Friday 19 June 2020

ஆசிரியர் நலம் காத்தவர் செ.மு_ஆ.சின்னப்பன் நகரச் செயலாளர் மேட்டுப்பாளையம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரத்தில்1969ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நகரக்கிளை பொதுக்குழு கூட்டம் சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.கூட்டத்திற்கு பொதுச்செயலாளர்செ.முத்துசாமி.அவர்கள்வருகை ருகிறார்கள்.இயக்கம்ஒரே அணியில் இருந்தகாலம்.அன்றைய நகரக்கிளை செயலாளர் நானே.கூட்டமுடிவில்செ.முத்துசாமி அவர்கள் இயக்க வளர்ச்சிக்கு நிதி திரட்டுகிறார்கள்.அனைவரும்உள்ளதைஅன்புடன் கொடுக்கின்றனர்.அப்பொழுது ஒரு பெண் ஆசிரியை தன் கையில் நிதியில்லை*வளர்ச்சி நிதிக்காக தன்கைக்கடிகாரத்தை கழற்றிப் செ.மு அவர்களிடம் கொடுக்கிறார்கள். அவரது துணிச்சலானசெயலைப் பாராட்டி கடிகாரத்தை திரும்பிக்கொடுக்கிறார் செ.முஎந்த அளவில் *பற்றும்பாசமும்*ஆசிரியர்கள்செ.மு மீது வைத்திருந்தனர் என்பதை இந்நிகழ்ச்சிஎடுத்துக் காட்டியது.அப் பெண் ஆசிரியைதிருமதி. வி.பரிமளகாந்தம் என்பவராவார்.மற்றெரு சமயம் ஆசிரியர் சங்க விழாவில் பள்ளித்துணை ஆய்வாளர் தமிழ்நாட்டின் கல்வித் துறை செயலாளர் யார்என்று ஒரு கேள்வியைகேட்கிறார்.உடனே ஒருஆசிரியர் எழுந்து திரு.செ.முத்துசாமி என்றுகூறுகிறார் .எந்த அளவில் நமது செ.மு அவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்தார் என்பதற்கு இதுவும் ஒருசான்றாகும்.

            ஆசிரியர்கள் விழிப்புணர்வு இல்லாமல் கல்வித்துறையின் கீழ் இயந்திரம் போல் செயல்பட்ட காலம்.நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் .அவர் தம் கடமைகளை செய்து உரிமைகளைப் பெற, உரிமைக் குரல் கொடுத்து,சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கச் செய்ததின்  மூலம் தமிழ்நாட்டு தொடக்க,உயர் தொடக்க,உயர்நிலைப் பள்ளி ஆசிரியரகளின்
நன் மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்றவர்  செ.மு.தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணிபாதுகாப்பிற்காக செ.மு அயராது உழைத்து பல வெற்றிக்களைக் கண்டார்.மேட்டுப்பாளையம் மகாஜன தனியார் பள்ளி நிர்வாகம் ஆர்.டி.கிருஷ்ணசாமி என்ற ஆசிரியரை தக்க காரணம் ஏதுமின்றி நிரந்தரப் பணிநீக்கம் செய்தது மூன்றாண்டு காலமாக சம்பளமே இல்லாமல் தனித்துப் போராடி வந்த அவர்,தம் பிரச்சனையை மேட்டுப்பாளையம் நகரக் கிளை மூலம் நமது பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்களிடம் ஒப்படைத்து நீதி கிடைக்கவும்,தனியார் பள்ளி பணிப்பாதுகாப்பு கிடைக்கவும் கோரிக்கையாக வைத்தார்.


1975 ஆம் ஆண்டு மே மாதம் நமது பொதுச்செயலர்செ.மு அவர்கள் மேட்டுப்பாளையம் நகரத்தில் சுமார்  22 நாட்கள் முகாமிட்டு மேற்படி ஆசிரியரின் பிரச்சினைக்குத் தீர்வு காண உண்ணாவிரதம்,தெருத்தெருவாக  ஊர்வலம்,நிர்வாகிகள் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்,போன்ற அறப்போராட்டத்தை நடத்தச் செய்தார்.போராட்ட இறுதியில் மகாஜன நிர்வாகத்தில் இருந்த காட்டூர் பள்ளியை 01-06-1975 முதல் நகராட்சி நிர்வாகம் ஈர்ப்பு செய்ய அரசு உத்தரவிட்டது  பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஆர்.டி.கிருஷ்ணசாமி அவர்களுக்கு அதே பள்ளியில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு 01-06-1976ல்  வேலைகிடைத்தது இது ஒரு மாபெரும் வரலாற்று சாதனை  அல்லவா? இவரது முயற்சியையும், திறமையையும், சர்வ கட்சியினரும் அனைத்து தொழிற்சங்கங்களும், பொதுமக்களும்,ஆசிரியர்களும் வெகுவாக பாராட்டிப் புகழ்ந்தனர். 

 இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்கள்1968முதல் இன்று வரை 25 ஆண்டுகளுக்கு மேல் *தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின் *பொதுச் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றியதை சிறப்பிக்கும் வகையில் வெள்ளிவிழா 07-10-95ல் ஆசிரியர் பேரினம் கொண்டாடுகிறது.இந்த நல்ல நாளில் செ.மு. என அன்பாக அழைக்கப்படும் நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி.அவர்கள் நற்சுகத்துடன். நீண்டநாள் வாழ்ந்து ஆசிரியர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்ற அருள வேண்டும் என்று
இறைவனை வேண்டுகிறேன்,நல்வாழ்த்துக்களையும் நன்றியையும் காணிக்கையாக்குகிறேன். 

எழுதியவர்:-
ஆ.சின்னப்பன்
நகரச் செயலாளர்
மேட்டுப்பாளையம்.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:-
செ.வடிவேலு.

No comments:

Post a Comment