Thursday 18 June 2020

சத்தியத்தின்பாதையில் செ.மு*_எம்.அல்போன்ஸா முன்னாள்மாவட்டச் செயலாளர். சிவகங்கை மாவட்டம்.

சத்திய மனிதனின் வாழ்வில் சோதனைகளும் துன்பங்களும் நீக்கமற நிறைந்து நின்றாலும், அவன் ஒரு நாளும் துவண்டு விடுவதில்லை.அவன் கொண்ட இலட்சியத்தில் எதிர்ப்படும் இடையூறுகளையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையில் பயணிக்கிறான். என்னைப் பெற்று வளர்த்தவர்களும்,என்னைப் பயிற்று வித்த ஆசான்களும், எனக்கு வழிகாட்டிகளாக  நான் ஏற்றுக்கொண்ட தலைவர்களும் சத்தியம் என்பதையே எனக்கு உயிர் மூச்சாக அளித்து விட்டார்கள் என்பதால் எனது 61 வது வயதிலும் எனக்கென்று நான் அமைத்துக் கொண்ட பாதைகளிலிருந்து இம்மியளவுகூட நான் நெறி பிறழ்ந்தது இல்லையென நெஞ்சுயர்த்திக் கூற முடியும் இந்தக் கண்ணோட்டங்களின் அடிப்படையில் தான் நான் சாரவேண்டிய இயக்கமாக*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியைக் கண்டு கொண்டேன். இயக்க நிறுவனர் மாஸ்டர்இராமுண்ணி
அவர்களின் காலத்தில்  *இயக்கம் ஒரு வீச்சைப் பெறவில்லை*1946ஆம் ஆண்டிலேயே இந்தவொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டாலும் வளர்ச்சி என்பது ஆமை வேகமாக இருந்தது.*சொல்லில் வல்லவன்*,சோர்விலான்,செயல்மறவன் தற்போதைய இயக்க வெள்ளிவிழா நாயகன் செ.முத்துசாமி.அவர்கள் பொறுப்பேற்ற பின் தான்,இயக்கம் இயக்கமாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் இதயங்களில் ஊடுருவிய சங்கமாக உருவெடுத்தது.மாநிலம் முழுமைக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் இதயங்களில் இந்த இயக்கம் எவ்வாறு அசுர வேகத்தில் கொலுவேறி யதோ அதே வேகத்தில் உடைவையும் சிதைவையும்  ஏற்றுக் கொள்ள வேண்டிய போட்டியும் பொறாமையும்,சுயநலமும் இயக்கத்தில் இழையோடியது.இயக்கத்தை அரசியல் கண்ணோட்டத்தில் கொண்டு செல்லத் துடித்தார்கள்,பதவி ஆசைகளால் இயக்கத்தைக் கூறுபோடத் துடித்தார்கள்,இயக்கத்தை வைத்துப் *பணம் பண்ணலாம்*என்று கணக்கு போட்டவர்கள் என்பதாகப் பல்வேறு கால கட்டங்களில் தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்த இயக்கத்தை கூறு போட்டார்கள்.இவ்வாறு கூறு போட்ட நிலையிலும் *சோர்ந்து விடாமல்*சோரம் போய் விடாமல் தனக்கென்று அமைத்துக் கொண்ட இலட்சிய வேட்கைகளிலிருந்து சிறிது கூட நெறி பிறழ்ந்து விடாமல் தாக்கு பிடித்தவர் தான்

     இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் திருமிகு செ.முத்துசாமி.அவர்கள்.பள்ளிப் பணிகளில் நம் சத்தியசித்தாதங்களைப் புகுத்தினால் போதும் என்று பணியாற்றிக் கொண்டிருந்த நான்,காளையார் கோவில் வட்டாரத்தில் ஊடுருவிய இயக்க அலங்கோலங்கள் காரணமாகவும் சத்தியபபாதைகளை மறந்து சர்வ சாஷ்டாங்கமாகப்பரணி பாடும் அவலங்கள் ஊடுருவி நின்றதன் காரணமாக வரும்,ஒரு இயக்கத்திற்குள் நுழைய வேண்டிய நிர்பந்தத்தற்கு ஆளானேன்.திக்கு தெரியாத காட்டில் திசை திருப்பிவிட்டது போல் ஒரு கூட்டம் தவித்து நின்ற போது நான் அவர்களுக்கு தலைமை ஏற்க வேண்டியதாயிற்று. அப்பொழுது நான் சார்வதற்கும் என்னைப்
பின்பற்றி நிற்பவர்கள் சார்ந்து கொள்வதற்கும் நான் கண்டெடுத்த முத்து தான் தானைத் தலைவன் செயல்மறவன்செ.முத்துசாமிஅவர்களைப் பொதுச்செயலாளராக் கொண்ட *தமிழ்நாடு  ஆசிரியர் கூட்டணி* தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தான் அங்கம் வகிக்க வேண்டுமெனத் தேர்ந்தெடுத்தது ஏன்?பிற இடங்களில்,இயக்கத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்காட்டிய சோமாறி களிடம் என்ன இருந்தது?  கையூட்டு பெறுவது தொழிலாக இருந்தது! இயக்கப் பொறுப்பாளர்களே அலுவலர்களுக்கு இடைத்தரகர்களாக இயங்கும் அவலம் இருந்தது. இயக்கம் என்ற பெயரால் ஆசிரியர்களையே சுரண்டித்தின்னும் அசிங்கம் இருந்தது. இதன் காரணமாக ஆசிரியர்களின் சுயமரியாதை சீரழிந்து மீண்டும் ஒரு அடிமைகள் கூட்டம் இயக்கங்களில் ஊடுருவி நின்றது. இவை எல்லாம் தவிர்த்து நின்ற இயக்கமாக இயக்கத்தை வளர்த்து வந்த கட்டிக்காத்த சத்தியசீலனாக மதிப்புமிகுசெ.முத்துசாமி ExM.L.Cஅவர்கள் என் கண்முன்னே நின்றார்.
                  ஆதலின் அவ்ரில் நானும் என்னைப் பின்பற்றி நின்ற அப்பாவி ஆசிரியர்களும் அவரின் தலைமையின் கீழ் இயங்கிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் சங்கமித்தோம். நான் இயக்கத்தில் இருந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் தான் ஆறு ஆண்டுகள் காளையார் கோவில் வட்டாரசெயலாளர் ஆறு ஆண்டுகள் சிவகங்கை மாவட்டச் செயலாளர். இந்த பன்னிரெண்டு ஆண்டுகளிலும் எந்தவொரு ஆசாபாசங்களுக்கும் ஆட்பட்டு விடாமல் நான்
அணிந்து கொண்ட கதர் ஆடைகளில் மாசு படாமல் ஆசிரியர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன்.

         என்னைச் சார்ந்திருந்தவர்களை சுய சிந்தனை உள்ளவர்களாகப் பழக்கியிருக்கிறேன். அன்பும் நட்பும்,உற்றார் உறவினர் உறவும் இயக்கத்தில் இழையோடச் செய்திருக்கிறேன். ஏனேனில் ஆசானாக இன்றிப் பழகுவதும்,
அந்தப் பழக்கத்தால் அவரிடம் பயிலும் மாணவர்கள் அவ்வாறு உருவாவதும் நிகழ்ந்து விட்டால் சத்தியம் காக்கும் சமுதாய மாற்றம் நிகழ்ந்து விடும்.இது நிகழ்ந்திட ஆண்டுகள் பலவாகலாம்.ஆண்டு கள் பலவாயினும் சமுதாயத்திற்கு எது தேவையோ அந்த சத்தியம் கிடைக்கிறது. என்பதை எண்ணும் போதும்அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை விட வேறு என்ன கிடைக்கிறது?மேற்கண்ட எனது சத்திய சமுதாய மாற்றச் சிந்தனைக்கு வழிகாட்டி யார்? அவர் எனக்கு இளவலாக இருந்தாலும் என் கொள்கைக்கு மூத்தவர் கொள்கை மறவன் செ.முத்துசாமி* அவர்கள் இயக்கப் பணியில் வெள்ளிவிழா க் காணும் அவரின் சித்தாந்தங்களே சத்திய சமுதாயம் கிடைக்க ஒரு வழியாகும். ஆனால் தற்போதைய நிலை என்ன? பதவி வேண்டும் என்று எண்ணிய வர்கள் எல்லாம், இயக்கம் கண்டு விட்ட அவலம். ஊழலுக்கு வித்திடும் உருப்படாத போக்குகள்  கொடுப்பதைக் கொடுத்து பெறுவதைப் பெறுகின்ற கேடுகெட்ட இயக்க சித்தாந்தம்.இயக்கங்களில் மேலோங்கி நிற்கின்றன இடைத்தரகுச் சிந்தனை சுயமரியாதைகளை அடகு வைத்து.நிற்கும் மேம்போக்குக்குப் பார்வை.சுயநலச் சிந்தனைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கும்*சுரண்டல்  சிந்தனை*இவைகளே. இந்த அவலங்கள் அனைத்தும் அகன்றால் மட்டுமே சத்தியத்தின் பாதையில் இயக்கம் இருக்கும்.அந்த இயக்கத்தை நாம் கண்டாக வேண்டும்.அப்படியேன்றால் மேற்கண்ட தீயதுகள் அகற்றி தமிழக ஆசிரியர்களிடையே* நல்லதுகளைக் கொண்டு வரக்கூடிய ஒரே சக்தி எங்கே இருக்கிறது? 

        அஃது நம் பொதுச்செயலாளர் திருமிகு செ.முத்துசாமி.அவர்களிடமே என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து செயல்பட்டால் இயக்கம் சத்தியத்தை.நோக்கி என்பது நிதர்சனமாகும். வெள்ளிவிழாகாணும் கொள்கைக்குன்றை நீதியின் காவலனை* அடலேறு மறவனை பொதுச்செயலாளர்செ.முத்துசாமிஅவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
                             இதுவரை காத்து வந்த  சத்தியத்தை என்றும் காத்து சத்திய சமுதாய  மாற்றம் கட்டிட ஆசிரியர்களை பயிற்று விக்க வேண்டுகிறேன்.
சத்தியசித்தாந்தங்களுக்குத் தான் இறுதி வெற்றி ஆதலின் எந்த நிலையிலும் மாறி விடா மல்சத்திய பாதையில் இயக்கம் வளர்த்து சமுதாய மாற்றத்திற்கு
வித்திடவேண்டுகிறேன்.  ஆசிரியர் சமுதாயம் சத்தியத்தை நோக்கட்டும்.அதன் வழியாக சமுதாய மாற்றங்கள் பூத்து மலர்ந்து  *நறுமணம்
வீசட்டும்*

எழுதியவர்:-எம்.அல்போன்ஸா
முன்னாள்மாவட்டச் செயலாளர்.
சிவகங்கை மாவட்டம்.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:-செ.வடிவேலு

No comments:

Post a Comment