Monday 3 June 2013

பாலியல் தொல்லைகளை தடுக்க பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள் நியமனம்-


பாலியல் தொல்லைகளை தடுக்க பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள் நியமனம்-

தமிழக அரசுபெண்கள் பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொந்தரவுகளை தடுத்து நிறுத்தும் பொருட்டு, பெண்கள் பள்ளிகளில் ஆசிரியை, தலைமை ஆசிரியை என அனைவரும் பெண்களாகவே நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் பள்ளிகளில் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து மே 28 ஆம் தேதி தமிழக அரசாணை 145 இல் புதிதாக பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவையே பின்பற்றி அரசு ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கின்போது கடைசி நாளில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இனி நடைபெரும் கவுன்சிலிங்களில் அமல்படுத்தப்படும். மேலும் பதவி உயர்வு, புதிய ஆசிரியர்கள் நியமனம், பணி இட மாற்றம் ஆகியவற்றில் இந்த உத்தரவு பின்பற்றப்படும் என்றார். பள்ளிகளில் மாணவிகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகளை தடுக்கும் வகையில் அரசின் இந்த உத்தரவு வரவேற்க கூடியது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment