Monday 8 June 2020

நினைத்துப் பார்க்கிறேன் செ.மு.வின் சேவையை

நினைத்துப் பார்க்கிறேன்.இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். கல்வி வளர்ச்சிக்காகவும், ஆசிரியர்களின் வேலை பாதுகாப்பிற்காகவும், மாஸ்டர் இராமுண்ணி அவர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
இயக்கநிறுவனராக இருந்து செயல்பட்ட காலத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் சேந்தமங்கலத்தில் கண்டெடுத்த விலை மதிக்க முடியாத முத்துதான் செ.மு. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை சந்தித்து ஒன்று சேர்த்து
சங்கம் அமைத்து பல மாநாடுகள்,சைக்கிள் பேரணிகள், பல கொள்கை போராட்டங்களை துணிந்து நடத்திய காலங்களில் அம்மனிதர் அனுபவித்த
தொல்லைகள், அப்பப்பா! எத்தனை துரோகங்கள்,  இதன் மூலம் அவருக்கு எத்தனை அனுபவங்கள் எத்தனை ஆதரவுகள், இடை இடையே எத்தனை எதிர்ப்புகள்  இத்தனைக்கும் பின்னால் அவர் அடைந்த வெற்றியை நினைக்கும் போது எத்தனை களிப்பு.

இந்த இயக்கத்தின் வளர்ச்சியும்,வரலாறும், இயக்கத்தின் தோற்றம், தோற்றுவிக்க வேண்டிய சூழ்நிலை,தொடர்ந்த சூழ்நிலைகள்,அடைந்த வெற்றிகள்.இவை தொடர்கதையாக வளரும். 


மாஸ்டர் இராமுண்ணி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, அவருக்குப் பின் ஆசிரியர் சமுதாயத்தால் பாராட்டப்பட்ட செயல்வீரர் செ.முத்துசாமி அவர்களின் வளர்ச்சியை,புகழை ஜீரணிக்க முடியாத அன்றைய அரசும்,அதிகாரிகளும், பலஹுனமான நம் ஆசிரிய சகோதரர்களை பயன்படுத்தி சங்கத்தை உடைப்பதில் ,மகிழ்ச்சியடைந்ததையும்,சங்கம் பிளவுபட்ட பின்பு செ.முத்துசாமியின் வளர்ச்சி, மேலும் மேலும் உயர்ந்து உயர்ந்து மேலவை உறுப்பினராக(M.L.C.)அமர்ந்து சிம்மக்குரலுடன் ஆசிரியர்களுக்காக,  பல பிரச்சனைகளை எழுப்பி எல்லோரின் அன்பைப் பெற்று, அவரின் அணுகுமுறையை எல்லோரும் பாராட்டி மகிழ்ந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன்.

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களை பொதுச்செயலாளர் என்ற முறையில் மாஸ்டர் இராமுண்ணி அவர்களுடன் சென்று சந்தித்துப் பேசிய பேச்சுக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தது.

தனியார் பள்ளி நிர்வாகிகளைப் பற்றி,ஆசிரியர்களது ஊதியம்,நிர்வாகச் செலவு,பர்னிச்சர் கிராண்ட் எல்லாம் அரசு கொடுக்கும் போது,பள்ளியை சுத்தம்  செய்வதற்கு வருடத்தில் ஒரு தடவை சுண்ணாம்பு அடிப்பதற்கு நிர்வாகி என்ற ஒருவர்,இம்மாதிரி பள்ளிகளுக்கு எதற்கு?
என்று கேட்டார்.தனியார் பள்ளியின் நிலையையும் பள்ளி நிர்வாகத்தில் நிர்வாகிகளுக்குள்ள பொறுப்பைப் பற்றியும் அறிஞர் அண்ணா அவர்கள் ஆழ்ந்த கவனம் செலுத்துவதைக் கண்ட நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமிஅவர்கள் அன்று முதல் இன்று வரை தனியார்  பள்ளி ஆசிரியர்களுக்கு அவர் சேவை செய்து வெற்றி வாகை சூடிய நிகழ்ச்சிகளை மறக்கமுடியுமா? மறுக்கத்தான் முடியுமா!

மேலவை(M.L.C)உறுப்பினராக இருந்த காலம் எல்லாம் ஆசிரிய சமுதாய வளர்ச்சிக்காகவே செயல்பட்டார் என்பதை எல்லோரும்ஒப்புக் கொண்டுள்ளனர்.அன்றைய முதல்வர்களாக இருந்த டாக்டர் கலைஞர்புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்*  ஆகியோரிடம் நயமாக  அவருக்கே உரித்தான வழியில்,ஆண்மையுடன் சந்தித்து வாதாடிய விதம்,அணுகுமுறைகளை பாராட்டாதவர்களே கிடையாது.அவருடைய
பேச்சு ஆற்றலை பாராட்டாத உறுப்பினர்களோ அமைச்சர் பெருமக்களோ,அதிகாரிகளோ இல்லையென்று துணிந்து கூறலாம்.இவருடன் சரஸ்வதி இருப்பதாலோ,என்னவோ இம்மனிதர் எந்தக் காரியத்தையும் பேச்சாற்றிலினால் சாதித்து வருகிறார்.இவரின் ஆற்றல் தமிழகத்தில் மட்டுமல்ல டில்லி வரை  சாதனையாளன் செயல் வீரன் என்ற புகழ் உண்டு.

1981மார்ச்12ம் நாள் டில்லியில் பாரதப் பிரதமரிடம் கோரிக்கை வைத்து வெற்றி கண்ட காட்சி 2500ஆசிரியர்களை சந்திக்க வைத்து பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி,உடன் புகைப்படம்,எடுத்து மாநாடு நடத்திய காட்சி களையும் நினைத்துப் பார்த்து மகிழ்கிறோம்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் சமுதாய வரலாற்றிலும், கல்விவரலாற்றிலும்,சங்கவரலாற்றிலும்முத்திரை பதித்தவர் *நம் பொதுச்செயலாளர் செ.முத்துசாமி* சங்கம் உடைந்து பிடித்தவுடன் வரலாற்று
சிறப்பு மிக்க தென்மண்டலமாநாட்டைநடத்தி மாண்புமிகு அமைச்சர்கள் நாஞ்சிலார்*அவர்களையும், அரங்கநாயகம் அவர்களையும்,மேதகு மேயர் முத்து அவர்களையும் அழைத்து சங்க வரலாற்றின் பெருமையை உயர்த்தி
காட்டியவர் நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி

இயக்க வளர்ச்சிக்கு அன்று தென்மண்டலத்தில் உதவிய *மறைந்த பெரியவர் பெரியகுளம் வெள்ளைச்சாமி*அவர்களையும்,போடி பொன்னையா அவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.திரு.செ.முத்துசாமி அவர்களின் வளர்ச்சியையும்,,புகழையும்,செயல்பாடுகளையும்ஜீரணிக்க முடியாதவர்கள் திசைமாறி சென்றதையும்,சென்றவர்கள் உணர்ந்து தன் இருப்பிடம் நோக்கி வந்ததையும்,இனியும் வந்து கொண்டிருப்பவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். குறைகளைக் கூறிக்கொண்டே குற்றம் பார்த்து தேடித் திரியும் கோமாளித் தலைவர்கள்*கோர்ட்டுக்கு சென்று தோல்வி அடைந்தவர்கள்*.

கணக்குகேட்டவர்களின் காலத்தையும்,நம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முதல் தலைவர் திரு.கு.இரத்தினம் முதல் இன்றையக் தலைவர் திரு.இ.ம.வேலுசாமி வரை சாதித்த வரலாற்றையும்,இடையே வந்த தலைவர்களின் பலம் பலஹீனத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.

நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்களுக்கு நட்புச் செல்வம் மிகுதி,*கலைஞர்கள், அறிஞர்கள்,வணிகர்கள் அரசியல்வாதிகள் என்று*எல்லாத் துறையிலும் இன,மொழி வேறுபாடின்றி அவர்களுக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு.

இவரிடம் ஆணவம் இருந்தது ஆடம்பரம் இல்லை,தாராளம், பண்பு இருந்தது,படாடோபம் இல்லை,பண்பு இருந்தது,பகைமை இல்லை. கூட்டங்களில் திரு.செ.முத்துசாமி அவர்களின் நினைவாற்றல் அபாரமானது.இனிமையாகப்பேசுவார், கருத்தளவில் அழுத்தம் குறையாதுஆசிரியர்களிடையே அவர் குலவிளக்கு,வருங்கால தலைமுறைக்கு உணர்வு ஊற்றாக அவர் வழிகாட்டிக் கொண்டிருப்பார்.அவரின் சேவைகளைப் போற்றும் வகையில்  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஔபொன்விழா மாநாட்டில்,*மாமனிதர் செ.முத்துசாமியின் தொடர் பணிக்கு வெள்ளிவிழா*கொண்டாடுவது நம் சிந்தனைகளை மேலும் குளிரச்செய்கிறது.அவரின் புகழ் சொல்லச் சொல்ல விரிவடைந்து கொண்டே போகும்.அந்தச் சிந்தனையிலேயே நான் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் அங்கத்தினராக இருப்பதில் பெருமைப் படுகிறேன்.

*முத்துசாமி பல்லாண்டு வாழ்க!*
வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்.
 நான் ஓய்வு பெற்றும் அவரது
சேவையை நினைத்து
புதுவாழ்வு பெறுகிறேன்
வாழ்க முத்துசாமி
வளர்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


எழுதியவர்:-திரு.சி.வேதகிருபாகரன்*
முன்னால் மாநிலத்தலைவர்.
தகவல்:-செ.வடிவேலு.
(நேற்றைய தொடர்ச்சி) பொன்விழா மலரிலிருந்து..07-10-1995.

No comments:

Post a Comment