Thursday 18 June 2020

வரலாற்று நாயகன் செ.மு_வி.வரதராசன்எம்ஏ எம்எட்* .மேனாள் திருப்பூர் மாவட்டச் செயலர்

இதனை இதனால் இவன் முடிக்குமென்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்பது வள்ளுவர் வாக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஆரம்ப ஆசிரியருக்கு என உரிமைக்குரல் கொடுக்கத் தனி இயக்கம் கண்டவர் இராமுண்ணி.பெரியவர்.தொடக்ககப் பள்ளி ஆசிரியர்களின் உரிமையை நிலை நாட்ட வீறு கொண்டு எழுந்து இயக்கம் கண்ட அப்பெரியவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தை வழிநடத்தி சென்றார்.

கொல்லிமலை.பகுதியில் இயக்கத்தை வளர்த்து சேலம் மாவட்டத்தில் இயக்கத்தை நிலைநிறுத்தி *சேலம் மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்று,மாவட்ட மாநாட்டை மாநில மாநாடு போல நடத்திக் காட்டியசெம்மல் செ.முஅவர்களை தமிழ்நாட்டு ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பக்கத்தில் வைத்துப்பயிற்சி கொடுத்தார் இயக்கத் தந்தை.செ.முத்துசாமிஅவர்களின் வெற்றிப்பயணம் தொடங்கிய நாள்*1968டிசம்பர்29 ஆம் ! இவர் பொதுச் செயலாளராகப்பொறுப்பேற்ற நாள் தான் அது.இதன் பின் பட்டிதொட்டியெல்லாம் இயக்கத்தைக் காலூன்றச் செய்தார்.

நன்னீர் பாயும் நன்செய் நிலத்தில் வேளாண்மைப் பணி செய்வது எளிதானது.
ஆனால் கல்லும் முள்ளும் நிறைந்த நிலத்தில் நீர்வளம் குறைந்த மண்ணில் விளைச்சல் காண பெருமுயற்சியும் கடும் உழைப்பும் தேவை என்பதை நாம் அறிவோம். செ.முத்துசாமி. பொதுச்செயலாளராகப்பொறுப்பேற்ற சமயம் ஆசிரியர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. பொருளாதார ரீதியில் ஆசிரியர்கள் பட்ட அல்லல் பெரிதாக இருந்தது.அதைவிட அவர்கள் தன்மானமும்கௌரவமும்*.பாதிக்கும் வகையிலும் அவர்கள் மேற்கொண்டிருக்கும் அறப்பணியாம் ஆசிரியப் பணியை கவனிப்பதை விட கல்வியில்லாப்.பிற பணிகளை அவர்கள் செய்ய வேண்டும் என நிர்ப்பந்தங்கள்,காலையில் ஒரு பள்ளிமாலையில் இன்னொரு பள்ளி என்று சொல்லத்தக்க அளவில் மாறுதல் அச்சுறுத்தல்கள்,திடீர்  சஸ்பென்ஷன் உத்திரவு-அதிரடி *பணி நீக்க*ஆணைகள் என சர்வதிகாரம்.தலைவிரித்து ஆடிய நேரம் அது.ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களின் ஒட்டு மொத்த குரலாக,அநீதியை எதிர்க்கும் அழுத்தமான குரலாக,நீதியின் குரலாக,சமுதாயத் தன்மானம் காக்கும் தரம் மிக்க குரலாக ஆசிரியர்களைத் தட்டி எழுப்பும் உணர்ச்சிக் குரலாகசெ.முத்துசாமி அவர்களின் குரல் ஒலித்ததை நாம் கண்டோம் தக்கவர் இவர் என்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் இவரைத் தேர்ந்தெடுத்து அமர வைத்த தமிழ்நாடு சட்ட மேலவையிலும் இவரது குரல் மொத்த ஆசிரியர் சமுதாயத்துக் காதில் ஒலித்தது.
                   அடேயப்பா! எத்தனை எத்தனை பிரச்சனைகளை எடுத்தியம்பி,எப்படிப்பட்ட வாதங்களை முன் வைத்து ஆசிரியர்களுக்காக வாதாடியுள்ளார்!அன்னாரின் சட்ட மேலவைப் பேச்சுக்களைத் தாங்கி வெளிவரவிருக்கும் மலரைப் பாருங்கள்.வியப்பும் பெருமிதமும் தோன்றும்
இவர் ஒரு வழக்கறிஞராக இருந்து இவர் வாதாடிய பிரச்சனைகளை வழக்காகக் கருதி ஆசிரியர்கள் பெற்ற பயனை நல்ல நியாயமான தீர்ப்பாகக்
கருதினால் இவருக்கு நாம் செலுத்தியிருக்க வேண்டிய வழக்கறிஞர் கட்டணம் எவ்வளவு வரும் என்று நினைத்துப் பார்த்திருப்போமா? கட்டணம் கொடுத்தோமா? எண்ணிப்பார்ப்போம்.பெற்ற பயனால் நாம்  விடும் நிம்மதிப் பெருமூச்சு- மகிழ்ச்சி புன்னகை இவையே தனக்கு கிடைத்த கட்டணம் என்று  தானே உள நிறைவு கொள்கிறார்.

                 ஏதோ புகழ்ச்சிக்காக எழுத வேண்டும் .விழா வருவதால் எழுதவேண்டிய கடமை என்பதற்காக எழுதப்படுவது அல்ல இது. உண்மையிலேயே,புரிந்து கொண்டு புகழ்ந்து  பேசினாலும்,புரியாமல் புழுதி வாரித்தூற்றினாலும் ஆசிரியச் சமுதாயத்துக்காக உழைப்பதில் பின் வாங்காமல்,ஆற்றலாய்க் கருத்துக்களை எடுத்துச் சொல்லி சமுதாய மேம்பாட்டுக்குப் பாடுபடும் தலைவர்கள் நம் நாட்டில் பலர் இருக்கிறார்கள்.அவர்களில் குறிப்பிடத்தக்க சிறப்பானவர்கள் சிலர் இருக்கலாம்.எனினும் நிச்சயமாக இவர்களில் முதல்வரிசையில் முதல் நபராக விளங்கும் தன்மையை தன் ஆற்றல் மிகு செயலால் கொண்டு இருப்பவர்  செ.முத்துசாமி.என்று சொன்னால் நிச்சயம் புகழ்ச்சி இல்லை.உண்மையிது. 

      நாடு விடுதலை பெற்ற  பின்னர் தமிழ்நாட்டில்  ஐந்து ஊதியக்குழுக்களை
நாம் பார்த்துவிட்டோம்.  இவைகளில் முதல் ஊதியக்குழுவைத் தவிர்த்து மற்ற நான்கு ஊதியக் குழுக்களிலும்  ஆசிரியர்களுக்காக  வாதாடி யுள்ளார்  செ.மு.படிப்படியான முன்னேற்றத்தில் நாம் தற்போது குறிப்பிடத்தக்க நிலை
அடைந்துள்ளோம்.


எழுதியவர்:-
வி.வரதராசன்எம்ஏ எம்எட்*
.மேனாள் திருப்பூர் மாவட்டச் செயலர்
.பொன்விழா
மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:-
 செ.வடிவேலு.

No comments:

Post a Comment