Monday 8 June 2020

செ.மு.வின் தொண்டு நிழலாடும் நிஜங்கள்*_திரு.ஆர்.அருள்ராசு* தூத்துக்குடி மாவட்ட தலைவர்.

எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் நான் 1966-ஆம் ஆண்டு சேலம்  வட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்தில் பெரிய வடகம் பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதன் முதலில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்

. அதன் பின்பு மறு வருடத்தில் காடையாம்பட்டி ஒன்றிய சேர்மன் வெங்கடாசலம் என்பவர் இதே ஒன்றியம் பண்ணப்பட்டி என்ற ஊரில் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி என்பவரை பள்ளி நடைமுறையில் ருக்கும் போதே செருப்பால் அடித்து விட்டார்.இதில் ஆணையாளர் அவர்கள்
சரியான நடவடிக்கை எடுக்கவில்லை மருத்துவ அலுவலரும் ஆசிரியர்க்கு எதிராக சான்றிதழ் வழங்கினார்.
எனவே ஒரு கண்டன பேரணிசுமார் பத்தாயிரத்துக்கும்*. அதிகமான ஆசிரியர்களை திரட்டிக் காடையாம்பட்டிக்கும், பண்ணப்பட்டிக்கும் 10 கிலோ மீட்டர் தூரம் பெங்களூர்-சேலம் சாலையில் நடந்தே சென்று நடுப்பட்டி  ஆணையாளரின் வீட்டு முன்பு *ஆணையாளரே! ஆணையாளரே!*அடங்கி கிடப்பது ஏன்! ஆணையாளர் தங்கப்பனே அடங்கி கிடப்பது ஏன்? கோஷம் போட்ட பின்பு தீவட்டிபட்டி வழியாக பூசாரிப்பட்டி வந்து சேர்மன் வெங்கடாசலம் வீட்டுக்கு முன்பு கைது செய் ,கைது செய்,குடிகாரன் வெங்கடாசலத்தை  கைது செய் என்று விண்ணதிர கோஷமிட்டு இறுதியாக
பள்ளப்பட்டி சென்று கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.இதைச் செய்தவர் நமது பொதுச் செயலாளர் திரு.செ.முத்துசாமி ஆவார்கள்.
அன்று அவர் ஒன்றுபட்ட ஆசிரியர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலர் ஆவார்.என்னை அவருடைய பேச்சாற்றலும்,இளமை  துடிப்பும்,அவரது போராட்டக் குணமும் என்னை வெகுவாக பற்றிக் கொண்டது.பெத்தநாயக்கன்பாளையம் வட்டார  A.E.O திரு.கந்தசாமி என்பவர்
அன்றைய கல்வி அமைச்சர் அரங்கநாயகம்.என்பவர் ஆணையால் அன்றைய கல்வி இணை இயக்குநர்  ஆனந்தராஜ்.என்பவரது பேச்சை கேட்டுக்கொண்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களையும் 
மதிக்காமல் அலட்சியமாக நடந்து வந்தார்.இதை பொதுச்செயலாளர் செ.முத்துசாமி கவனத்திற்கு‌ கொண்டு சென்றோம்.
உடனடியாக அந்த A.E.O.வை அவர் எந்த மேல்நிலைப் பள்ளியிலிருந்து வந்தாரோ அதே பள்ளிக்கு மீண்டும் உதவி ஆசிரியராக அனுபப்பட்டார். அன்றைய இயக்குநர் கி.வெங்கடசுப்ரமணியம்.A.E.O.வுக்கு எவ்வளவு சொல்லியும் பொதுச்செயலாளர் அதை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பியதுவரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல ஒரு பெரிய சகாப்தமும் கூட.

சேந்தமங்கலம் வட்டார  A.E.O.சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்களுக்கு முறையற்ற இடமாற்றம், வேண்டுமென்றே* G.P.F நிதியிலிருந்து தாமதமாகக் கடன் வழங்குதல் போன்ற காரணங்களுக்காக. A.E.O.வேலையை நீக்கம் செய்து மீண்டும் அவரை பழையபடி உயர்நிலைப் பள்ளிக்கே அனுப்பியதும் மறக்கமுடியாத நிகழ்ச்சி
யாகும்
  .சத்துணவு போராட்டம் சாதாரணமானது அல்ல அதையும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கி 67 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த பெருமையும் நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமிக்கே பொருந்தும்
.
சட்டோபாத்தியாயா  கமிஷன் முன்பு பல முறை சாட்சியங்கள் அளித்து *தேசிய ஊதிய கமிஷன்*அமைத்து தந்தவர்.மத்திய அரசுக்கு இணையான சம்பளம் பெற  முழுக்க  முழுக்க காரணமானவர் நமது பொதுச்செயலாளர் 'செ.மு..ஆவார்.  நமது பொதுச்செயலாளரின் திறமையைக் கண்டு மத்திய அரசு ரஷ்யாவில் நடைபெற்ற அணுஆயுத குறைப்பு மாநாட்டிற்கு அனுப்பியது.அங்கு தனது கருத்தையும் திறம்படக் கூறி உலகளவில் தன்னை
ஒரு திறமைசாலி என்று நிருபித்துக் காட்டியவர் நமது பொதுச்செயலாளர் செ.மு.

டாக்டர் புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர்..அவர்கள் அரசியலுக்கு அழைத்த போது அவருடன் போகாத ஒரே கொள்கை வீரன் நமது பொதுச்செயலாளர் செ.மு.தான்.

பதவிக்கு என்றுமே அடிபணியாதவர்.இவரது தொண்டு.*துவக்கப் பள்ளி*ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல.உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி,கல்லூரிப் பேராசிரியர்கள் வரை பணி செய்தவர்.அவர்கள் போராடிய போது இவரை அழைக்காவிட்டாலும் உடனே களத்திற்குச் சென்று குரல் கொடுத்து பல சலுகைகளை,கோரிக்கைகளை வாங்கிக்  கொடுத்தவர்.

எழுதியவர்:-மறைந்த திரு.ஆர்.அருள்ராசு
மாவட்டத் தலைவர்.
தூத்துக்குடி மாவட்டம்
தகவல்:- செ.வடிவேலு.

No comments:

Post a Comment