!வணக்கம்!!
எழுதியவர்:-
ஏ.சாமுவேல் வேதமாணிக்கம்.
மாவட்டத்தலைவர்
மதுரை மாவட்டம்.
தகவல்:-
செ.வடிவேலு.
(15-வது மாநில  மாநாடு
சிறப்பு மலரிலிருந்து.) 

No comments:

Post a Comment