Wednesday 24 June 2020

செ.மு வின் பாதையில் ஆசிரியர் கூட்டணியும் நானும் இ.ம.வேலுசாமி

எழுபதில்  மதுரையில் நடைபெற்ற இயக்க நிறுவன ர் ராமுண்ணியின் மணிவிழா மாநாட்டுக்கு சிங்காநல்லூர் நகர செயலாளர்., ஆசிரியர் பேரணிக்கு  அணிதிரட்டியவன்    .. 71ல் மாவட்ட பொருளாளர், 72ல் திருப்பூரில் கோவை மாவட்ட மாநாடு பொதுச் செயலாளர் பதவி ஏற்று மாநாட்டு வெற்றிக்கு உழைத்தார். 
 அன்றைய அமைச்சர் அண்ணன் சாதிக் பங்கேற்றார் .
72 ஆம் ஆண்டு எழுச்சிமிக்க சிறைப் போராட்டம் கோவை மாவட்ட போராட்டக்குழு ஐவரில் ஒருவராக பணியாற்றினேன் ,  73ல் கோவை வெள்ளி விழா மாநாடு மாநாட்டு மலர் பணியில் அடியேனுக்கு பொதுச்செயலாளர் பாராட்டு
 78 முதல் 84 வரை தலைமை நிலைய செயலாளர்.
 84 ல்துணை பொதுச்செயலாளர்.
 87 ல் மற்றும் 93 ல் நடைபெற்ற மாநில தேர்தலில் மாநில பொருளாளராக* பொறுப்பேற்று ,இதை அடுத்து வந்த பொறுப்பு மாநில தலைவர்

 இயக்கத்தில் பொன்விழா மாநாட்டுத் தலைவர். என படிப்படியாக பொறுப்புகள். துளித்துளியாக விழுந்த மழை நீர் சேர்த்து தூர் எடுத்து குளத்தில் நிரம்பியது போல், உழைப்பு_ உழைப்பு_ உழைப்பு எனும் ஓய்வற்ற பணிகளி ன்  தொடர் நிகழ்ச்சியாகவே பணியாற்றினேன்

 சென்னையில் அலுவலகம் இல்லாமல் சில காலம், சில நேரம் ,சட்டமன்ற பழைய விடுதி ,திண்ணையிலும் படுத்து, எழுந்து ரயில் இருந்தும், கட்டணத்திற்கான நிதி வசதி இல்லாமல் லாரிகளில் பயணம் செய்தும் அவ்வளவு ஏன், செயற்குழு உறுப்பினர்களின் பயணப்படி மட்டுமே இயக்க நிதியாக வைத்துக்கொண்டு அறுபது, எழுபதுகளில் சங்கம் கட்டி வளர்த்து, போராட்டம் நடத்தி சலுகைகளை பெற்றுத் தந்தது ,என்பது சாதாரணம்அல்ல 
.
 மாநில அலுவலகம் இல்லாத இடைப்பட்ட இரண்டு ஆண்டு காலம் இயக்க வழக்குக்காக, சென்னை வந்து செல்லவே எனது மருத்துவ விடுப்பு அவ்வளவு  தீர்ந்த்து. இந்த இயக்கத்திற்காக ஒரு நாள் விடுப்பு எடுக்க தயங்குகின்ற காலகட்டத்தை எண்ணி வியப்பும் வேதனையும் அல்லவா தோன்றுகிறது. இயக்க வழக்குக்காக சென்னை வந்து தங்க இடமின்றி, சட்டமன்ற பழைய விடுதி மொட்டை மாடியில் ,படுத்து உறங்கி பறவைகள் ஒலி கேட்டு எழுந்து, யாருடைய அறையில் சென்றாவது குளிக்க முடியாதா ,என்ற ஏக்கத்தோடு அலைந்து, முகம் கைகால் கழுவி, வழக்கறிஞர் வீட்டுக்கும், நீதிமன்றத்துக்கும் அலைந்து, அலைந்து இரவு பயணங்கள் மேற்கொண்டதெல்லாம்  அதாவது  வசதியின்மை, பயணம் அலைச்சல் ,பயண செலவு ,விடுப்பு இழப்பு இவை ,எதுவுமே கணக்கில் கொள்ளாமல் நான் உழைத்ததற்கு அடிப்படையே  நமது பொதுச் செயலாளர் செ.மு அவர்களிடம்  பெற்ற பயிற்சிதான்இதே  வள்ளுவர் கோட்டத்தில் தான் இயக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என ஐயன் கலைஞர் அறிவித்த பெருமை உண்டு. அன்றைய வாக்குறுதியை நிறைவேற்றி அங்கீகாரம் அளித்த போது  அடியேனே மாநில தலைவர். 1989 இல் இதே வள்ளுவர் கோட்டத்தில் மாநாடு. அதில் நான் தான் வரவேற்பாளர். மாநில பொருளாளராக அளித்த ஊதியத்தை ஒரு அறுவடை என்றும், அகவிலைப்படி ஒரு  அறுவடை என்றும் குறிப்பிட்டுக் கூறி வரவேற்றபோது,, கலைஞர் அவர்கள் தம்பி  வேலுச்சாமி அறுவடை ,அறுவடை என்று குறிப்பிட்டு கூறினார். அறுவடைக்கு பின் களத்துக்கு வரவேண்டும் தூற்றலும் உண்டு என இரு பொருள்பட கலைஞர் அவர்கள் கூறியது. இன்றும் கூட காதுகளில் இனிக்க இனிக்க எதிரொலிக்கிறது.

 1967இல் நமது செ.மு சேலம் மாவட்ட செயலாளராக இருந்தார். நேர்முக உதவியாளராகவோ,  பொதுச்செயலாளராகவோ பதவிக்கு வராத  நேரம், சேலம் மாவட்ட மாநாட்டை முடித்துவிட்டு, ஆங்கில பயிற்சி பெற கோவைக்கு வந்து இருந்தார் .பயிற்சி வகுப்பு முடிந்ததோ இல்லையோ பள்ளி,பள்ளியாக  சென்று ஆசிரியர்களிடமும் ஆசிரியர் சங்க கூட்டங்களிலும் , ஆசிரியர் கூட்டணி பற்றியும் எல்லா ஆசிரியர்களிடமும் ஒரே ஆசிரியர் இயக்கத்தில் இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் , பேசி ,சேலம் மாநாட்டு மலரை அவர்களிடம் வழங்கிவிட்டு தான் வருவார். ஆசிரியர்கள் மத்தியில் ஐக்கிய சங்கம் போன்ற பிரிவுகள் அன்று கோவையில் இருந்ததை அவரது ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் முடிக்கின்ற காலத்துக்குள் மாற்றி ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவந்தார்.

இவரோ, சேலம் மாவட்ட செயலாளர்.  பயிற்சிக்கு வந்து இருப்பது  கோவை மாவட்டம்.   வெளி மாவட்டத்துக்கு செயலாளர் ஆயிற்றே  கோவை மாவட்டத்தில் வந்து ஆசிரியர்களிடம்  கூட்டம் போட்டு பேச வேண்டுமோ என்றெல்லாம் கருதாமல் பல்வேறு பெயர்களில் பிளவு பட்டிருந்த ஆசிரியர்களை ஒன்றாக்கும் முயற்சியே தேவை என்று சங்க வளர்ச்சி பற்றி மட்டுமே சிந்தித்து செயல் பட்டவர்செ.மு  என்றால் இது பிறவிலேயே தலைமை ஏற்கும் பக்குவத்தை பெற்று உருவான தலைமை என்று தானே பொருள்

 1977 செப்டம்பர் 5 இல் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்ற பெயரில் சென்னையில் சங்கத்தைப் பதிவு செய்ய சங்கம் இட்ட கட்டளையை ஏற்று தனிமனிதனாக சென்னை சென்று முதல் மாநில தலைவர் என்ற பொறுப்பில் சங்கத்தைப் பதிவு செய்து பதிவு எண் 197 /77 பெ ற்றேன்.    1977 செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினத்தன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்ற பெயரை பதிவு செய்த போதே மாநில தலைவராக பொறுப்பேற்று பதிவு செய்த இளையவன் நான். பதிவுகளின்படி 1977இல் மாநில தலைவர் ஆனாலும் சட்டப்படி 1994இல் மாநில தலைவராய் போற்றுதற்குரிய பொதுக்குழு வால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்

இ. ம. வேலுச்சாமி முன்னாள் மாநிலத் தலைவர்
 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
தகவல்
சு.ம.பாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment