Sunday 10 May 2020

லட்சம் கேட்ட ஆணையர் செ.மு.விடம் தஞ்சம்...

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டாரத்தில் 1978-79 ஆண்டுகளில் ஆணையாளராகப் பணியாற்றியவர் ஜி.கோவிந்தராமானுஜம் .இவர் ஆசிரியர்களுக்குச் செய்த கொடுமை,இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.லஞ்சம் பெறுவதையே தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தார்.லஞ்சம் தராதவர்களை தரக் குறைவாக நடத்துவதும் பழிவாங்குவதும் இவருக்கு பழக்கமானது.இவரது அபிலாசைகளுக்கு இசைந்து கொடுக்காதவர்களை பணி நீக்கம் செய்தார். இயக்க கிளைப் பொறுப்பாளர்களான திரு.கே.ஜெகநாதன்,திரு.எம்.கஞ்சமலை, திரு.பி.துரைசாமி ஆகியவர்களை நொண்டிக் காரணங்கள்காட்டி தண்டித்தார்.தற்காலிகப்பணிநீக்கம் செய்தார்.
" தான் கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்ற ஆணவப் போக்கில் ஆணையர் ஆடினார்.இவரை அடக்க ஆளில்லை.அடங்கிப் போக ஆசிரியர்கள் தயாரில்லை.ஆணையரின் தொல்லை எல்லை மீறியது.வட்டார எல்லையை தாண்டி மாவட்டத் தலைவர் திரு.கை.சி.கணேசசங்கர்,மாவட்டச் செயலாளர் திரு.ஆர்.வேங்கடராமானுஜம் ஆகியோர் மூலம் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி எம்.எல்.சி.அவர்களுக்குச் சென்றடைந்தது.
                                தன்னைப் பற்றிய புகார் மேலிடம் சென்றதால் ஆணையாளர் அதிகமாக ஆட்டம் போட்டார்.சஸ்பென்சன் செய்யப்பட்டவர்களுக்கு" ஷோகாஸ் நோட்டிஸ்" வழங்கினார்.பொறுமையுடனிருந்த ஆசிரியர்கள் பொங்கி எழுந்தனர். 
         தொடர்உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது.பொதுச்செயலாளர் செ.முத்துசாமி, எம்.எல்.சி, தலைமை வகித்தார்.மாவட்ட ஆட்சி அலுவலகம், அரசு, ஆணையருக்குத் துணை போயிற்று.பொதுச்செயலாளர் மேலவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விளக்கமாக உரையாற்றினார்.முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் பொதுச்செயலாளரை தன் அறைக்கு அழைத்து உண்மை நிலையைக் கேட்டறிந்தார்.அரசு உணர்ந்தது.உரிய நடவடிக்கை எடுக்க முனைந்தது.ஆணையாளரின் வேலைக்கே ஆபத்து வர நேர்ந்தது.அலறித் துடித்து ஆணையர் நமது பொதுச்செயலாளர் காலில் விழுந்து " தஞ்சம்" வேண்டினார்.காடையாம்பட்டி ஆசிரியர்களின் பிரச்சனைகள் அனைத்தும் சுலபமாக, சுமுகமாக முடித்துக் கொடுத்த பின்னர் ஆணையாளர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.காடையாம்பட்டி ஆசிரியர்கள் துன்பக் கடலிலிருந்துகரையேறினர்.துயர் துடைத்தவர்செ.மு. செ.மு.வாழ்க! பல்லாண்டு!!

எழுதியவர்: திரு.மு.கஞ்சமலை.மேனால் வட்டார செயலாளர்.
தகவல்: செ.வடிவேலு.

No comments:

Post a Comment