Thursday 28 May 2020

செ.மு.சேவை----- " சிந்திக்க ஒரு நொடி"

ஆசிரியர் சங்கம் 1946 ல் தொடங்கப்பட்டது என்றாலும் நமது பாசமிகு அண்ணல் செ.மு.MLC அவர்கள் 1968 டிசம்பர் திங்கள் 29 திண்டுக்கல் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 69 ல் நமது இயக்கத்திற்கு தனிக்கொடி படைத்த இவர் வீ.செல்லப்பனின் மகனாகப் பிறந்த இந்த மண்ணின் மகன்.உழைக்கின்ற ஆசிரிய கூட்டத்திற்கு உணவில்லை- நல்லஉழைப்புக்கு ஏற்றதொரு கூலியில்லை
                பட்டினியால் சாவதுதான் ஆசிரியனின் நிலை- இந்த பாதகத்தைப் போக்கிடவே நாதியில்லை! அழுகின்ற ஏழை ஆசிரியன் கண்ணீர் மாறவில்லை- அது ஆசிரியனுக்குதான் சொந்தம் என்றால் நியாயமில்லை உழைக்காமல் பல கூட்டம் நாட்டிலின்று உல்லாச ஊர்வலம் வருவதேனோ? எல்லோரும் எல்லாமும் அடையும் நிலை வல்லவனே விரைந்துடனே படைத்திடுவாய் உன் படைப்பில் பேதங்கள் இருக்குமென்றால் உன் படைப்பே உலகுக்குத் தேவையில்லை- என வேதனையுடன் ஆசிரியர்களின் இந்த நிலையை எண்ணி இதற்கு ஒரு தீர்வு வேண்டாமா? என எண்ணி பல போராட்டங்கள் செய்து சிறை பல ஏகி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கத்தின் தலைப்பிள்ளையாய் 1982 ல் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அறக்கட்டளை என ஆரம்பித்து இயக்க தலைமை செயலகம் சென்னையில் பிளாக்கர்ஸ் சாலையில் விஜய் காம்ப்ளக்ஸில் ஆசிரியர் கூட்டணி என்ற பெயரில் பொறிக்கப்பட்ட வட்டத்தின் உள்ளே ரோஜாமாலை அமைத்து அதன் உள்ளே திருக்குறள் புத்தகம் திறக்கப்பட்ட நிலை" வளர்க கல்வி" என படைத்த மாவீரன் அல்லவா? நமது பொதுச்செயலாளர் செ.மு.
             இயக்கம் உருவாகி உச்சியைத் தொடுவதற்கான அதன் பலன் உருவாக்கப்பட்ட இந்த உத்தமப் பணியை( ஆசிரியர் இயக்கத்தை) ஆசிரிய இனமே! இனிய இளைஞனே! உன் ஆற்றலை உணராது, அணியை பெருக்காமல் இருப்பதேன்?உன் போன்ற இதயதுடிப்புள்ள இளைஞனே இன்னும் எழுச்சி பெறாது இருப்பது ஏன்? 

இன்னுமா? நீ உணரவில்லை 
உறங்கி கிடக்கும் உன் உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க துடிப்போடு எழுந்திரு! 
உன்னாலன்றோ இந்திய ஆசிரியர் முகமலரவேண்டும்! இன்னுமா உனக்கு புரியவில்லை? 
அச்சம் தவிர்! துணிச்சல் கொள்! சோதனையும் வேதனையும் வித்தாக்கி சாதனைகளையும் வெற்றிகளையும் அறுவடை செய்.

 துடிப்பும், துணிச்சலும் உன்னை உணர்த்தும் இளமை நில்லாது! யாக்கை நிலையாது! உணர்ந்து கொள்இனிய இளைஞனே!
உன் உயர்வின் பயணத்தை( அணியை) உடனே துவக்கிவிடு 
அதனை பெருக்க செய்!
 நீரளவே ஆகுமாம் நீராம்பல்- 
உந்தன் உழைப்பளவே ஆகுமாம் உயர்வு.
நமது இயக்க வரலாற்று சுருக்கம் பட்டியலை படித்துப் பார் 
நமது செ.மு. வரலாற்று படைப்புக்கள் தெரியும்.
மேற்படி வாழ்ந்து வழிகாட்டியவர்தான் செ.மு.MLC. 

அவர் வெள்ளி விழா காணும் இன் நாளில் வாழ்க! வளர்க!! 

அவர் நீண்ட ஆயுள் பெறுக!!! என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.


எழுதியவர்;- திரு.சி.முனுசாமி, செயலர்,
 வேலூர் வட்டாரக் கிளை.
பொன்விழா மலரிலிருந்து.07-10-1995. 
தகவல்:- செ.வடிவேலு.

No comments:

Post a Comment